கண்டுபிடிப்புகளின் கதை: வெல்க்ரோ

 

து

ணி, ஷு, செருப்பு, திரைச்சீலை, கடிகாரப் பட்டை, கையுறை, பை போன்றவற்றில் பசை இல்லாமல் ஒட்டுவதற்கு வெல்க்ரோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் இருக்கும் கொக்கிகளையும் இன்னொரு பக்கம் இருக்கும் இழைகளையும் ஒன்றோடு ஒன்று சேர்க்கும்போது இறுக்கமாகப் பற்றிக்கொள்கிறது. இதுதான் வெல்க்ரோவின் எளிய நுட்பம். இதை ‘ஜிப் இல்லாத ஜிப்’ என்றும் அழைக்கிறார்கள்.

1948-ம் ஆண்டு பொறியாளரும் மலையேற்ற வீரருமான ஜார்ஜ் டி மெஸ்ட்ரல் தன் நாயுடன் மலையேறினார். வீட்டுக்குத் திரும்பிய பிறகு அவரது உடையிலும் நாயின் வாலிலும் ஆடையொட்டிச் செடியின் காய்கள் ஒட்டியிருப்பதைக் கண்டார். மெதுவாக ஒவ்வொன்றையும் நீக்கினார். அப்போதுதான் இந்தக் காய்கள் எப்படி உடையிலும் நாயின் வாலிலும் ஒட்டிக்கொள்கின்றன என்று ஆராய்ச்சியில் இறங்கினார்.

6chsuj_invention.jpg ஜார்ஜ் டி மெஸ்ட்ரல்

காயின் மேலிருந்த முட்கள்தான் மென்மையான துணியில் ஒட்டிக்கொண்டிருக்கின்றன என்பதை அறிந்தார். மென்மையான இழைகளில் கொக்கிகள் மாட்டிக்கொண்டால் அவை இறுக்கமாகப் பற்றிக்கொள்ளும் என்ற முடிவுக்கு வந்தார். இந்த நுட்பத்தை வைத்து எளிமையாக பிரித்துச் சேர்க்கும் ஒரு பொருளைக் கண்டுபிடிக்க முடிவு செய்தார்.

தன்னுடைய கண்டுபிடிப்பைச் செயல்படுத்துவதற்காக பிரான்ஸுக்குச் சென்றார். அங்கிருந்த நெசவாளர்கள் இப்படிப் பசை இல்லாமல் ஒட்டும் பொருளை உருவாக்க வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டனர். பட்டு நெசவாளர் ஒருவர் மெஸ்ட்ரலுக்கு உதவ முன்வந்தார். அவர் கொடுத்த பஞ்சு இழைகளில் கொக்கிகள் ஒட்டிக்கொண்டன. அந்த மகிழ்ச்சி சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. கொக்கிகளும் இழைகளும் பிரிந்துவிட்டன. பலவித முயற்சிகளுக்குப் பிறகு, நைலான் இழைகளைக் கொண்டு பரிசோதனைகளைச் செய்தார். அது வெற்றியைத் தேடித் தந்தது. என்றாலும் பெருமளவில் வெல்க்ரோவை உருவாக்குவதற்கு மேலும் 10 ஆண்டுகள் தேவைப்பட்டன. 1955-ம் ஆண்டு தன்னுடைய கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை பெற்றார் மெஸ்ட்ரல்.

ஆரம்பத்தில் வெல்க்ரோவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லை. அமெரிக்காவின் நாசா விண்வெளி நிலையம் வெல்க்ரோவைப் பயன்படுத்த ஆரம்பித்தது. 1968-ம் ஆண்டுக்குப் பிறகு பெரிய நிறுவனங்கள் வெல்க்ரோவைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தன. 1980-ம் ஆண்டில் சர்வதேச ஷு நிறுவனங்களான பியுமா, அடிடாஸ், ரீபோக் போன்றவை குழந்தைகளுக்கான ஷுக்களில் வெல்க்ரோவைப் பயன்படுத்தின.

வெல்க்ரோ பயன்பாடு அதிகரித்தபோது, கொக்கி – இழைக்கான காப்புரிமை முடிந்துவிட்டது. இதனால் பலரும் வெல்க்ரோவை குறைந்த விலையில் குறைந்த தரத்தில் உருவாக்க ஆரம்பித்தனர். வெல்க்ரோ தன்னுடைய பெயரையும் தரத்தையும் நிலைநாட்டப் போராடிக்கொண்டிருந்தது. அதேநேரத்தில் உலகம் முழுவதும் மலிவு விலை வெல்க்ரோ பரவிவிட்டது.

வெல்வெட் என்ற இழைகளில் இருந்தும் க்ரோசே என்ற கம்பிகளில் இருந்தும் ’வெல்க்ரோ’ என்ற பெயர் உருவானது. இன்று 159 நாடுகளில் விண்வெளி உடைகளில் இருந்து செயற்கை இதயம்வரை சுமார் 300 பொருட்களில் வெல்க்ரோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொக்கிகள் எந்த அளவுக்கு இழைகளைப் பற்றிக்கொண்டிருக்கின்றன என்பதைப் பொறுத்து வெல்க்ரோவின் வலிமை அதிகரிக்கும்.

(கண்டுபிடிப்போம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

மேலும்