இது எந்த நாடு? - 90: பிரெஞ்சு சூடான்

By ஜி.எஸ்.எஸ்

கீழே உள்ள குறிப்புகளின் உதவியுடன் அவை உணர்த்தும் நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு.

2. இதன் தலைநகர் பமாகோ. நைஜர் நதிக்கரையில் அமைந்துள்ளது.

3. பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தவரை ‘பிரெஞ்சு சூடான்’ என்று அழைக்கப்பட்டது.

4. 1960, செப்டம்பர் 22 அன்று விடுதலை பெற்றது.

5. முக்கியத் தொழில் விவசாயம். பருத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

6. இந்த நாட்டின் பெரும்பான்மையான பகுதி சஹாரா பாலைவனத்தில் அமைந்திருக்கிறது.

7. ஆப்பிரிக்காவில் அதிகமாகத் தங்கம் ஏற்றுமதி செய்யும் மூன்றாவது நாடு, இது.

8. மண்ணால் கட்டப்பட்ட மிகப் பெரிய மசூதி இங்கு இருக்கிறது. 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, 1834-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. மீண்டும் 1907-ம் ஆண்டு புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டது.

9. மிகப் பிரபலமான விளையாட்டு கால்பந்து.

10. ஒட்டகச்சிவிங்கி, சிங்கம், யானை, சிறுத்தைப் போன்ற விலங்கினங்கள் இங்கே இருக்கின்றன.

விடை: மாலி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

14 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்