ஹங்கேரி நாட்டின் ஒரு பகுதியை மன்னர் ஒருவர் ஆண்டு வந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தார். தனக்கு வயதாகிவிட்ட காரணத்தால் இளவரசருக்கு முடிசூட்டி, அவரை மன்னராக்க முடிவு செய்தார். ஆட்சியைச் சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என்றால் நல்ல முறையில் வழிகாட்டக்கூடிய ஒரு முதலமைச்சர் தேவை. எனவே மன்னர் தம்மிடம் அமைச்சராகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களில் மிகச் சிறந்த ஒருவரை இதற்காகத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தார்.
ஒருநாள் அவருடைய அமைச்சர்கள் அனைவரையும் அழைத்தார். அவர்களிடம் இந்த விஷயத்தைப் பற்றி ஏதும் கூறாமல் ஒரு கேள்வியைக் கேட்டார்.
“அமைச்சர் பெருமக்களே, என் ஆட்சியைப் பற்றியும் என்னைப் பற்றியும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். ஆகவே நீங்கள் அனைவரும் தனித்தனியாக என்னைச் சந்தித்து தங்களின் கருத்தைக் கூற வேண்டும்.”
அமைச்சர்கள் ஒவ்வொருவராக மன்னரைத் தனியே சந்தித்து, அவர்களின் கருத்தைக் கூறினார்கள். அவர்களில் பலர் மன்னரை அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து பேசினார்கள்.
» புதிய உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ.59,000-ஐ நெருங்குகிறது
» பெங்களூரு கட்டிட விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு
“மன்னரே, தங்களது ஆட்சியைப் போல ஒரு சிறப்பான ஆட்சி இவ்வுலகத்தில் இல்லை” என்று ஓர் அமைச்சர் கூறினார்.
“உங்களைவிடச் சிறந்த மன்னர் இந்த உலகில் இல்லை” என்றார் இன்னோர் அமைச்சர்.
தன்னைப் பற்றியும் தனது ஆட்சியைப் பற்றியும் புகழ்ந்து பேசிய அமைச்சர்களுக்கு மன்னர் தலா ஒரு வைரக்கல்லைப் பரிசாகக் கொடுத்தார். அமைச்சர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் சென்றார்கள்.
கடைசியாக வந்த ஓர் அமைச்சர் மௌனமாக நின்றார்.
“அமைச்சரே, என்ன தயக்கம்?”
அந்த அமைச்சர் இப்போதும் மௌனமாகவே நின்றார்.
“அமைச்சரே, தாங்கள் சொல்ல விரும்பும் கருத்து எதுவாக இருந்தாலும் தயங்காமல் என்னிடம் சொல்லலாம். அதை நான் ஏற்றுக் கொள்வேன்.”
அந்த அமைச்சர் இப்போது பேச ஆரம்பித்தார்: “மன்னரே, தாங்கள் மிகவும் நேர்மையானவர். திறமையானவர், நல்ல மனம் படைத்தவர். ஆனால், தங்கள் ஆட்சியில் சில குறைகள் இருக்கின்றன.”
அந்த அமைச்சர் மன்னரின் ஆட்சியில் உள்ள குறைகளைத் தயங்காமல் தெளிவாக எடுத்துரைத்தார். அவர் கூறியதில் உண்மை இருந்தது. மன்னர் அவரைப் பாராட்டி, அவருக்கும் ஒரு வைரக்கல்லைப் பரிசாகத் தந்து அனுப்பினார்.
அடுத்த நாள் காலை கடைசியாக வந்த அமைச்சரைத் தவிர, மற்ற அமைச்சர்கள் மன்னரைச் சந்தித்தார்கள்.
“மன்னரே, நேற்று தாங்கள் எங்களுக்குப் பரிசாகத் தந்த வைரங்கள் அனைத்தும் போலியானவை என்பதை அறிகிறோம். தாங்கள் யாரிடமோ ஏமாந்து இந்தப் போலி வைரங்களை வாங்கியிருக்கிறீர்கள்.”
மன்னர் சிரித்தார்.
“நான் பரிசாகக் கொடுத்த வைரங்கள் அனைத்தும் போலி வைரங்கள் என்பது எனக்கு முன்பே தெரியும்.”
மன்னரின் இந்தப் பதிலைக் கேட்டு அமைச்சர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.
“மன்னரே, எதற்காக எங்களுக்குப் போலியான வைரங்களைத் தந்தீர்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?”
“அமைச்சர்களே, நீங்கள் புகழ்ந்து பேசியவற்றை எல்லாம் சபையிலேயே சொல்லிவிடலாமே! நான் எதற்கு உங்களைத் தனியாக அழைத்து கருத்துக் கேட்கிறேன் என்று நீங்கள் யோசித்திருந்தால் இப்படிப் புகழ்ந்து தள்ளியிருக்க மாட்டீர்கள். உங்களில் ஒருவரைத் தவிர, மற்ற அனைவரும் என்னிடம் போலியான கருத்தைச் சொன்னீர்கள். எனவே நான் உங்களுடைய போலியான பதில்களுக்கு ஏற்றவாறு போலியான வைரங்களைப் பரிசாகத் தந்தேன். ஒரே ஒரு அமைச்சர் மட்டும் உண்மை பேசினார் என்று சொன்னேன் அல்லவா, அவருக்கு மட்டும் நிஜ வைரக்கல்லைப் பரிசாகத் தந்தேன்” என்றார் மன்னர்.
இதைக் கேட்ட அமைச்சர்கள் தங்களின் தவறை உணர்ந்தார்கள்.
தன் மகனை நாட்டின் மன்னராக முடிசூட்டி, உண்மையைப் பேசிய அமைச்சரை நாட்டின் முதல் அமைச்சராக நியமித்தார் மன்னர்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago