நினைத்ததைச் சொல்லும் மந்திர கணக்கு

By வை.ரவீந்திரன்

ஒரு ஆச்சரியமான மாயக் கணக்கின் மூலம் உங்களுடைய தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா வயதை மட்டுமல்லாமல் நீங்கள் நினைத்த எண்ணையும் கண்டுபிடிக்க முடியும். முயற்சி செய்து பார்க்கிறீர்களா?

முதலில் 0 முதல் 9 வரையிலான எண்ணில் ஒன்றை நினைத்துக்கொள்ளுங்கள். அந்த எண்ணை இரண்டால் பெருக்கினால் ஒரு விடை கிடைக்கும். அதனுடன் ஐந்தை கூட்டிக் கொள்ளவும்.

இப்போது கிடைக்கும் விடையை 50-ஆல் பெருக்கவும். இப்போது உங்களுக்கு ஒரு விடை கிடைக்கும். அதனுடன் 1764 என்ற எண்ணை கூட்டவும். அந்த விடையில் இருந்து உங்கள் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா என யாரரவது ஒருவருடைய பிறந்த ஆண்டையாவது கழிக்கவும். அப்போது, 3 இலக்கத்தில் ஒரு விடை உங்களுக்குக் கிடைக்கும்.

அந்த விடையில், முதலாவது இருப்பது நீங்கள் நினைத்த எண். அடுத்த இரு இலக்க எண் யாருடைய பிறந்த ஆண்டை கழித்தீர்களோ, அவர்களுடைய வயது.

உதாரணமாக, நீங்கள் 9 என்ற எண்ணை நினைத்ததாக வைத்துக் கொள்ளுங்கள். முதலில் 9ஐ இரண்டால் பெருக்கினால் 18 கிடைக்கும். அத்துடன் ஐந்தைக் கூட்டும்போது 23 என்ற விடை கிடைக்கும். அந்த எண்ணை 50-ஆல் பெருக்குவோம். அப்போது, 1150 கிடைக்கும். அத்துடன் 1764ஐக் கூட்டும்போது 2914 கிடைக்கும். உங்கள் அப்பா 1974-ல் பிறந்தார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது 2914 என்ற எண்ணில் இருந்து 1974-ஐக் கழித்தால் கிடைப்பது 940.

இதில், 9 என்பது நீங்கள் நினைத்த எண். கடைசி இரு எண்களான 40 உங்கள் தந்தையின் வயது.

இதுபோல, நீங்களும் செய்து நண்பர்களை அசத்தலாமே!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்