டிங்குவிடம் கேளுங்கள்: வியாழன் கோளின் வாயு ஏன் வெளியேறவில்லை?

By செய்திப்பிரிவு

வியாழன் வாயுக் கோளம். அதிலிருக்கும் வாயுக்கள் எப்படி அண்டவெளியில் வெளியேறாமல் இருக்கின்றன, டிங்கு? - ஆர்.எம். நித்திலன், 6-ம் வகுப்பு, நாசரேத் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கன்னடபாளையம், சென்னை.

வியாழன் கோள் பெரும்பாலும் வாயுவாக இருந்தாலும் உள்கருவில் பாறைகளும் உலோகங்களும் இருக்கின்றன. சூரியக் குடும்பத்தில் மிகப் பெரிய கோள் வியாழன். அதன் ஈர்ப்பு சக்தி அதிகம். அதனால், வாயுக்கள் வெளியே சென்றுவிடாமல் ஈர்த்து வைத்திருக்கிறது.

வாயுவை மட்டுமல்ல, சிறுகோள்களையும் ஈர்த்துத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. அதனால்தான் வியாழன், செவ்வாய் கோள்களுக்கு இடையில் லட்சக்கணக்கான சிறுகோள்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன, நித்திலன்.

பைரவா என்கிற நன்றியுள்ள ஜீவன் எங்கள் வீட்டில் இருந்தது. பக்கத்து வீட்டுக்காரர்கள் புகார் சொல்லிக்கொண்டே இருந்ததால், பைரவாவைத் தாத்தா ஊருக்கு அனுப்பிவிட்டார்கள். பைரவா இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. என்ன செய்வது டிங்கு? - மோ. அதுல்யா, 7-ம் வகுப்பு, சொக்கன் செட்டியார் - மல்லம்மாள் மேல்நிலைப் பள்ளி, வதம்பச்சேரி, கோவை.

உயிரற்ற பொருள்கள், உயிருள்ள ஜீவன்கள், சக மனிதர்கள் என யார் மீது, எதன் மீது அன்பு வைத்தாலும் நம்மைவிட்டுச் செல்லும்போது கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், அந்தக் கஷ்டத்திலிருந்து நாம் விரைவில் வெளிவந்துவிட வேண்டும்.

பைரவா உங்கள் தாத்தா வீட்டுக்குத்தான் சென்றிருக்கிறது, அங்கே உங்களைப் போலவே அவர்களும் நன்றாகக் கவனித்துக்கொள்வார்கள் என்பதை நினைத்து ஆறுதல் அடையுங்கள். வாய்ப்பு கிடைக்கும்போது ஊருக்குச் சென்று பார்த்துவிட்டு வாருங்கள், அதுல்யா.

நெருப்புக்கோழி நெருப்பைச் சாப்பிடுமா அல்லது நெருப்பைக் கக்குமா, டிங்கு? - ச. குகன், 5-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

ஆஸ்ட்ரிச் என்கிற நெருப்புக்கோழி நெருப்பைச் சாப்பிடவும் செய்யாது, நெருப்பைக் கக்கவும் செய்யாது. நெருப்புக்கோழியின் தாயகம் ஆப்பிரிக்கா. அங்குள்ள பாலைவனங்களில் காணப்படும் நெருப்பு போன்ற வெப்பத்தைத் தாங்குவதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம். மற்ற பறவைகளைப் போல நெருப்புக்கோழியின் உடல் முழுவதும் இறகுகளால் மூடப்பட்டிருக்காது.

கழுத்து, தலை, கால்கள் எல்லாம் இறக்கைகள் இன்றியும் உடலைச் சுற்றியுள்ள இறக்கைகளும் அடர்த்தியாக இல்லாமல் ஆங்காங்கே தோல் தெரியும்விதத்திலும் நெருப்பிலிருந்து தப்பி வந்ததுபோல் இருப்பதால் நெருப்புக்கோழி என்று பெயர் வைத்திருக்கலாம் குகன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்