இரும்பை ஈர்க்கும் காந்தத்தைப் பார்த்தால் சிறுவர்களுக்கு எப்போதுமே குஷிதான். காந்தத்தை இரும்போடு ஒட்டவைத்து விளையாடுவது சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு விளையாட்டு. இன்னும் சில சிறுவர்கள், இரும்புத் துகள்களைத் தாளில் கொட்டி, தாளின் பின்னால் காந்தத்தை வைத்து, திருடன்-போலீஸ் விளையாட்டுகூட விளையாடுவார்கள். சரி, காந்தத்தை எப்படித் தயாரிக்கிறார்கள்?
காந்தமாக்கப்பட வேண்டிய இரும்புத் துண்டுக்குள் இரும்புத் துகள்கள் தாறுமாறாக இறைந்து கிடக்கும். அதாவது, இரும்புத் துகள்கள் நவக்கிரகம் போல வெவ்வேறு திசையைப் பார்த்துக்கொண்டிருக்கும். இரும்புத் துகள்கள் இப்படித் தாறுமாறாகக் கிடப்பதால் இரும்பு சட்டக் காந்தத்துக்குரிய வடதுருவக் கவர்ச்சி, தென்துருவக் கவர்ச்சி ஆகியவற்றை இழந்து, இரண்டுக்கும் நடுவில் (நியூட்ரல் ஸ்டேஜ்) இருக்கும்.
காந்தம் செய்யலாம்
இந்த இரும்புத் துகள்களை ஒரே திசையை நோக்கி இருக்கும்படி செய்துவிட்டால் போதும், அந்த இரும்புத் துண்டு காந்தாமாகிவிடும். சரி, தாறுமாறாகக் கிடக்கும் இரும்புத் துகள்களை ஒரே திசையை நோக்கி இருக்கும்படி எப்படிச் செய்வது?
# ஒரு கையில் காந்தமாக்கப்பட வேண்டிய இரும்புத் துண்டை எடுத்துக்கொள்ளுங்கள்.
# இன்னொரு கையில் ஒரு காந்தத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இரும்புத் துண்டின் ஒரு முனையில் காந்தத்தை வைத்து மறுமுனைக்கு அழுத்தி நகர்த்துங்கள் (சின்னக் குழந்தைகள் கைகளால் தரைமீது பொம்மை கார் ஓட்டி விளையாடுவது போல நகர்த்த வேண்டும்).
# இப்படிச் செய்யும்போது காந்தம் நகரும் திசையை நோக்கி இரும்புத்துகள்கள் திரும்பும். பின்னர் ஒரே திசையை அடைந்து இரும்புத் துண்டினைக் காந்தமாக்கிவிடும். இப்படி உருவாக்கப்படும் காந்தங்களுக்குச் செயற்கை காந்தம் என்று பெயர். இந்தக் காந்தங்கள் பலவீனமாகவே இருக்கும்.
காந்த மலைகள் உண்டா?
இப்படிப்பட்ட பலவீனமான காந்தங்கள் இயற்கையாகவே பல இடங்களில் பரவிக் கிடக்கின்றன. உலகில் பல ரகசிய இடங்களில் காந்த மலைகள் இருப்பதாகவும், அந்தக் காந்த மலைகள் தங்கள் மேலே செல்லும் இரும்புப் பொருட்களை ஈர்த்துவிடுவதாகவும் கதைகள் உண்டு. உண்மையில் காந்த மலைகள் உலகில் எங்குமே இல்லை.
மலைகளில் இரும்புப் படிவுகள் அதிகமாக இருக்கும் சில பாறைகள், காந்தத் தன்மையோடு காணப்படுகின்றன. மேலே சொன்ன செயற்கை காந்தம் மாதிரி இந்தக் காந்த மலைகளும் மிகவும் பலவீன மானவைதான். இந்த மலைகளால் விமானத்தை எல்லாம் வீழ்த்திவிட முடியாது. ஆனால் “காந்த மலைகள்” என்ற ஒற்றை வரியை வைத்துக் கொண்டு நிறைய கதைகள் வந்து கொண்டிருக்கின்றன.
காந்த விசை
இன்று பெரியபெரிய தொழிற்சாலைகளில் அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குவதற்காக மிகவும் பலமான காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதே சமயம் நம் அன்றாட வாழ்வில் பல இயந்திரங்களைக் காந்த சக்தியில் இருந்து பாதுகாக்கவும் வேண்டியிருக்கிறது. அதனால், காந்த விசைகளால் தாக்கப்படாத சில பொருட்களைக் கொண்டே இயந்திரங்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது.
இதில் இன்னொரு (காந்த ) ஆச்சரியம் என்னவென்றால் (முள்ளை முள்ளால் எடுப்பது போல?) எந்த இரும்பு விரைவில் காந்தமாகிவிடுகிறதோ, அதே இரும்புதான் காந்த விசையைத் தடுக்கும் பொருளாகவும் பயன்படுகிறது. அப்படியா என்று ஆச்சரியப்படாதீர்கள். இரும்பு வளையத்துக்குள் இருக்கும் கடிகார முட்கள், இரும்பு வளையத்துக்கு வெளியே இருக்கும் காந்தத்தினால் பாதிக்கப்படாமல் இருப்பதைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம் !
ஓர் ஆச்சரியம்
காந்தமாக்கப்படாத இரும்புத் துண்டில் இரும்புத்துகள்கள் இறைந்து கிடக்கின்றன என்று சொன்னோம் அல்லவா? இப்படிப்பட்ட சில இரும்புத்துண்டில் உள்ள இரும்புத் துகள்களுக்கு இயற்கையாகவேகூடக் காந்தப்பண்புகளும் இருக்கும்.
இந்தத் தொடரை எழுதும் கட்டுரையாளர் ஆதலையூர் சூரியகுமார் மதுரையில் அரசு பள்ளியின் ஆசிரியர். மாணவர்களுக்குப் புதுமையாகப் பாடம் கற்பிப்பதில் பெயரெடுத்தவர். அறிவியல் தொடர்பாக நூல்களையும் எழுதியிருக்கிறார். ‘காரணம் ஆயிரம்’ என்ற பெயரில் அறிவியல் விஷயங்களை ஒவ்வொரு வாரமும் அலச இருக்கிறார்.
அறிமுகம்
(காரணங்களை அலசுவோம்)
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 mins ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago