நோமோபோபியா என்றால் என்ன?

By த.சந்தியா

விசித்திரமான உண்மைகள்: 1. நாம் குளிக்கும்போதுதான் நிறைய யோசனைகள் வரும். குளியல் உடலை மட்டுமல்ல, உள்ளத்தையும் உற்சாகம்கொள்ள வைக்கும் என்பதால்தான் தெளிவான சிந்தனைகள் தோன்றுகின்றன.

2. கதைகளில் வரும் ‘யூனிகார்ன்’தான் ஸ்காட்லாந்தின் தேசிய விலங்கு.

3. ஆப்பிள்கள் 30-40 டிகிரி ஃபாரன்ஹீட் குளிர்ச்சியில் வைக்கப்பட்டால், 12 மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

4. ஹேஷ்டேக்கின் உண்மையான பெயர் ஆக்டோதோர்ப் (octothorpe)

6. விழுந்துவிடுமோ என்கிற பயத்துடனும் உரத்த ஒலி கேட்டுவிடுமோ என்கிற பயத்துடனும்தான் பிறக்கிறோம்.

7. 1830களில் கெட்ச்சப் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது.

8. மனிதர்களால் விலங்குக்களுக்கு அலர்ஜி ஏற்படுவதற்கு இறந்த செல்கள்(dander) காரணமாக இருக்கலாம்.

9. வெப்பமண்டலப் பகுதிகளில் விளைவிக்கப்படும் ஆரஞ்சுப் பழங்கள் பச்சை நிறத்தில் இருக்கின்றன.

10. பன்றிகளால் கழுத்தை நிமிர்த்தி வானைப் பார்க்க முடியாதபடி உடலமைப்பு அமைந்திருக்கிறது.

11. மின்சார நாற்காலி ஆல்ஃபிரட் போர்ட்டர் சவுத்விக் (Alfred Porter Southwick ) என்கிற பல் மருத்துவரால் கண்டறியப்பட்டது.

12. நோமோபோபியா (nomophobia) என்றால் மொபைல் போன் இணைப்பு இல்லை என்றால் வரும் பயம்.

13. நெப்டியூனை வெறும் கண்களால் பார்க்க முடியாது.

14. குளிர்ந்த நீரை விட வெதுவெதுப்பான நீர் விரைவாக ஆவியாகிறது. ஆவியாதல் குளிரூட்டும் விளைவை உருவாக்குவதால், தண்ணீர் உடனடியாகக் குளிர்ச்சியடைந்து குளிர்ந்த நீரை விட முன்னதாகவே உறைந்துவிடும்.

15. பொதுவாகப் பெண்களைவிட ஆண்கள்தான் நிறக்குருடு பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE