தினுசு தினுசா விளையாட்டு: இந்த வட்டம், அந்த வட்டம்!

By மு.முருகேஷ்

விளையாடும்போது குழந்தைகளுக்குள் சின்னச் சின்ன சண்டைகளும் நடக்கும். ஆனாலும், அதை அவர்கள் பெரிதுபடுத்த மாட்டார்கள். சண்டை போட்ட சற்று நேரத்திலேயே சமாதானமாகியும் விடுவார்கள். சண்டை போட்டதையே மறந்து, சந்தோஷமாக விளையாடுவார்கள். பார்ப்பவர்களுக்கு ‘இந்தக் குழந்தைகளா சற்று நேரத்துக்கு முன் சண்டையிட்டுக்கொண்டார்கள்?’ என்று வியப்பாக இருக்கும். இதெல்லாம் விளையாட்டுகளில் மட்டுமே நடக்கும் அதிசயம்!

சரி, இந்த வாரம் நாம் விளையாடப்போகிற விளையாட்டின் பெயர் என்ன தெரியுமா?

‘இந்த வட்டம், அந்த வட்டம்…’

தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும் இந்த விளையாட்டை விளையாகிறார்கள். தென் மாவட்டங்களில் இந்த விளையாட்டை ‘கோட்டுக்குள்ளே யாரிருக்கா?’ என்ற பெயரில் விளையாடுவார்கள்.

இந்த விளையாட்டை ஆடத் தொடங்கும் முன், இரண்டு பெரிய வட்டங்களைப் போட்டுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வட்டத்திலும் குறைந்தது பத்துப் பேராவது நிற்கும் அளவில் வட்டங்கள் இருக்க வேண்டும். இரண்டு வட்டங்களுக்கும் இடையில் குறைந்தது ஏழெட்டு அடிகளாவது இடைவெளியை விடுங்கள்.

இரண்டு வட்டங்கள் போட்ட பிறகு, விளையாட்டின் முதல் போட்டியாளரை அனைவரும் சேர்ந்து தேர்வு செய்யுங்கள். (சாட் பூட் திரி, உத்தி பிரித்தல், பூவா தலையா, இதில் ஏதாவது ஒரு முறையில் தேர்வு செய்ய உங்களுக்குத் தெரியும்தானே!)

விளையாட்டுக்கான முதல் போட்டியாளரையும் தேர்வு செய்தாகிவிட்டது. அடுத்து, விளையாட்டை ஆரம்பிக்க வேண்டியதுதான் பாக்கி. விளையாடுவோமா?

l விளையாடுபவர்கள் அனைவரும் சரிசமமாக இரண்டு அணிகளாகப் பிரிந்துகொள்ளுங்கள். இரண்டு அணிகளும் இரண்டு வட்டங்களில் நிற்க வேண்டும்.

l முதல் போட்டியாளர் இரண்டு வட்டங்களையும் சுற்றிச் சுற்றி ஓடி வருவார். அவர் இரண்டு வட்டங்களையும் பத்து தடவை சுற்றி வருவதற்குள், இந்த வட்டத்தில் இருப்பவர்கள், அந்த வட்டத்துக்குள்ளும், அந்த வட்டத்துக்குள் இருப்பவர்கள்

இந்த வட்டத்துக்குள்ளும் ஓடிவந்துவிடுங்கள்.

# இப்படி ஓடும்போது, போட்டியாளர் ஓடுபவரைத் தொட்டுவிட்டால், அவர் ‘அவுட்’ ஆகிவிடுவார். பிறகு, ‘அவுட்’ ஆனவர் வட்டங்களைச் சுற்றி ஓடிவர வேண்டும்.

# போட்டியாளர் ஒரே மாதிரி சுற்றாமல், மாறி மாறி வட்டங்களைச் சுற்றுவார். அந்தப் பக்கம் ஓடுவது மாதிரி போக்கு காட்டி, திடீரென இந்தப் பக்கம் ஓடுவார். அவர் கையில் அகப்பட்டுவிடாமல், வட்டம் விட்டு வட்டம் மாறிக்கொண்டேயிருங்கள்.

# ஒரே வட்டத்துக்குள் நிறைய பேர் நிற்கும் நிலை ஏற்படும்போது, நிற்பவரின் கால் வட்டத்துக்கு வெளியே வந்தால் போட்டியாளர் அவரையும் தொட்டு ‘அவுட்’ ஆக்கிவிடுவார்.

# ஆகவே, போட்டியாளர் சுற்றி வரும்போதே, அவர் கைக்கு அகப்படாமல் சட்டென வட்டங்கள் மாறி ஓடிவிடுங்கள்.

# வட்டத்தைச் சுற்றி ஓடிவரும் போட்டியாளர் கவனிக்காத நேரத்தில், சட்டென வேறு வட்டத்துக்கு வேகமாக ஓடுவது மிகுந்த சுவாரசியமாக இருக்கும்.

இந்த வட்டம், அந்த வட்டம் விளையாட நீங்கள் தயாரா?

(இன்னும் விளையாடலாம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்