கூடு கட்ட இடம் தருவாயா? | கதை

By கமலா முரளி

எல்லா மரங்களும் இளங்காற்றில் தமது கிளைகளை அசைத்து மகிழ்ந்து கொண்டு இருந்தன. ஆனால், வாழை மட்டும் சோர்வாக இருந்தது. “வாழையே, எல்லாரும் சந்தோஷமாக இருக்கும் போது, நீ மட்டும் வருத்தமாக இருக்கிறாயே ஏன்?” என்று கேட்டது கிளி.

“உன் போன்ற பறவை இனத்துடன் பேசுவதே இல்லை எனும் முடிவில் இருக்கிறேன். போம்மா…” என்றது வாழை. “உன் மனக்கவலையைப் போக்க நினைத்த என்னையே விரட்டுகிறாயே” என்று சொல்லிவிட்டுப் பறந்தது கிளி. “நில்லு கிளி, என்ன விஷயம்னு நான் கேட்டுப் பார்க்கிறேன். நீ என்கூட வா” என்றது அணில்.

“எல்லாரும் சந்தோஷமா இருக்கும் இந்த நேரத்தில், நீ மட்டும் வருத்தமா இருக்கற. காரணம் தெரிந்தால் நாங்கள் உனக்கு ஏதாவது உதவி பண்ணுவோமே” என்று வாழையிடம் கேட்டது அணில். “யாரும் உதவி பண்ண முடியாது. இது நடந்து முடிஞ்ச கதை” என்றது வாழை. “தெளிவாகத்தான் சொல்லேன். யார் என்ன செய்தார்கள்?” என்றது அணில்.

“எங்கள் மீது அநியாயமாகப் பழி வந்துட்டது.” வாழையின் வழக்கைக் கேட்க, இன்னும் சில பறவைகளும் விலங்குகளும் கூடிவிட்டன. “யார் பழி சுமத்தினார்கள் உன் மேல்?” “முன்பு ஒருமுறை, சிறிய பறவை ஒன்று கூடு கட்ட இடம் கேட்டு அலைந்ததாம். நாங்கள் தரவில்லையாம். அதனால், அந்தப் பறவை எங்களைக் குறை சொன்னது.” ”சரி , என்றோ நடந்த சம்பவத்துக்கு இப்போது ஏன் சோகமாக இருக்கிறாய்?” என்று கேட்டது நரி.”அந்தச் சம்பவத்தை இன்று வரை பறவைகள் சொல்லிக்கொண்டு திரிகின்றன” என்றது வாழை.

“ஆமாம், நேற்று ஒரு பாட்டி வீட்டில் வடை சாப்பிடப் போனேன். அங்கு ஒரு பாடலைக் கேட்டேன். வாழையிடம் ஒரு பறவை இடம் கேட்கிறது. ‘இடம் தரமாட்டேன், இடம் தரமாட்டேன்’ என வாழை மறுக்கிறது. இசையுடன் கூடிய பாடல் ” என்றது காகம். “எங்கள் மீது இப்படிப் பழி போடலாமா? நாங்கள் இந்த உலகுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறோம் .

வாழைப் பழங்களை விரும்பாதவர்கள் யாரும் உண்டா? எங்கள் இலைகள் மீது அமரக் கூடாது என நாங்கள் சொன்னதே இல்லை” என்றது வாழை. “கூடு கட்ட இடம் தரவில்லையே என்கிற வருத்தத்தில் அந்தப் பறவை அப்படிப் பேசி இருக்கும். நாம் அதை எல்லாம் மறந்துவிட்டுச் சுமூகமாக இருப்போமே” என்றது கிளி.

“இல்லை, நான் ஒரு கருத்தைத் தெளிவு படுத்தியாக வேண்டும். எப்போதோ நடந்த விஷயத்தை இன்று வரை சொல்லிக் காண்பிப்பது நல்லதா?”வாழையின் வழக்கை முடித்து வைக்க ஆந்தை முன்வந்தது. “வாழை மரம் அந்தப் பறவைக்கு இடம் தராதது ஒரு நல்ல விஷயம்தான்.” இதைக் கேட்டதும் பறவைகள் துணுக்குற்றன. ஆந்தை தொடர்ந்தது.

“இயல்பாகவே வாழை மரங்கள் பெருங்காற்றைத் தாங்க முடியாதவை. அந்தப் பறவைக்குக் கூடு கட்ட இடம் கொடுத்து இருந்தால், பெருங்காற்றில் கூடு சிதைந்திருக்கும். பறவை அதன் குஞ்சுகளோடு இறந்து போயிருக்கும்.” “சரியாகச் சொன்னே. ஏதோ பறவைக்கு இடம் கொடுக்காத பாவத்தால் நாங்கள் சாய்ந்து விழுந்தது போல் பாடுகிறார்களாமே” என்றது வாழை.

“வாழையே, உங்கள் தரப்பிலும் ஒரு பிழை உள்ளது. அந்தப் பறவையிடம் என் மரம் கூடு கட்ட தகுந்த இடம் இல்லை என விளக்கிச் சொல்லி இருந்தால், உங்கள் பெருமை நிலைத்திருக்கும். இடம் தர முடியாது போ எனக் கோபமாகப் பேசியது தவறுதானே?” என்றது ஆந்தை. இப்போது வாழை தன் தவறை உணர்ந்து மௌனமாக இருந்தது.

“வாழை மரமே, வாழை மரமே, சின்ன பறவை நான்! ஒரு கூடு கட்ட இடம் தருவாயோ?” என்று ஒரு குருவி பாடியது. “எம் கிளைகளில் வலுவில்லை செல்லப் பறவையே! பலமான மரத்திலே கூடு கட்டம்மா” என அன்பாக வாழை பாடியது. வழக்கு முடிந்தது. மகிழ்ச்சி நிறைந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்