சஞ்சீவ் என்ன ஆனான்?

By செய்திப்பிரிவு

01-10-2014 வெளியான மாயாபஜாரில் ‘பூனையாக மாறிய குட்டிப் பையன்’ என்ற கதைக்கு முடிவு சொல்லுங்கள் என்று குழந்தைகளிடம் கேட்டிருந்தோம். கதைக்குச் சிறந்த முடிவைச் சொல்லியிருந்தார் மாணவி ஒருவர். அந்த மாணவி சொன்ன கதையின் மீதிப் பகுதி இதோ.

அப்ப சஞ்சீவ் திடீரென்று கண் விழிக்கிறான். அம்மான்னு கத்தினான். அம்மா ஓடி வந்து, “ஏன் இப்படிக் கத்துறே, என்னாச்சி சஞ்சீவ்”ன்னு கேட்கிறாங்க. ‘‘ஒண்ணுமில்லைம்மா’’ன்னு சமாளிக்கிறான். அப்பத்தான் சஞ்சீவுக்கு நாம கண்டது கனவுன்னு புரிஞ்சுச்சு. அப்பாடான்னு பெருமூச்சு விட்டு நிம்மதியானான்.

அதன்பிறகுதான் அம்மா, அப்பாவின் அருமை அவனுக்குத் தெரிஞ்சது. இனி பள்ளிக் கூடத்துக்கு ஒழுங்காகப் போய் படிக்கணும், வீட்டுப் பாடங்களை அன்னைக்கே செய்யணும்னு உறுதி எடுத்துக்கிட்டான் சஞ்சீவ்.

ம. ஜெசிரா சிரின், 5-ம் வகுப்பு, கிரஸண்ட் மெட்ரிகுலேசன் பள்ளி, அம்மாப்பட்டினம், புதுக்கோட்டை.

கதையின் முன்சுருக்கம்

சஞ்சீவும், டேமிங்கிற பூனைக்குட்டியும் திக் பிரெண்ட்ஸ். சஞ்சீவுக்கு ஸ்கூலுக்குப் போறது, ஹோம் ஒர்க் செய்யுறதுன்னா ரொம்ப அலுப்பு. டேமி பூனை ஜாலியாக விளையாடுறதைப் பார்த்து சஞ்சீவ் பொறாமைப்படுவான். ஒருநாள், டேமிகிட்ட போய், “என்னை போல நீ மாறிக்கோ. உன்னைப் போல நான் மாறிக்கிறேன்னு” சஞ்சீவ் கேட்டான். சஞ்சீவ் ஷூ, டை கட்டிக்கிட்டு ஸ்கூலுக்கு போறதைப் பார்த்து டேமி பூனை ரொம்ப ஆசைப்படும். நம்மளால இப்படிப் போக முடியலையேன்னு நினைக்கும். அதனால பூனை, சரின்னு உடனே ஒத்துகிச்சு.

இரண்டு பேரும் உருவம் மாறிய பிறகு, பூனையாக இருக்குற சஞ்சீவுக்கு போரடிக்குது. ஒரு வாரம் கழிச்சி நாம திருப்பியும் உருவம் மாறிடலானு பூனைக்குட்டியா இருக்குற சஞ்சீவ், டேமிகிட்ட கேட்கிறான். ஆனால், டேமி முடியவே முடியாதுன்னு மறுத்துடுது. என்ன செய்யுறதுன்னு புரியாம சஞ்சீவ், ‘மியாவ், மியாவ்’ன்னு வீட்டைச் சுத்தி சுத்தி வந்தான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்