சிங்கராஜா வெகுநேரமாக வருத்தத்தில் ஒரு பாறை மீது படுத்துக் கிடந்தது. சிங்கராஜாவின் வருத்தம் அனைவருக்கும் தெரியும் என்றாலும் யாரும் பயத்தில் அருகில் செல்லவில்லை.
வருத்தத்துக்குக் காரணம் சிங்கராஜாவுக்கு அடிக்கடி வரும் கோபம்தான். இந்தக் கோபத்தால் காட்டிலுள்ள விலங்குகள் செய்த சிறிய தவறுகளுக்கும் சிங்கராஜா தண்டனை தந்தது உண்டு.
அன்று சிங்கராஜா தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது சிங்கக்குட்டி அங்கும் இங்கும் ஓடி விளையாட ஆரம்பித்தது. எதிர்பாராதவிதமாக சிங்கராஜாவின் மீது மோதிவிட்டது. கோபத்தோடு எழுந்த சிங்கராஜா குட்டியைத் திட்டிவிட்டது. சிங்கக்குட்டி அழுதது.
“குழந்தை ஏதோ தெரியாமல் உங்கள் மீது மோதிவிட்டான். அதற்காக ஏன் அவனைத் திட்டினீர்கள்?” என்று சிங்கராணி கேட்டது. அப்போதுதான் சிங்கராஜாவுக்குத் தன் தவறு புரிந்தது.
» செயல்திறன் துறையை எலான் மஸ்க், விவேக் ராமசாமி வழிநடத்துவார்கள்: ட்ரம்ப் அறிவிப்பு
» தங்கம் விலை மீண்டும் சரிவு: இன்று பவுனுக்கு ரூ.320 குறைந்தது
சிங்கராஜா எல்லாரிடமும் அன்பாகத்தான் இருக்கும். நல்லதைத்தான் செய்யும். ஆனாலும் சட்டென்று கோபம் வந்துவிடும். கோபத்தில் தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் மோசமாக நடந்துகொள்ளும்.
‘கோபத்தில் பிள்ளையைத் திட்டிவிட்டேனே... என் கோபத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது?’ என்று வருத்தத்தோடு படுத்திருந்தது சிங்கராஜா.
“உங்கள் கவலை என்னவென்று சொல்லுங்கள். நான் அதைத் தீர்த்து வைக்கிறேன்” என்கிற குரல் கேட்டது.
சிங்கராஜா திரும்பிப் பார்த்தது. நரி நின்றிருந்தது.
“என் கவலை எல்லாம் அடிக்கடி எனக்கு வரும் கட்டுப்படுத்த முடியாத கோபம்தான். இன்று இந்தப் பொல்லாத கோபத்தால் என் பிள்ளையைத் திட்டிவிட்டேன். வருத்தமாக இருக்கிறது” என்றது சிங்கராஜா.
“உங்கள் கோபத்தை எளிதாகத் தீர்க்கும் வழி எனக்குத் தெரியும். மிக எளிய மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறேன்” என்றது நரி.
“மருந்தா? அப்படி என்றால் அதை இப்போதே கொடுங்கள்” என்றது சிங்கராஜா.
“நம் காட்டில் எளிதாகக் கிடைக்கும் அருகம்புல்லையும் செம்பருத்திப் பூவையும் சிறிதளவு தண்ணீரில் போட்டு, பத்து நிமிடங்கள் காய்ச்சி, வடிகட்டிக் குடித்தால் எவ்வளவு கடுமையான கோபமும் நீங்கிவிடும். ஆனால், இந்த மருந்தை நீங்கள்தான் உங்கள் கையால் செய்ய வேண்டும். வேறு யாரிடமாவது செய்யச் சொன்னால் பலன் இருக்காது. இனி கோபம் வரும்போது நான் சொன்ன மருந்தைச் செய்து குடியுங்கள். நிச்சயம் பலன் இருக்கும்” என்றது நரி.
நரி சொன்னதைக் கேட்டு சிங்கராஜாவுக்கு நம்பிக்கை வந்தது.
“அடுத்த முறை கோபம் வரும்போது நிச்சயம் இந்த மருந்தைச் செய்து குடிப்பேன்” என்ற சிங்கராஜா, தன் குகையை நோக்கி நடந்தது.
சில நாள்களுக்குப் பிறகு, முயலின் வளைக்குள்ளிருந்த கேரட் ஒன்றை குரங்கு திருடிவிட்டதாக வழக்கு வந்தது. சிங்கராஜாவுக்குக் குரங்கின் மீது கடுமையான கோபம் வந்தது. தண்டனை தருவதற்குத் தயாரானது.
அந்த நேரத்தில் நரி சொன்ன மருந்து நினைவுக்கு வந்தது. அது எல்லாரிடமும் பத்து நிமிடங்கள் பொறுத்திருக்கும்படிச் சொல்லிவிட்டு, தன் குகைக்குச் சென்றது.
அங்கே மண் பாத்திரத்தில் சிறிது அருகம்புல்லையும் செம்பருத்திப் பூக்களையும் போட்டுக் காய்ச்சியது. பத்து நிமிடங்களுக்குப் பிறகு வடிகட்டி, குடித்தது. பிறகு வழக்கு நடக்கும் இடத்துக்கு வந்தது. அப்போது சிங்கத்துக்குக் கோபம் நீங்கிவிட்டது. அது குரங்குக்குத் தண்டனை தரவில்லை. குரங்கிடம், “நீ முயலிடம் திருடிய கேரட்டுக்குப் பதில் ஒரு கொய்யாப்பழம் பறித்துக் கொடு” என்று தீர்ப்பு சொன்னது.
எல்லாருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அதன் பிறகு ஒவ்வொரு முறை கோபம் வரும்போதும், நரி சொன்ன மருந்தைச் செய்து குடித்தது சிங்கராஜா. நாள்கள் செல்லச் செல்ல சிங்கராஜாவின் கோபம் குறைந்துவிட்டது.
“இப்போதெல்லாம் நீங்கள் வீணாகக் கோபம் கொள்வதில்லையே, எப்படி?” என்று கேட்டது சிங்கராணி.
நரி தன்னிடம் சொன்ன மருந்து பற்றி சிங்கராணியிடம் சொன்னது சிங்கராஜா. அதைக் கேட்ட சிங்கராணிக்கு ஆச்சரியம். ‘நரியார் சொன்ன மருந்துக்கு உண்மையிலேயே அவ்வளவு ஆற்றல் இருக்கிறதா?’ என்று நினைத்தபடி, நரியை வரவழைத்தது.
“நரியாரே, அரசரின் கோபத்தை நீக்கும் மருந்தை நீங்கள்தான் சொன்னீர்களாம். இப்போது அரசர் கோபம் கொள்வதே இல்லை. உண்மையிலேயே அந்த மருந்துக்கு அவ்வளவு ஆற்றல் இருக்கிறதா?” என்று சிங்கராணி கேட்டது.
“நான் சொன்ன மருந்துக்கும் கோபத்துக்கும் தொடர்பு இல்லை சிங்கராணி. நான் அருகம்புல்லையும் செம்பருத்திப் பூவையும் பத்து நிமிடங்கள் காய்ச்சிக் குடிக்கும்படிச் சொன்னேன். இவை இரண்டும் பக்கவிளைவற்ற மூலிகைகள். ஒவ்வொரு முறை கோபம் வரும்போதும் சிங்கராஜாவே இதைக் காய்ச்சி குடித்ததால் பத்து நிமிடங்களில் அரசரின் கோபம் தானாகவே மறைந்துவிட்டது.
கோபம் வரும்போது சிறிது நேரம் அமைதியாக இருந்தால், எதற்காகக் கோபப்படுகிறோம் என்கிற சிந்தனை வரும். அப்போது கோபம் தானாகவே நீங்கிவிடும். இது பெரியவர்கள் சொன்ன ரகசியம்” என்று பணிவோடு சொன்னது நரி. சிங்கராணி நரியைப் பாராட்டியது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago