அன்றாட வாழ்வில் வேதியியல் 04: வெள்ளை பெயின்ட்எப்படி வெள்ளையாச்சு?

By ஆதி வள்ளியப்பன்

பிப்பெட்: என்ன பியூரெட் கையில பொம்மையோட வர்ற?

பியூரெட்: இது நவராத்திரி கொலு காலமில்லையா, எனக்கும் மண் பொம்மை வேணும்னு தேடி வாங்கிட்டு வந்தேன். உனக்கு வேணுமா?

பிப்.: நானும் மண் பொம்மை வைச்சு விளையாடின ஆள்தான். இப்போ வேணாம். அப்ப, இந்த வாரம் எதைப் பத்தி நீ சொல்லப் போற?

பியூ.: இந்த பொம்மைக்கு அடிச்சிருக்குற பெயின்ட்டை பார்த்தியா? வெள்ளையா இருக்குல்ல?

பிப்.: வெள்ளை பெயின்ட்டை அடிச்சா வெள்ளையாத்தானே இருக்கும் பியூ.பியூ.: நான் சொல்ல வந்தது அது இல்ல. அந்த வெள்ளை பெயின்ட் எப்படி வெள்ளையாச்சு?பிப்.: ஓ! அப்படிக் கேட்கிறியா? எனக்குத் தெரியலைப்பா, நீயே சொல்லிடு.

பியூ.: அதெல்லாம் தேடிப் படிச்சு தெரிஞ்சுக்கணும் பிப்.

பிப்.: சரி, இந்த தடவ நீதான் சொல்லேன்.

பியூ.: வெள்ளை பெயின்டில் டைட்டானியம் டையாக்சைடு அல்லது டைடானியா எனும் வேதிப்பொருளைச் சேர்க்கிறாங்க, அதனாலதான், அது வெள்ளையா இருக்கு.

பிப்.: ஓ! அதுதான் வெள்ளை நிறத்தின் ரகசியமா?

பியூ.: உலகில் தயாரிக்கப்படும் பெயின்ட்களுக்குத் தேவையான வேதிப்பொருட்களில் டைட்டானியம் டையாக்சைடு மூன்றில் இரண்டு பங்கு அளவுக்குப் பயன்படுத்தப்படுவதாகத் தகவல் உள்ளது.

பிப்.: சூப்பர். டைட்டானியம் டையாக்சைடின் பயன் அது மட்டும்தானா?

பியூ.: இல்லை காகிதம், பிளாஸ்டிக் போன்றவற்றிலும் அது பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. உலகில் கொள்முதல் செய்யப்படும் டைட்டானியம் டையாக்சைடில் 80 சதவீதம் மேற்கண்ட மூன்று பயன்களுக்காகவே பயன்படுத்தப் படுகிறதாம்.

பிப்.: பெயின்ட் சரி, காகிதம், பிளாஸ்டிக்கில் அதை எதற்காகப் பயன்படுத்துறாங்க?

பியூ.: அது வெள்ளையா இருக்கிறதோட பிரகாசமாகவும் இருக்கு ஒளிபுகாத தன்மையையும் கொண்டிருக்கு. அதனால்தான் பெயின்ட், பிளாஸ்டிக், காகிதத்தில் நிறமேற்ற அதை அதிகம் பயன்படுத்துறாங்க.

பிப்.: இவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துறாங்களே, அதுனால பிரச்சினை ஏதும் ஏற்படுறதில்லையா?

பியூ.: முன்பு வெள்ளை பெயின்ட்களில் காரீயத்தை பயன்படுத்திட்டு இருந்தாங்க. ஆனா, சுற்றுச்சூழலுக்கும் மனித உடலுக்கும் காரீய நச்சு பாதிப்பு ஏற்படுத்தி, பாதுகாப்பற்றதா இருந்துச்சு. அதனாலதான் காரீயத்துக்கு பதிலா டைட்டானியம் டை ஆக்சைடை பயன்படுத்த ஆரம்பிச்சாங்க.

பிப்.: அது சரி, டைட்டா னியம் டையாக்சைடு ஒரு தனிமமா?

பியூ.: டைட்டானியம் டையாக்சைடு இயற்கையாகக் கிடைக்கும் கனிமம். அதற்கு அடிப்படையாக உள்ள டைட்டானியம்தான் தனிமம்.

பிப்.: அப்ப டைட்டானியத்தை எதுக்கெல்லாம் பயன்படுத்துறாங்க?

பியூ.: அது ஒரு பெரிய கதை.பிப்.: எனக்குச் சொல்லக் கூடாதா?

பியூ.: கடந்த நூற்றாண்டில் அமெரிக்கா – ரஷ்யா ஆகிய ரெண்டு வல்லரசு நாடுகளிடையே மிகப் பெரிய பனிப் போர் நிலவுச்சு. ரெண்டு நாடுகளும் நேரடியா இல்லேண்ணாலும் மறைமுகமாக மோதிக் கிட்டிருந்தாங்க. அதனால, ஆயுதங்களைத் தயாரிப்பதற்குப் பெரும் போட்டி இருந்துச்சு. அதுக்கு மூலப்பொருளா டைட்டானியம் தனிமத்தை ரெண்டு நாடுகளும் சேர்த்துவைக்க ஆரம்பித்தன.

பிப்.: இப்ப பனிப் போர் இல்லையே. இப்ப எதுக்காக டைட்டானியத்தை பயன்படுத்துறாங்க?

பியூ.: விமானம், கப்பல் கட்டப் பெருமளவில் பயன்படுது.

பிப்.: அதுலயெல்லாம் இரும்பைப் பயன்படுத்துறதில்லையா?

பியூ.: டைட்டானியம் எஃகைவிட உறுதியானது. அதேநேரம், எடையோ குறைவு.

பிப்.: அப்படியா, நான்தான் தப்பா நினைச்சுக்கிட்டேனா?

பியூ.: உலோகங்களில் டைட்டானியம் எளிதில் அரிமானம் அடையறதில்லை. மிகக் குறைந்த எடையிலும் வலுவாகச் செயல்படும். அதனாலதான், டைட்டானியம் வானத்துலயும் கடல்லயும் மிதக்குது.

பிப்.: மனுசங்களுக்கு நேரடியா எந்த பிரயோசனமும் இல்லையா?

பியூ.: உடலுக்குள் உடைந்த எலும்புகளை இணைக்கவும் எலும்பு களுக்கு ஆதரவாகவும் டைட்டானியத் தகடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

பியூ.: டைட்டானியம்கிற பேருக்கு அப்படி என்னதான் அர்த்தம்?

பிப்.: கிரேக்கப் புராணத்துல வர்ற டைட்டன் கடவுளின் பேரின் அடிப்படையில, டைட்டானியம் என்ற பெயர் இந்தத் தனிமத்துக்கு வைக்கப்பட்டிருக்கு. டைட்டனின் அப்பா வானத்தின் கடவுளான யுரேனஸ், தாய் பூமிக் கடவுளான கையா. இருவருமே வலுவான, உறுதியான ஆட்சியாளர்களாகக் கருதப்பட்டவங்க. அதனாலதான், அவங்க மகன் பேரை இந்தத் தனிமத்துக்கு வைச்சிருக்காங்க.

பியூ.: ரொம்ப சிறப்பு.

 

இந்த வாரத் தனிமம்: டைட்டானியம்குறியீடு: Tiஅணு எண்: 22கண்டறியப்பட்ட ஆண்டு: 1791கண்டறிந்தவர்: பிரிட்டிஷ் கனிமவியலாளர் வில்லியம் கிரிகோர்.பெயர் வைத்தவர்: ஜெர்மன் வேதியியலாளர் மார்டின் ஹைன்ரிச் க்லாப்ரோத்- பூமியின் மேலோட்டில் அதிகம் கிடைக்கக்கூடிய ஒன்பதாவது தனிமம். பூமியின் மேலோட்டில் ஒரு சதவீதம் அளவுக்குக் காணப் படுகிறது.

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்