இறகுகள் பறவையின் உடலில் தோன்றும் புரதப் பொருள்களால் உருவானவை. நூற்றுக்கணக்கான இறகுகளால் உருவானவைதான் இறக்கைகள். குறைந்தது ஆயிரம் இறகுகள் முதல் 25 ஆயிரம் இறகுகள் வரை உள்ள பறவைகள் இருக்கின்றன. வானம்பாடிக்கு 1,500 இறகுகளும், கழுகுக்கு 5-8 ஆயிரம் இறகுகளும், வாத்துக்கு 12 ஆயிரம் இறகுகளும், அன்னப் பறவைக்கு 25 ஆயிரம் இறகுகளும் உள்ளன.
பறவைகளின் இறக்கையைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பார்த்தால், பறவையின் தலைப் பகுதியில் உள்ள இறக்கை தடிமனாகவும், வால் பகுதியை நோக்கிச் செல்லச் செல்ல கூர்மையாகவும் இருக்கும். இது பறப்பதற்கு ஏதுவான காற்றிதழ் வடிவத்தை உருவாக்க உதவுகிறது.
காற்றிதழ் வடிவத்தை உருவாக்கு வதற்காக இறகுகள் பல விதங்களில் அமைந்துள்ளன. சில இறகுகள் நீளமாகவும் சில இறகுகள் குட்டையாகவும் காணப்படும். பறவையின் தன்மைக்கு ஏற்பவும் பயன்பாட்டிற்கு ஏற்பவும் வால் இறகுகள், காப்பு இறகுகள், உணர்வுக்குப் பயன்படும் இறகுகள் என வகைப்படுத்தலாம்.
இறகின் நடுவில் உறுதியான தண்டு போன்ற அமைப்பு இருக்கும். அந்தத் தண்டின் இரண்டு பக்கங்களிலும் சிறிய நுண் எலும்புகள் காணப்படும். இந்த நுண் எலும்புகளுக்கு இடையில் இறகு சிற்றிழை எனப்படும் சிறிய ஓட்டை உடைய அமைப்புகள் உள்ளன. இவை பறவையைப் பல வகைகளில் பாதுகாக்கின்றன.
» தங்கம் விலை ரூ.80 அதிகரித்து பவுன் ரூ.58,920-க்கு விற்பனை
» ஐபிஎல் மெகா ஏலம்: ஜேம்ஸ் ஆண்டர்சன் உட்பட 1574 வீரர்கள் பதிவு!
நடுப்பகுதியில் இரண்டு பக்கங்களும் சரியான அளவுக்கு இருப்பவை ’வால் இறகுகள்.’ இந்த இறகுகள் பறக்கும்போது வளைந்து, நெளிந்து, இறங்க வேண்டிய இடத்துக்குச் செல்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி சட்டென்று ஓரிடத்தில் இறங்கிவிட முடியும்.
அதேபோல் இறகுத் தண்டின் ஒரு பக்கம் அதிகமாகவும் மறுபக்கம் குறைவாகவும் காணப்படும் இறகு பறக்கப் பயன்படுகிறது. இந்த இறகுகளைப் பறவை விரிக்கும்போது, நடுப்பகுதியிலிருந்து குறைவாக உள்ள பகுதி உள்ளேயும் அதிகம் உள்ள பகுதி வெளியேயும் சென்று ஒரு வலுவான இறக்கை அமைப்பை உருவாக்குகின்றன. இவை பறப்பதற்குப் பயன்படும் இறக்கைகள்.
வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கும் பறவையின் இறக்கை உதவுகிறது. வெப்பத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள பறவையின் உடலைச் சுற்றி ‘கீழ் இறகு’ என்கிற அமைப்பு உள்ளது. மேலும், இறகு சிற்றிழைகளும் காற்றைப் பறவையின் உடலுக்குள் செலுத்தி அவற்றின் வெப்பநிலையைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பறந்து கொண்டிருக்கும்போது இறகுகள் சரியாக விரிந்து உள்ளனவா, பறக்க வேண்டிய நிலையில்தான் இருக்கின்றனவா என்பதை உணர்வதற்கும் சில இறகுகள் இருக்கின்றன. நாம் கண்களை மூடிக்கொண்டாலும் யார் எங்கே தொடுகிறார்கள் என்கிற செய்தியை மூளைக்குக் கொண்டுசெல்ல உடலுக்குள் தொடு நரம்புகள் இருக்கின்றன. அதேபோலச் சமிக்ஞைகளைக் கொண்டுசெல்ல நுனியில் சிற்றிழை இறகுகள் உள்ளன. அழகுக்காகவும் சில வகை இறகுகள் இருக்கின்றன. இரையைக் கவனித்துப் பிடிப்பதற்கும் இறகுகள் உதவுகின்றன.
பறவை சிறியதாக இருக்கும்போது இருக்கும் இறகுகள் வளர வளர அவற்றிற்கு உகந்ததாக இருப்பதில்லை. எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் பழைய இறகுகளை உதிர்த்து, புதிய இறகுகளை உருவாக்கும் திறன் பெற்றுள்ளன.
இறகைச் சுற்றியுள்ள சிற்றிழைகள் உடைந்து, ஒரு மெழுகுப் படலத்தை இறகுகளின் மீது உருவாக்குகின்றன. இதன் மூலம் நீரில் மிதக்கும் பறவைகள் தங்கள் உடலைப் பாதுகாத்துக்கொள்கின்றன. எளிதாக மிதந்து செல்கின்ற வாத்து போன்ற பறவைகளில் இதைக் காணலாம்.
முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுக்கு இறக்கை இல்லாததால் அவற்றால் பறக்க முடியாது. இறக்கை முளைத்து பறக்கக்கூடிய திறன் வரும்வரை அவை கூட்டில்தான் இருக்கும்.
ஒருவகை வாத்துகளுக்குப் பத்து வாரங்களில் இறக்கைகள் முளைத்துவிட்டாலும், பறப்பதற்கு 18 வாரங்கள் ஆகும். கழுகுக் குஞ்சு பிறந்த ஒரு மாதத்தில் இறகுகள் வளரத் தொடங்கும். ஆனால், மூன்று மாதங்கள் கழித்துதான் பறக்கும்.
வளர்ந்த பறவைகள் இறகுகளைத் தங்களது இனப்பெருக்கக் காலமான கோடைக்காலத்தில் உதிர்த்துப் புதிய இறகுகளை வளர்க்க ஆரம்பிக்கும். குளிர்காலம் வரும்போது பறவைகளைப் பாதுகாக்க இறகுகள் அவசியம் என்பதால், குளிர்காலத்துக்குள் புதிய இறகுகள் உருவாகிவிடும். பறப்பதற்கு மட்டுமல்லாமல் வேறு பல வகையான தேவை களுக்கும் பறவைகளுக்கு இறகுகள் தேவைப் படுகின்றன.
உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் காற்றின் ஈரப்பதம், வெயிலில் இருந்து உடலைக் காப்பாற்றிக்கொள்வதற்கும் இறகுகள் பயன்படு கின்றன. பென்குவின் போன்ற பறவைகளுக்குப் பனிச்சறுக்குச் செய்வதற்கு இறகுகள் உதவுகின்றன. நீரில் மூழ்கி வேட்டையாடும் பறவைகளுக்கு இறகு முக்கியமான கருவி.
ஆந்தை போன்ற பறவைகளுக்கு இரையின் ஒலியைத் துல்லியமாகக் கேட்பதற்கு இறகுகள் உதவுகின்றன. உடலைச் சுத்தம் செய்ய இறகுகள் தேவை. நீர்ப்பறவைகள் குஞ்சு பொரிக்கக் கூடு கட்டும்போது தங்கள் இறகுகளால் கூட்டை உருவாக்குகின்றன.
- writersasibooks@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago