தலைப்பைப் படித்ததும், என்னடா விளையாட்டு சொல்லித் தருவதாகச் சொல்லிட்டு, சினிமா பாட்டு பாடுவதாக நினைக்கிறீர்களா? இதுவும் விளையாட்டுத்தான். உங்க தாத்தா, பாட்டி சின்ன வயதில் விளையாடி மகிழ்ந்த ஒரு விளையாட்டின் பெயர்தான். அந்த விளையாட்டைத்தான் இந்த வாரம் விளையாடப் போகிறோம். என்ன, எல்லாரும் ‘கோழி பற… பற… வாத்து பற… பற…’ விளையாடத் தயாரா?
விளையாடுவது எப்படி?
இந்த விளையாட்டை எல்லோருமே ஒன்றாகச் சேர்ந்து விளையாடலாம். சிறிய குழந்தைகள்,பெரிய குழந்தைகள் என்று பேதமெல்லாம் இல்லை. எல்லாக் குழந்தைகளும் ஒரே இடத்தில் உட்கார்ந்து விளையாடக்கூடிய விளையாட்டு. சரி, எப்படி விளையாடுவது?
இந்த விளையாட்டுக்கான தலைவரைக் கீழ்க்கண்ட மூன்று வகைகளில் ஏதாவது ஒன்றின் மூலமாகத் தேர்வு செய்துகொள்ள வேண்டும் ( ‘சாட் பூ திரி..!’, ‘உத்தி பிரித்தல்’ அல்லது ‘பூவா… தலையா…). போட்டிக்கான தலைவரைத் தேர்ந்தெடுத்த பிறகு விளையாட்டைத் தொடங்கலாம்.
# முதலில் விளையாடுபவர்கள் அனைவரும் வட்டமாக உட்கார்ந்துகொள்ள வேண்டும்.
# இந்தப் போட்டிக்கெனத் தேர்வு செய்யப்பட்ட தலைவர் வட்டத்திற்கு நடுவில் நின்று கொள்ள வேண்டும்.
# வட்டமாய் அமர்ந்திருக்கும் அனைவரையும் நடுவில் நின்றபடியே தலைவர், ஒரு சுற்று சுற்றிப் பார்க்க வேண்டும்.
# பிறகு, உட்கார்ந்திருப்பவர்களில் சட்டென யார் முன்பாவது கையை நீட்டி, “கோழி பற… பற…” என்று தலைவர் சொல்ல வேண்டும். தலைவர் கையை நீட்டிய இடத்தில் யார் இருக்கிறார்களோ அவர்கள், “கோழி பற… பற…” என்று உடனடியாகத் திரும்பச் சொல்ல வேண்டும். பிறகு, உட்கார்ந்திருக்கும் எல்லோரும் ஒருமுறை “கோழி பற… பற…” என்று சொல்ல வேண்டும்.
தலைவர் : வாத்து பற… பற…
அனைவரும் : வாத்து பற… பற…
தலைவர் : மைனா பற… பற…
அனைவரும் : மைனா பற… பற…
# பறவைகளின் பெயர்களைச் சொல்லி, “பற… பற…” என்று சொல்ல, அனைவரும் திரும்பச் சொல்ல வேண்டும். இப்படி வேகமாக விளையாடிக் கொண்டிருக்கும்போதே, திடீரெனத் தலைவர் யாரிடமாவது, “நாய் பற… பற…” என்று சொல்ல, கேட்டவரும் “நாய் பற… பற…” என்று சொல்லிவிட்டால், அவர் ‘அவுட்’. நாய் பறக்குமா, என்ன?
இப்போது, ‘அவுட்’ ஆனவர் தலைவராக நின்று, மற்றவர்களிடம் இந்த விளையாட்டை நடத்த வேண்டும்.
இதில், பறவையின் பெயரைச் சொல்லும்போது “பற… பற…” என்றும், விலங்குகளின் பெயரைச் சொல்லும்போது “வர… வர…” என்றும் சொல்லி விளையாட வேண்டும்.
பறக்காத ஒரு பொருளின் பெயரைச் சொல்லி, “பற… பற…” என்றாலோ ( எ.கா: பூனை), நடக்காத ஒரு பொருளின் பெயரைச் சொல்லி “வர… வர…” என்றாலோ ( எ.கா: பேனா ), உடனே சுதாரித்துக்கொள்ள வேண்டும். அதைச் சொல்லமாலிருக்க வேண்டும். மீறிச் சொல்லிவிட்டால் ‘அவுட்’தான்.
உட்கார்ந்த இடத்திலேயே ஜாலியாக விளையாடும் இந்த விளையாட்டை, நீங்களும் ஒருமுறை உங்கள் நண்பர்களுன் கூடி விளையாடித்தான் பாருங்களேன்!
(இன்னும் விளையாடலாம்)
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago