# வௌவால் முதுகெலும்புள்ள பாலூட்டி.
# பாலூட்டிகளில் பறக்கும் இயல்புள்ள ஒரே பிராணி வௌவால் மட்டுமே.
# வெளவால்களில் உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.
# எலி, நரி போலவே சிறிய முகத்தைக் கொண்டவை வௌவால்கள்.
# ஆந்தைகளைப் போலவே இரவில்தான் வௌவால்கள் உற்சாகமாக இருக்கும்.
# வௌவால்களுக்குக் கண்கள் உண்டு. பார்வைத் திறனும் உண்டு. ஆனால் அவற்றின் கண்கள் பெரிதாக வளர்ச்சி அடையாதவை.
# இரவில் பறக்கும் போது அவை மீயொலி அலைகளை அனுப்பும். அந்த ஒலி அலைகள் எதிரில் இருக்கும் சுவர் அல்லது பொருட்களில் மோதித் திரும்ப வருவதைக் கணக்கிடும் தகவமைப்பு அதற்கு உண்டு. இத்தகவமைப்பின் மூலம் எதிரில் இருக்கும் பொருட்கள் இருக்கும் தூரத்தைக் கண்டுபிடிக்க முடியும்.
# பூச்சிகள், மீன்களை உணவாக உட்கொள்ளும். சிலசமயம் பழங்களையும் சாப்பிடும்.
# வௌவால்களில் ரத்தக் காட்டேரி வகை வௌவால்கள் சிறிய, கூர்மையான பற்களைக் கொண்டவை. விலங்குகளின் தோலைத் துளைத்து ரத்தம் குடிக்கும் வல்லமை கொண்டவை.
# வௌவால்களில் உலகம் முழுவதும் அதிகம் காணப்படும் இனம் பழம்தின்னி வௌவால்களே.
# வௌவால்கள் பகல் முழுவதும் தலைகீழாகத் தன் இருப்பிடத்தில் தொங்கிக்கொண்டிருக்கும். இரவுதான் அது பல இடங்களுக்குச் சென்று இரை தேடும்.
# பூக்களின் மகரந்த சேர்க்கைக்கும், பழவிதைகளை வெவ்வேறு இடங்களில் தூவி தாவரங்கள் பெருகுவதற்கும் வௌவால்கள் உதவுகின்றன.
# காடுகள், குகைகள், நதியோரங்கள், நகரங்களில் உள்ள பழைய கட்டிடங்கள் ஆகியவைதான் வௌவால்களின் வாழ்விடங்கள். அருகில் நீரும், உணவும், இரையும், பாதுகாப்பும் இருப்பதை வெளவால்கள் உறுதி செய்து கொள்ளும்.
# நீர்ப்பாதைகளில் பயணம் செய்யும்போது, வௌவால்கள் தடங்கல்கள் ஏதுமின்றி தனது மீயொலி அலைகளை அனுப்பி எதிரே இருப்பதைத் தெரிந்துகொள்ள முடியும். மனிதர்கள் பயன்படுத்தும் சாலை வழிகளை வௌவால்கள் தேர்ந்தெடுப்பதில்லை.
# கூட்டம் கூட்டமாக வாழ்பவை வௌவால்கள்.
# வௌவால் மணிக்கு ஆயிரம் சிறுபூச்சிகள் வரை சாப்பிடும். வயல்களைத் தாக்கும் பூச்சிகளை அழிப்பதால் விவசாயியின் நண்பனாக வௌவால் உள்ளது.
# சிறகுகள் மட்டும் ஆறடி கொண்ட வௌவாலும் உண்டு. ஒரு சிறு நாணயம் அளவுக்கே உள்ள சிறிய வௌவாலும் உண்டு.
# வௌவால்கள் பெரும்பாலும் பறவைகளுடன் மோதுவதில்லை. பறவைகள் வாழும் இடத்தில் இருப்பதுமில்லை.
# பெண் வௌவால்கள் கோடைக்காலத்தில்தான் கர்ப்பம் அடையும். கரு வளர்வதற்குப் போதுமான சத்து கிடைக்கும் காலம் என்பதால் கோடைக்காலத்தில் பெண் வௌவால்கள் கருவுறுகின்றன.
# பெண் வௌவால்கள் எல்லாம் சேர்ந்து பேறுகாலக் குடியிருப்பு ஒன்றைத் தனியே உருவாக்கிக்கொள்ளும்.
# சிசுவாகப் பிறக்கும் வௌவாலுக்கு முதலில் சிறகுகள் இருக்காது. ஆனால் பிறக்கும்போதே 22 பற்கள் முளைத்திருக்கும். பிறந்த இரண்டே மாதத்தில் முதிர்ச்சியுற்றுப் பறக்கவும் தொடங்கும்.
# வெளவால்களின் சராசரி ஆயுள்காலம் 20 ஆண்டுகள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago