தினுசு தினுசா விளையாட்டு: நேரம் என்ன கண்டுபிடி?

By மு.முருகேஷ்

“விளையாட்டு எனக்குப் பிடிக்கவே பிடிக்காது” என்று சொல்லும் குழந்தைகள் இவ்வுலகில் யாருமே இருக்கமாட்டார்கள். ஜாலியாக விளையாடும் குழந்தைகளுக்குச் சோர்வே வராது. குழந்தைகளின் விளையாட்டுகள் அவர்களுக்கு மேலும் மேலும் புத்துணர்வையே ஊட்டும்.

ஒவ்வொரு வாரமும் புதுப்புது விளையாட்டுகளை விளையாடிக்கொண்டிருக்கிறோம். சரி, இந்த வாரம் நாம் விரும்பி ஆடும் ஆட்டத்தின் பெயர், ‘நேரம் என்ன கண்டுபிடி?’.

இந்த விளையாட்டை விளையாட குறைந்தபட்சம் ஐந்து பேர் முதல் அதிகபட்சம் இருபது பேர் வரை தேவை.

எப்படி விளையாடுவது?

விளையாடுவதற்கு முன்பு நடுவில் நான்கைந்து பேர் நிற்பதற்கு வசதியாகக் கொஞ்சம் பெரிய வட்டமொன்றை வரையுங்கள்.

பிறகு, அந்த வட்டத்தைச் சுற்றிலும், பத்தடி அளவுக்குத் தள்ளி, ஒருவர் நிற்கும் அளவில் விளையாடுபவர்களின் எண்ணிக்கைக்கேற்ப சிறுசிறு வட்டங்களை வரையுங்கள்.

இந்த விளையாட்டுக்கான முதல் போட்டியாளரைத் தேர்வு செய்வோமா? விளையாட வந்த எல்லோருடைய பெயரையும், தனித்தனித் துண்டுத் தாளில் எழுதுங்கள்.

பிறகு, அவற்றை மொத்தமாகக் குவித்து, அதிலிருந்து ஒரு தாளை மட்டும் எடுங்கள். அதில், யார் பெயர் இருக்கிறதோ, அவரே முதல் போட்டியாளர். (அய், முதல் போட்டியாளரைத் தேர்வு செய்ய இந்த முறை மிக எளிதாக இருக்கிறதே!)

முதல் போட்டியாளர் நடுவிலுள்ள பெரிய வட்டத்தில் நின்றுகொள்ள வேண்டும். மற்ற அனைவரும் சுற்றியிருக்கும் சிறு வட்டத்தில் ஆளுக்கொருவராக நில்லுங்கள்.

இப்போது விளையாட ஆரம்பிப்போமா?

சுற்றியிருப்பவர்கள் அனைவரும் அவர்கள் நிற்கும் சிறு வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள். போட்டியாளர் நிற்கும் பெரிய வட்டத்தைச் சுற்றி நின்றுகொண்டு, பாடியபடி கேள்வி கேளுங்கள். (என்ன கேள்வி என்றுதானே கேட்கிறீர்கள்?)

அனைவரும்: அண்ணே…அண்ணே… மணி என்னாச்சு?

போட்டியாளர்: இப்பத்தான் மணி பத்தாச்சு!

பெரிய வட்டத்தைச் சுற்றி வருபவர்கள், ‘அண்ணே… அண்ணே… மணி என்னாச்சு...?’ என தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க, போட்டியாளரும் ஏதாவதொரு நேரத்தைச் சொல்லலாம்.

ஆனால் போட்டியாளர் திடீரென, “இப்ப நேரம் நள்ளிரவாச்சு” என்று சொன்னால் உஷாராகிவிடுங்கள். எல்லோரும் அவரவர் வட்டங்களுக்கு ஓடிச்சென்று நின்றுகொள்ளுங்கள்.

நீங்கள் ஓடிப் போய் நிற்பதற்குள், போட்டியாளர் வேகமாக ஓடிச்சென்று, யாருடைய வட்டத்திலாவது நின்றுவிட்டால், அவ்ளோதான். வட்டத்தைத் தவறவிட்டவர் ‘அவுட்’. இப்போது ‘அவுட்’ ஆனவர் போட்டியாளராக மாறிவிடுவார்.

அப்புறமென்ன? மீண்டும் விளையாட்டு தொடரும்.

இந்த விளையாட்டில் நேரம் போவதே தெரியாது. ஜாலியாக விளையாடிக் கொண்டேயிருக்கலாம்?

(இன்னும் விளையாடலாம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்