பிப்பெட்: வணக்கம் பியூ. எப்படியிருக்க?
பியூரெட்: வணக்கம் பிப், நல்லாயிருக்கேன்.
பிப்.: வேதிப்பொருட்களோட சிறப்பைப் பற்றி நாம ரெண்டு பேரும் சொல்லப் போறோம்னு, போன வாரம் இந்தப் பகுதில சொல்லியிருந்தாங்களே.
பியூ: ஆமா, வேதியியல் ஆய்வுக்கூடத்துல இருக்குற வேதிப்பொருட்களைப் பத்தி நமக்குத்தான் நல்லாத் தெரியுமே, அதை இந்த உலகத்துக்குச் சொன்னா நல்லது தானே?
பிப்.: சரி, இந்த வாரம் எந்தத் தனிமத்தைப் பத்திச் சொல்லப் போற?
பியூ.: இந்த வாரம் ஒரு தனிமம் அல்ல, பல தனிமங்களைப் பத்திச் சொல்லப் போறேன்.
பிப்.: அப்படியா, ரொம்பப் பெருசா சொல்லுவியோ?
பியூ.: பயப்படாதே பிப், நான் சொல்லப் போறது மனுசங்களோட உடம்புல உள்ள வேதிப்பொருட்களைப் பத்தித்தான்.
பிப்.: மனுசங்களோட உடம்புல வேதிப்பொருட்கள் இருக்கா?
பியூ.: இல்லயா பின்ன? சொல்லப்போனா, மனித உடலே ஒரு வேதியியல் கூடம்தான். உலகில் அறியப்பட்டுள்ள 94 இயற்கைத் தனிமங்களில், ஐந்தில் ஒரு பங்கு மனித உடலை உருவாக்குவதில் பங்காற்றுகின்றனவாம்.
chemistry 3jpgபிப்.: ஓ! அப்படியா, ஆச்சரியம் ஆச்சரியம்.
பியூ.: இந்த அத்தியாவசியத் தனிமங்களின் அளவு குறைந்தால் மனித உடலின் நலம் குறையும். நோய் வரும். ஆரோக்கியமாக வாழ முடியாது. உடலின் சில செயல்பாடுகள் நின்றுகூடப் போகும், குறிப்பா வளர்ச்சி தடைப்படும்.
பிப்.: இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
பியூ.: எலும்பு, செல்களைக் கட்டமைப்பது, உடலின் அமில கார சமநிலையைப் பராமரிப்பது, வேதிவினைகளைத் தூண்டுவது என்று மனித உடலில் வேதிப்பொருட்கள் நிறைய வேலைகளைச் செய்கின்றன.
பிப்.: கொஞ்சம் மூச்சுவிட நேரம் கொடு பியூ.
பியூ.: சரி பிப், ஆனா மனுச உடம்புக்குள்ள இந்த வேதிப்பொருட்கள் இன்னும் பல வேலைகளைச் செய்கின்றன.
பிப்.: அது சரி எந்தெந்த வேதிப்பொருட்கள்னு நீ சொல்லவே இல்லையே.
பியூ.: மனித உடலின் அடிப்படைத் தனிமங்கள் ஆறு. இவற்றில் நான்கு பெருமளவிலும், இரண்டு குறிப்பிடத்தக்க அளவிலும் உள்ளன. முதல் நாலு ஆக்சிஜன், கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன். அடுத்த ரெண்டு கால்சியம், பாஸ்பரஸ்.
பிப்.: அதெல்லாம் எந்த அளவுல மனுச உடம்புல இருக்கு?
பியூ.: முதல் நான்கு தனிமங்கள் மட்டும் 96 சதவீதம்.
பிப்.: அப்பாடி!
பியூ.: இவை பெரும் தனிமங்கள் என அறியப்படுகின்றன. இவை பெருமளவில் நிறைந்திருப்பதே காரணம். பெரும் தனிமங்கள்தான் தசைகளையும் உறுப்புகளையும் உருவாக்குகின்றன.
பிப்.: மனுச உடலில் ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் அதிகமா இருக்கிறது உண்மையாத்தான் இருக்கணும். மனுசங்க நிறைய தண்ணீர் குடிக்கிறாங்களே.
பியூ.: ரொம்ப சரியாச் சொன்ன பிப். மனுச உடலில் 50-70 சதவீதம் தண்ணீர்தான்னு சொல்றாங்க.
பிப்.: அது மட்டுமில்லாம செல்களிலும் 65-90 சதவீதம் தண்ணீர்தான் இருக்கும்.
பியூ.: ஆச்சரியமா இருக்குல்ல பிப்.
பிப்.: சரி, இந்த நைட்ரஜனும் கார்பனும் எப்படி மனுச உடம்புக்குள்ள போகுது?
பியூ.: அதுதான் அவங்க நிறைய சாப்பிடுறாங்களே. அதெல்லாம் கார்பனை அடிப்படையாக் கொண்ட கரிமப் பொருட்களால் ஆனவைதானே?
பிப்.: ஆமால்ல.
பியூ.: சாப்பாட்டுல உள்ள புரதம் வழியா நைட்ரஜன் போகும்.
பிப்.: ஓ! தண்ணி, சாப்பாடு வழியாவே இந்தப் பெரும் தனிமங்கள் எல்லாம் கிடைத்துவிடுகின்றன, நல்ல விஷயம்தான்.
பியூ.: சரி, இன்னைக்கு இது போதும் பிப், அடுத்த வாரம் சந்திப்போம்.
70 கிலோ எடை கொண்ட வளர்ந்த மனிதர் ஒருவரின் உடலில், சராசரியாகக் கீழ்க்கண்ட அளவுகளில் தனிமங்கள் இருப்பதாகச் சொல்லலாம்:
chemistryjpg100
தொடர்புக்கு: valliappan@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago