‘இந்து தமிழ் திசை’ - வாக்கரூ இணைந்து வழங்கும் ‘நற்சிந்தனை நன்னடை விருது’

By செய்திப்பிரிவு

மாணவர்களின் நல்ல செயல்களை ஊக்குவிக்கும் பள்ளிகளுக்கு ’நற்சிந்தனை நன்னடை விருது - 2024’ இன்றைய தலைமுறை மாணவர்கள் நல்ல சிந்தனை களுடன் பல்வேறு சமூகநலச் செயல்களை ஆர்வத்துடன் செய்துவருகின்றனர். அவர்களது நற்சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் பலரும் அறிந்திடச் செய்யும் நோக்கில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்படுகிறது.

ஆசிரியர், பெற்றோரின் வழிகாட்டுதலோடு பல நல்ல செயல்களைச் செய்துவரும் மாணவர்களைப் பொதுவெளியில் பாராட்டி ஊக்குவிப்பதன் மூலமாக இன்னும் பல மாணவர்கள் இப்படியான நற்செயல்களில் ஈடுபடுவார்கள்.

மாணவர் செய்யும் நற்செயலானது சிறிய செயலாகவும் இருக்கலாம். சக மாணவர் படிப்பதற்குத் துணையாக இருப்பது, ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவருக்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்கித் தருவது, பள்ளியின் மேம்பாட்டிற்கான செயல்களை முன்னெடுப்பது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்தச் செயலாயினும் கல்வி மற்றும் பள்ளி தொடர்பானதாக இருக்க வேண்டியது சிறப்புக்குரியது.

நற்செயல்கள் செய்யும் மாணவர்களைப் பற்றி கீழேஉள்ள முகவரி அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். உடன் மாணவரின் படம் மற்றும் செயல் பாட்டிற்கான படங்களையும் இணைத்து அனுப்புங்கள்.

நற்செயலாற்றி வரும் மாணவர்களைப் பாராட்டுவதோடு, அந்த மாணவர்களை ஊக்கப்படுத்திவரும் பள்ளி களுக்கும் ’நற்சிந்தனை நன்னடை விருது - 2024’ வழங்கிக் கௌரவிக்க உள்ளோம்.

அனுப்ப வேண்டிய முகவரி: ‘நற்சிந்தனை நன்னடை விருது’

இந்து தமிழ் திசை, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை 600 002.

மின்னஞ்சல்: https://www.htamil.org/NN2023

கூடுதல் விவரங்களுக்கு: murugesan.m@hindutamil.co.in

கடைசி நாள்: 11 பிப்ரவரி 2024நற்செயல்களைப் பாராட்டுவோம்!சமுதாயத்தில் நல்லவை நடைபெறத் துணைநிற்போம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE