தினுசு தினுசா விளையாட்டு: உப்புமூட்டை தூக்கி

By மு.முருகேஷ்

விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்குவதற்கு மட்டுமல்ல. குழந்தைகளின் உடல் ஆரோக்கியமும் சம்பந்தப்பட்டது. விளையாடும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால்தான் மற்றக் குழந்தைகளோடு போட்டியிட்டு உற்சாகமாக விளையாட முடியும். ஓடியாடும் குழந்தைகளுக்கு நன்றாகப் பசியெடுக்கும். பொதுவாகவே, விளையாட்டில் ஆர்வமுள்ள குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

உடல் ஆரோக்கியத்தோடும், நல்ல உடல் வலுவோடும் இருக்கிற குழந்தைகள் மட்டுமே விளையாடக்கூடிய விளையாட்டுகள் பல இருக்கின்றன. அதில் ஒரு விளையாட்டுதான் ‘தூக்குத் தூக்கி’. இந்த விளையாட்டை ‘உப்பு மூட்டை தூக்கி’ என்றும் சொல்வார்கள்.

இந்த விளையாட்டை எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் சேர்ந்து விளையாடலாம். விளையாடும் குழந்தைகளின் எண்ணிக்கை இரண்டு இலக்க எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

இரண்டு குழந்தைகள் சேர்ந்த ஓர் அணிக்கு ‘ஜோடி’ என்று பெயர். இந்த ஜோடிகள் ‘உத்தி பிரித்தல்’ மூலமாகச் சேர்வார்கள் அல்லது அவரவர்க்கு மிகவும் பிடித்தவருடன் சேர்ந்துகொண்டும் ‘ஜோடி’அமைத்துக்கொள்ளலாம்.

விளையாடும் குழந்தைகள் அனைவரும் ‘ஜோடி’யாகச் சேர்ந்த பிறகு, விளையாட்டைத் தொடங்கலாம்.

# விளையாட்டு தொடங்கும் இடத்தில் ஒரு தொடக்கக் கோடு போட்டுக்கொள்ளுங்கள். அந்தத் தொடக்கக் கோட்டின் மேல் அனைவரும் காலை வைத்துக்கொண்டு, விளையாடத் தயாராக நில்லுங்கள்.

# விளையாட்டு தொடங்கும் இடத்திலிருந்து 50 அடி அல்லது 60 அடி தூரத்தில் ஓர் இலக்கைக் குறித்துக்கொள்ளுங்கள்.

# ‘ரெடி’ என்று சொன்னதும், நேர்க்கோட்டில் நிற்கும் ஜோடியில் ஒருவர் குனிந்துகொள்ள, அவரின் முதுகின்மேல் இன்னொருவர் உப்பு மூட்டையாக ஏறிக்கொள்ளுங்கள். (அதாவது, குனிந்துகொண்டவர் முதுகில் ஏறி, கழுத்தை இரு கைகளாலும், அவரது இடுப்பை இரு கால்களாலும் பின்னிக்கொள்ள வேண்டும்).

# தனது ஜோடியை உப்பு மூட்டையாகத் தூக்கிக் கொண்டவர், அப்படியே இலக்கை நோக்கி வேகமாக ஓடுங்கள். இலக்குக் கோட்டைத் தொட்டதும், அப்படியே உப்பு மூட்டையை மாற்றிக்கொள்ளுங்கள்.

# என்ன புரியலையா? உப்பு மூட்டையாக முதுகில் ஏறியிருந்தவர் குனிந்துகொள்ள, குனிந்து இருந்தவர் உப்பு மூட்டை ஏறிக்கொள்ள வேண்டும்.

இப்போது இலக்குக் கோட்டிலிருந்து தொடங்கிய இடத்தை நோக்கி, மறுபடியும் ஓடி வாருங்கள்.

# இதில், முதலில் ஓடி வரும் ஐந்து ஜோடிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். சில நிமிட இடை வெளிக்குப் பிறகு, முதல் ஓட்டத்தில் தேர்வான ஐந்து ஜோடிகளை மீண்டும் விளையாட வையுங்கள். இதில், முதலில் வரும் ஜோடியே வெற்றிபெற்ற ஜோடி.

உப்பு மூட்டையைத் தூக்கிக்கொண்டு ஓடும்போது, உப்பு மூட்டையாக முதுகில் இருப்பவரின் கால்கள் தரையைத் தொட்டுவிட்டாலோ அல்லது நழுவிக் கீழே விழுந்துவிட்டாலோ அந்த ஜோடி ‘அவுட்’.

என்ன குழந்தைகளே விளையாடத் தயாரா? உடலில் வலுவும், மனதில் தைரியமும் இருந்தால், எல்லா விளையாட்டுகளையும் ஒருமுறை ஆடி பார்த்துவிட வேண்டுமென்கிற ஆசை எல்லாருக்குள்ளும் இருக்கிறது அல்லவா?!

(இன்னும் விளையாடலாம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்