பிப்பெட்: வணக்கம் பியூ.
பியூரெட்: வணக்கம் பிப். காலையில பல் விளக்குனியா?
பிப்.: விளக்காமலா வருவேன்? காலையில் எழுந்தவுடன் செய்யும் முதல் வேலையே அதுதானே?
பியூ.: நல்ல விஷயம். எதை வெச்சு விளக்குவே?
பிப்.: வேப்பங்குச்சிய வைச்சுத்தான்.
பியூ.: எல்லா நாளுமா?
பிப்.: எல்லா நாளும் இல்ல, சனி-ஞாயிறுகள்ல வேப்பங்குச்சிய வெச்சுத் தேய்ப்பேன்.
பியூ.: மற்ற நாட்கள்ல என்ன பண்ணுவ?
பிப்.: பற்பசை பயன்படுத்துவேன்.
பியூ.: ம்! பல்சொத்தையைத் தடுத்து, பற்களை வலுப்படுத்துவது எது தெரியுமா?
பிப்.: ம்ம்ம்…! தெரியலையே.
பியூ.: ஃபுளூரின். பற்குழி, பற்சொத்தையைத் தடுப்பதுதான் ஃபுளூரினின் வேலை. பற்பசையில் கரையக்கூடிய ஃபுளூரைடாக ஃபுளூரின் இருக்கு.
பிப்.: ஓ, அப்படியா!
பியூ.: இதற்காக சோடியம் மோனோஃபுளூரோபாஸ்பேட், சில நேரம் சோடியம் ஃபுளூரைடு அல்லது டின் ஃபுளூரைடு ஆகிய வேதிப்பொருட்கள் பற்பசைகளில் சேர்க்கப்படுகின்றன. பற்பசைகளில் இவற்றைச் சேர்க்கும் நடைமுறை, அமெரிக்காவில் 1955-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
பிப்.: ஆமா, இந்த ஃபுளூரினை எப்போ கண்டுபிடிச்சாங்க?
பியூ.: 1810-லேயே இது ஒரு தனிமமாக இருக்கலாம் என்று கருதப்பட்டாலும், இதைப் பிரித்தெடுப்பது ஆபத்தானதாக இருந்தது.
பிப்.: அப்படி என்ன ஆபத்து?
பியூ.: ஆங்கிலேய வேதியியலாளர் ஜார்ஜ் கோர், ஃபுளூரினைப் பிரித்தெடுக்க முயற்சித்தவர்களில் முக்கியமானவர். தன்னுடைய ஆய்வகத்தில் அதற்கான பரிசோதனையை அவர் மேற்கொண்டபோது, அவர் உருவாக்கிய ஃபுளூரின் ஹைட்ரஜனுடன் வினைபுரிந்து வெடித்துவிட்டது. ஆய்வகத்தில் பெரும் சேதம்.
பிப்.: அவருக்கு ஏதும் ஆகலையே?
பியூ.: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனா, இதுபோலப் பெரும் ஆபத்துகளை எதிர்கொண்டுதான் வேதியியல் விஞ்ஞானிகள் புதிய தனிமங்களையும் வேதிப்பொருட்களையும் நமக்குக் கண்டறிஞ்சு தந்திருக்காங்க.
பிப்.: சந்தேகமே இல்ல.
பியூ.: அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு பிரெஞ்சு வேதியியலாளர் ஹென்றி மோய்சன், 1886-ல் ஃபுளூரினை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்தார். தாழ் வெப்ப மின்பகுப்பாக்கம் மூலமா அவர் இதைச் சாதித்தார். ஃபுளூரின் தயாரிப்பில் இன்றைக்கும் அதே முறைதான் பயன்படுது.
பிப்.: நல்ல விஷயம்.
பியூ.: அவருடைய கண்டறிதலுக்கு 1906-ல் நோபல் பரிசு அங்கீகாரமும் கிடைச்சுது.
பிப்.: பற்பசை மாதிரியே பல் மருத்துவர்கள் பயன்படுத்தும் மவுத் வாஷிலும் ஃபுளூரின் இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன். அது வேற எப்படி எல்லாம் பயன்படுது?
பியூ.: எஃகு உற்பத்தியிலும் அலுமினிய சுத்திகரிப்பிலும் ஃபுளூரைட் பயன்படுத்தப்படுது.
பிப்.: குளிர்பதனப் பெட்டிகளில் குளோரோஃபுளூரோன்னு ஏதோ ஒரு வாயுவை பயன்படுத்துவாங்களே?
பியூ.: ஆமா, நீ சொல்ற வேதிப்பொருளோட பேரு குளோரோபுளூரோகார்பன் (சி.எஃப்.சி.). வெப்ப நிலைத்தன்மை, வேதி நிலைத்தன்மை கொண்ட இந்தக் கரிம ஃபுளூரைட்கள் குளிரூட்டிகளாகப் பயன்பட்டன.
பிப்.: அந்த வாயுதானே ஓசோன்ல ஓட்டை போட்டது?
பியூ.: சரியா சொன்ன பிப். ஓசோன் படலம் மெலிந்துபோகக் காரணமா இருந்த அந்த வாயுவை 1987-க்கு அப்புறம் தடை பண்ணிட்டாங்க.
பிப்.: பூமியின் வெப்பம் அதிகரிக்கவும் இந்த சி.எஃப்.சி. காரணம்னு சொல்றாங்களே?
பியூ.: அதுவும் ஒரு காரணமா இருக்கு.
பிப்.: அப்ப நன்மை செய்யுறது மாதிரியே, பிரச்சினைக்கும் ஃபுளூரின் காரணமா இருக்கு, இல்லையா?
பியூ.: நீ சொல்றது சரிதான்.
பிப்.: அதே மாதிரி தண்ணில இருக்கிற ஃபுளூரைடு, பற்காரை படியக் காரணமா இருக்கிறதா கேள்விப்பட்டிருக்கேன்.
பியூ.: ஆமா, அதிகப்படி ஃபுளூரைடு பயன்பாடு பற்களிலும் உடலிலும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாங்கிற எச்சரிக்கையும் இருக்கு.
பிப்.: எதுவா இருந்தாலும் அளவோடவும் எச்சரிக்கையாவும் பயன்படுத்தணுங்கிறதை மறந்துடக் கூடாது.
இந்த வாரத் தனிமம்: ஃபுளூரின்
குறியீடு: F
அணு எண்: 9
பிரபஞ்சத்தில் அதிகம் கிடைக்கும் 24-வது தனிமம், பூமியின் மேற்பகுதியில் அதிகம் கிடைக்கும் 13-வது தனிமம்.
ஃபுளூரினின் முதன்மைக் கனிம ஆதாரமான ஃபுளூரைட், 1529-லேயே கண்டறியப்பட்டுவிட்டது. உலோகத் தாதுக்களில் இருந்து உலோகத்தைப் பிரித்தெடுக்கும்போது, உருகுநிலையின் வெப்பத்தைக் குறைக்க ஃபுளூரைட் சேர்க்கப்பட்டது. அதன் காரணமாக flow என்ற ஆங்கிலச் சொல்லின் மூலமான ‘fluo’-விலிருந்து ஃபுளூரின் என்ற பெயர் வந்தது. ஃபுளூரின் வாயு, எளிதில் வினைபுரியக் கூடியது. இதனால், பொதுவாகச் சேர்மங்களாகவே ஃபுளூரின் கிடைக்கிறது.
தொடர்புக்கு: valliappan@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago