இது எந்த நாடு? - 86: உலகின் நான்காவது சிறிய நாடு

கீழே உள்ள குறிப்புகளின் உதவியுடன் அவை உணர்த்தும் நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள்.

1. ஹவாய்க்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நடுவில் அமைந்துள்ள தீவு நாடு.

2. வாட்டிகனுக்கு அடுத்து மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடு. உலகிலேயே மிகச் சிறிய நான்காவது நாடு.

3. எலீஸ் தீவுகள் என்று முன்னர் அழைக்கப்பட்ட நாடு.

4.  1979-ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி, பிரிட்டனிடமிருந்து விடுதலைப் பெற்றது.

5. மீன் பிடித்தல், சுற்றுலா, கொப்பரைத் தேங்காய் முக்கியத் தொழில்களாக இருக்கின்றன.

6. இதன் கரன்சி ஆஸ்திரேலிய டாலர்.

7. தீவுகளில் ஆங்காங்கே துருப்பிடித்த, புதையுண்ட கப்பல்களைக் காணலாம். இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்க ராணுவத்தினர் இந்த நாட்டைத் தங்கள் ராணுவத் தளமாகப் பயன்படுத்தினர்.

8. 26 சதுர கி.மீ. அளவுள்ள இந்த நாட்டில் சுமார் 10 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள்.

9. இதன் தலைநகர் ஃபுனஃபூட்டி.

10. கிரிக்கெட்டைப் போன்ற கில்லிகிட்டி இந்த நாட்டின் பாரம்பரிய விளையாட்டு.

விடை: துவாளு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

16 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்