வாங்க, நிலவுக்குப் போகலாம்: நிலாவைச் சுத்திப் பார்க்கப் போறேன்!

By ஜி.எஸ்.எஸ்

நீங்க சைக்கிளிலே போயிருப்பீங்க, ஆட்டோவிலே போயிருப்பீங்க, காரிலும் விமானத்திலும்கூடப் போயிருக்கலாம். ஆனா, விண்கலத்திலே ஏறி நிச்சயம் போயிருக்க மாட்டீங்க. அப்படி ஒரு அனுபவத்துக்குத் தயாராயிட்டீங்களா? நம்ம பூமிக்கு நிலவு எப்பவுமே ஸ்பெஷல்தான். சில ராத்திரிகளிலே அழகா ஒளி தரும். சில ராத்திரிகளிலே வராமல் கண்ணாமூச்சி விளையாடும்.

‘பூமியோட ஒரே துணைக்கோள் நிலவு’ன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள். சூரியகாந்தி எப்பவுமே சூரியனைப் பார்க்கிற மாதிரி நாமும் நிலவோட ஒரே பாதியைத்தான் பார்த்துக்கிட்டிருக்கோமாம். சரி, தயாராயிட்டீங்களா? என்ன இது, வழக்கமான உடையிலே வந்திருக்கீங்க? நிலவுக்குப் போகணும்னா ஸ்பெஷல் விண்வெளி உடையை உடுத்திக்கணும். அப்புறம் பிராணவாயு அடங்கிய சிலிண்டரையும் எடுத்துக்கணும்.

‘ஆப்பிள், கேக், சான்ட்விச், தண்ணி, ஜுஸ் எல்லாம் கொண்டு வந்திருக்கிறேனே. இதையெல்லாம் என்ன செய்ய?’ன்னு கேக்கறீங்களா? கையோட எடுத்துக்குங்க. வழியிலே சாப்பிட்டுக்கலாம். அதிக தூரம் இல்லை. சுமார் 3,84,400 கி.மீ தான் பயணம் செய்யப் போறோம்!

ஐயோ மாசக்கணக்கிலே ஆகுமேன்னு கவலைப்பட வேணாம். நாம மணிக்கு 6,000 கி.மீ வேகத்திலே போகப்போறோம். போயிட்டு இரண்டரை நாளிலே திரும்பி வந்திடலாம். சென்னையிலிருந்து டெல்லிக்கு ரயிலில் போயிட்டு வரதுன்னாக்கூட இதைவிட அதிக நாளாகும்தானே? (அதுக்காக டெல்லியைவிட நிலவு கிட்டே இருக்கான்னு கேட்கக் கூடாது!) நம்ம பூமிக்கும் நிலவுக்கும் நடுவிலே உள்ள இடைவெளியிலே முப்பது பூமிகளை அடுத்தடுத்து வைக்கலாம்!

நிலவுக்குப் போக அமெரிக்காவின் அனுமதி தேவையான்னும் நினைக்காதீங்க. இதுவரை அந்த நாட்டுக்காரங்கதான் நிலவுக்குப் போயிருக்காங்க. அங்கே ஆறு தடவை அமெரிக்கக் கொடியை ஏத்தியிருக்காங்க. ஆனாலும், நிலவு அமெரிக்காவுக்குச் சொந்தமானதில்லை. 1967-ல ஒரு சர்வதேச விதி உருவானது. அதன்படி எந்தக் கிரகத்துக்கும் எந்த நட்சத்திரத்துக்கும் விண்வெளியிலே இருக்கிற எந்த இயற்கையான பொருளுக்கும் எந்த நாடும் சொந்தம் கொண்டாட முடியாது.

அதனாலே நிலவுக்குப் போக எந்த பாஸ்போர்ட்டும் விசாவும் தேவையில்லே. விண்கலத்திலே ஏறிட்டீங்களா? நல்லா அழுத்தமா தாழ்ப்பாளைப் போட்டுக்கங்க. விளக்குகளை எரியவிடுங்க. திரையிலே 10..9..8.. என்று எண்கள் குறைஞ்சுகிட்டே வருதா? இதைத்தான் ‘கவுன்ட் டவுன்’னு சொல்வாங்க. எண் குறைந்து குறைந்து 0-க்கு வரும்போது விண்கலத்தைச் சுமந்திருக்கும் ராக்கெட் சும்மா ஜிவ்வுனு மேலே மேலே கிளம்பும்.

7..6..5..4..3..2..1..0

இதோ கிளம்பியாச்சு உங்க விண்கலம். உங்க உடம்பு அப்படியே இருக்கையிலே அழுத்தமா ஒட்டிக்கிது இல்லையா? உங்க உடம்பு ரொம்ப கனமாயிட்ட மாதிரி ஓர் உணர்வு வருதா? கவலைப்படாதீங்க. அப்படித்தான் இருக்கும். கொஞ்ச நேரத்திலே சரியாயிடும்.

ஜன்னல் கதவு வழியாப் பார்த்தால் மேகங்கள் தெரியுதா? காத்து புலப்படுதா? கொஞ்சம் தூசுப் படலத்தைக் கூடப் பார்ப்பீங்களே? இதெல்லாம் சில நொடிகளுக்குதான். அதற்குள் விண்வெளி வந்துடும். இதோ வளிமண்டலத்தைத் தாண்டிக்கிட்டிருக்கோம். போகப் போக நீங்க நினைச்சுப் பார்க்காததையெல்லாம் பார்க்கப் போறீங்க.

(பயணம் தொடரும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்