பெரிய்ய ரயில் பாலம்

By டி. கார்த்திக்

உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம் என்ற சிறப்பைப் பெற உள்ளது ஒரு ரயில் பாலம். மலைகளுக்கு இடையே ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றின் மேலே பிரம்மாண்டமான வளைவுடன் உருவாகி வரும் இந்தப் பாலம் எங்கு கட்டப்படுகிறது தெரியுமா? நம் நாட்டில்தான். காஷ்மீர் மாநிலத்தில்தான் கட்டப்பட்டு வருகிறது.

இந்தப் பாலத்தின் பெயர் சீனாப் பாலம். ரியாசி என்ற மாவட்டத்தில் கவுரி - பக்கல் பகுதிகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. முழுவதும் மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால், தரை மட்டத்தில் இருந்து 359 மீட்டர் உயரத்தில், 1,315 மீட்டர் நீளத்தில் இந்த ரயில்வே பாலம் கட்டப்படுகிறது.

அதுவும் இந்தப் பாலம் கட்டப்படும் பகுதி அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதி. சில சமயங்களில் இங்கு மணிக்கு நூறு கிலோ மீட்டர் வேகத்தில்கூட காற்று பலமாக வீசுமாம். இயற்கைச் சீற்றங்களால் பாலம் பாதிக்கப்படாமல் இருக்க அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கவனத்துடன் பாலத்தை அமைத்து வருகிறார்கள்.

இரு மலைகளுக்கு இடையே பாலம் 480 மீட்டர் அகலத்தில் இரும்பு வளைவுகளுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் உள்ள குதூப்மினாரைவிட இப்பாலம் 5 மடங்கு உயரம். உலகிலேயே உயரமான பாலமாகக் கருதப்படும் பிரான்ஸ் நாட்டின் மில்லவ் பாலத்தைவிட 17 மீட்டர் உயரம் அதிகம். இப்பாலத்தின் உயரம் 342 மீட்டர்.

2016-ம் ஆண்டு இறுதியில் இந்த மெகா ரயில் பாலத்தில் ரயில் ஓடும் என்று கூறுகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்