டிங்குவிடம் கேளுங்கள்: உணவு இன்றி வாழக்கூடிய உயிரினங்கள் உண்டா?

By செய்திப்பிரிவு

சாப்பிடாமல் வாழக்கூடிய உயிரினங்கள் உண்டா, டிங்கு? - பி. முகமது உமர், 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் மேல்நிலைப் பள்ளி, திருச்சி.

உயிரினங்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான மூல ஊட்டச்சத்துக்கு உணவு முக்கியமானது. ஒவ்வோர் உயிரினத்துக்கும் உணவு தேவை. தாவர உண்ணிகள், மாமிச உண்ணிகள், ஒட்டுண்ணிகள், சாறுண்ணிகள் எனப் பலவிதங்களில் உயிரினங்கள் ஊட்டச்சத்துகளைப் பெற்றுக்கொள்கின்றன.

ஆனால், சில உயிரினங்கள் நீண்ட உறக்கத்தில் இருக்கும்போதோ அல்லது செயலற்ற நிலையில் இருக்கும்போதோ மாதக் கணக்கில் உணவை எடுத்துக்கொள்ளாமல் உயிர் வாழ்கின்றன. அரச பெங்குவின்களால் சில வாரங்கள் உணவு எடுத்துக்கொள்ளாமல் உயிர் வாழ முடியும்.

நீர்க்கரடிகளால் (Tardigrades) ஆண்டுக் கணக்கில் உணவு இல்லாமல் வாழ முடியும். இப்படிக் கடுமையான தட்பவெப்ப நிலை நிலவும் இடங்களில் வாழக்கூடிய உயிரினங்கள், நீண்ட காலம் உணவு எடுத்துக்கொள்ளாமலும் உயிர் வாழக்கூடிய வகையில் தகவமைப்பைப் பெற்றுள்ளன, முகமது உமர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE