சென்னைப் பட்டணம் - குழந்தைப் பாடல்

By செய்திப்பிரிவு

பட்டணமாம் பட்டணம்

பெரிய சென்னைப் பட்டணம்.

கட்டிடங்கள் நிறைந்துள்ள

கண்கவரும் பட்டணம்.

தமிழகத்துத் தலைநகராய்த்

திகழுகின்ற பட்டணம்.

தமிழகத்தின் வடபுலத்தில்

ஒதுங்கி நிற்கும் பட்டணம்.

ஆங்கிலேயர் காலத்தே

அமைந்த சென்னைப் பட்டணம்.

ஆங்கு பல மொழி, இனங்கள்

கலந்து வாழும் பட்டணம்.

உலகில் பெரிய பட்டணத்தில்

இதுவும் ஒரு பட்டணம்

உலக மக்கள் வந்து செல்லும்

பன்னாட்டுப் பட்டணம்.

பல்கலையின் கழகங்கள்

பல நிறைந்த பட்டணம்.

பல் துறையின் ஆய்வகங்கள்,

அறிஞர் மிகுந்த பட்டணம்.

வானூர்தி நிலையங்கள்

அருகமைந்த பட்டணம்.

வானுயர்ந்த கட்டிடங்கள்

பல நிறைந்த பட்டணம்.

பெருங் கப்பல் வருகின்ற

துறைமுகத்துப் பட்டணம்.

பெருந் தொழில்கள் சூழ்ந்துள்ள

பெருமையுடைய பட்டணம்.

காசு தந்தால் எப்பொருளும்

கடை விரிக்கும் பட்டணம்.

மாசுகளை உள் மறைத்து

மின்னுகின்ற பட்டணம்.

உழைப்பவரின் உழைப்பாலே

உயர்ந்த சென்னைப் பட்டணம்.

உழைப்பவருக்கு ஊருக்குள் இடம் தருமா பட்டணம்?

- வெற்றிச்செழியன், குன்றத்தூர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்