மேஜிக்... மேஜிக்... - மாயமாகும் மந்திர மணிகள்

By க.ஸ்வேதா

என்ன குழந்தைகளே, வாரா வாரம் வரும் மேஜிக் வித்தைகளைச் செய்து குட்டி மாயாஜாலக்காரர் ஆகிவிட்டீர்களா? இதோ, இந்த வாரமும் காகிதக் கோப்பையையும் மணிகளையும் வைத்து சுலபமாக மேஜிக் செய்து அசத்துவோமா?

என்னென்ன தேவை?

இரண்டு மணிகள், காகித கோப்பை (பேப்பர் கப்)

மேஜிக் எப்படிச் செய்வது?

ஒரு சிறிய மணியை காலியான காகிதக் கோப்பையில் போடுங்கள்.

மாயமந்திரம் சொல்லி, கோப்பை யைத் திருப்பினால் உள்ளே இருந்த மணி மாயமாகியிருக்கும்.

பின்னர் மாயமான மணியை, உங்கள் சட்டை பாக்கெட்டிலிருந்து எடுத்து அனைவருக்கும் காட்டுங்கள்.

மேஜிக் ரகசியம்:

இந்த வித்தையைச் செய்வதற்கு முன்பு, சிறிய முன்தயாரிப்பைச் செய்ய வேண்டும்.

கத்தரியை எடுத்து, கோப்பையின் அடியில் மணியின் அளவைவிட கொஞ்சம் பெரிதாகத் துளையைப் போட்டுக்கொள்ளுங்கள்.

இரண்டு மணிகளில் ஒன்றை உங்கள் பாக்கெட்டில் வைத்து கொள்ளுங்கள்.

இப்போது கோப்பையைத் திருப்பி, அடியில் இருக்கும் துளையை கையால் மறைத்துக்கொள்ளுங்கள்.

இன்னொரு மணியைக் கோப்பை யின் உள்ளே போட்டு மந்திரம் சொல்வதுபோல பாவனை செய்து, யாருக்கும் தெரியாமல் துளையின் வழியே மணியை அடியில் இருக்கும் கையில் விழவைக்க வேண்டும்.

இப்போது மணியை விரல்களுக்கு நடுவே மறைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்து, கோப்பையைக் கவிழ்த்து மணி மறைந்துவிட்டதாகச் சொல்லுங்கள்.

நினைவு இருக்கட்டும், கோப் பையை யாரிடமும் காட்டக் கூடாது, அடியில் இருக்கும் துளையை எப்போ தும் மறைத்தே வைக்க வேண்டும்.

அடுத்து, பாக்கெட்டில் கைவிட்டு மணியை எடுத்து, உங்கள் மந்திரத்துக்குப் பயந்து பாக்கெட்டில் ஒளிந்துகொண்டதாகக் கூறுங்கள்.

இதுதான் மாயமாக மறையும் மணியின் மேஜிக் வித்தை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்