கீழே உள்ள குறிப்புகளின் உதவியுடன் இது எந்த நாடு என்பதைக் கண்டுபிடியுங்கள்.
1. வட அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் வட அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ளது.
2. 1505-ம் ஆண்டு ஸ்பெயினைச் சேர்ந்த ஜுவான் டி பெர்முடேஸ் என்பவரால் இந்தத் தீவு கண்டுபிடிக்கப்பட்டது. இவர் பெயரிலேயே இந்த நாடும் அழைக்கப்படுகிறது.
3. 1609-ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜ் சோமர்ஸ் வந்தார். பிறகு இங்கிலாந்தின் காலனி இங்கே உருவானது.
4. இதன் தலைநகரம் ஹாமில்டன்.
5. தன்னாட்சியும், தனி அரசியலமைப்புச் சட்டமும் உண்டு. என்றாலும் ஒப்பந்தப்படி இதன் பாதுகாப்புக்கும், வெளியுறவுக்கும் இங்கிலாந்துதான் பொறுப்பு.
6. இந்த நாட்டின் சின்னம் சிவப்புச் சிங்கம்.
7. வாழை, காய்கறிகள், பூக்கள், பால் பொருட்கள், தேன் போன்றவை முக்கியமான விளைபொருட்கள்.
8. படிகங்களால் ஆன குகையும் இளஞ்சிவப்பு மணல் கடற்கரையும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கின்றன.
9. இங்கு 5 வயது முதல் 15 வயதுவரை இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது.
10. 7 பெரிய தீவுகளும் ஏராளமான சிறிய தீவுகளும் கொண்ட நாடு.
விடை: பெர்முடா
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago