காளான் அசைவமா? | டிங்குவிடம் கேளுங்கள்

By செய்திப்பிரிவு

பெரிய மரக்கட்டை தண்ணீரில் மிதக்கிறது. ஆனால், மிகச் சிறிய குண்டூசி தண்ணீரில் மூழ்குகிறதே ஏன், டிங்கு? - க. ஷண்முகா, 4-ம் வகுப்பு, தி விகாசா பள்ளி, தூத்துக்குடி.

ஒரு பொருளைத் தண்ணீரின் மீது போடும்போது ஈர்ப்பு விசை உருவாகி, அந்தப் பொருளைத் தண்ணீருக்குள் இழுக்கும். அதே நேரம் தண்ணீரிலிருந்து மிதப்பு விசை உருவாகி, அந்தப் பொருளை மேலே தள்ளும். குண்டூசியைத் தண்ணீரில் போடும்போது தண்ணீரின் அடர்த்தியைவிடக் குண்டூசியின் அடர்த்தி அதிகமாக இருக்கிறது.

அப்போது உருவாகும் மிதப்பு விசை, ஈர்ப்பு விசையைவிடக் குறைவாக இருக்கிறது. அதனால், குண்டூசி தண்ணீரில் மூழ்கிவிடுகிறது. மரக்கட்டையின் அடர்த்தி, தண்ணீரின் அடர்த்தியைவிடக் குறைவாக இருக்கிறது. அப்போது ஈர்ப்பு விசையைவிட மிதப்பு விசை அதிகமாக இருப்பதால் மரக்கட்டை மிதக்கிறது, ஷண்முகா.

காளான் சைவமா, அசைவமா டிங்கு? - மு. காவியா, 7-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

காளான் தாவரமும் அல்ல, விலங்கும் அல்ல. அது பூஞ்சை (Fungii) இனத்தைச் சேர்ந்தது. பூஞ்சைகளால் தாவரங்களைப் போல் தாமாக உணவு தயாரிக்க இயலாது. பிற உயிரினங்களைச் சார்ந்து வாழ்கின்றன. காளான்களில் புரதம், விட்டமின்கள், தாதுக்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் அதிகமாக இருக்கின்றன. அதனால், காளான்களைச் சாப்பிடுவது நல்லது.

இறைச்சிக்கு மாற்றாகக் கருதப்படும் இந்தக் காளான்கள் பெரும்பாலும் மசாலாக்கள் சேர்த்து அசைவ உணவு வகைகளைப் போல் சமைக்கப்படுவதால் அவற்றை அசைவமாக நினைக்கிறார்கள் போலிருக்கிறது, காவியா.

பட்டாசுத் தொழிற்சாலையிலும் விபத்துகள் நிகழ்கின்றன. பட்டாசுகளை வெடிக்கும்போதும் விபத்துகள் ஏற்படுகின்றன. பட்டாசுகளால் சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது. பட்டாசுகளின் சத்தத்துக்கு விலங்குகளும் பறவைகளும் பயப்படுகின்றன. பட்டாசு வெடித்துத்தான் ஒரு பண்டிகையைக் கொண்டாட வேண்டுமா, டிங்கு? - எம். அருண் குமார், 10-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, கடலூர்.

நல்ல கேள்வி அருண் குமார். பட்டாசுத் தொழில் மிகப் பெரிய வணிகம் என்பதால், அவற்றைத் தயாரிப்பதை நிறுத்த யாரும் விரும்பவில்லை. கடந்த நூற்றாண்டில் பண்டிகைக் காலத்தில் பட்டாசு வெடித்துப் பழகிய மக்கள், அந்தப் பழக்கத்தை நிறுத்தத் தயாராக இல்லை.

சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டாவது அரசும் மக்களும் சேர்ந்து பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்றோ வெடிக்கும் அளவைக் குறைத்துக்கொள்ளவோ முயற்சி செய்யலாம். உங்களைப் போன்று பெரும்பான்மையானவர்கள் நினைக்கும் காலத்தில் பட்டாசுகளின் பயன்பாடு குறையலாம். அதுவரை கவனமாக, அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளைப் பயன்படுத்த முயலலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்