டிங்குவிடம் கேளுங்கள்? - தேன் எப்படி இனிக்கிறது?

By Guest Author

தேன் எப்படி இனிக்கிறது, டிங்கு? - ஆர். நிவேதா, 5-ம் வகுப்பு, ஆர்கா தி கிரீன் பள்ளி, குலசேகரம், கன்னியாகுமரி.

வேலைக்காரத் தேனீக்கள் நீண்ட தொலைவு பயணம் செய்து, பூக்களில் உள்ள பூந்தேனை உறிஞ்சுகின்றன. இந்தப் பூந்தேனில் பெரும்பாலும் நீரும் குளுக்கோஸ், சுக்ரோஸ், ஃபிரக்டோஸ் ஆகிய சர்க்கரைகள்தாம் இருக்கின்றன. உறிஞ்சிய பூந்தேன், தேனீக்களின் வயிற்றில் உள்ள ஓர் அறையில் சேகரிக்கப் பட்டு, கூட்டுக்கு எடுத்து வரப்படுகிறது. அப்படி வருவதற்குள் பூந்தேன் சில வேதிவினைக்கு உள்படுகிறது.

கூட்டில் இருக்கும் தேனீக்கள், வேலைக்காரத் தேனீக்களிடமிருந்து பூந்தேனைப் பெற்று, தங்கள் வாய்களால் நீர்ச்சத்தைக் குறைக்கின்றன. அப்போது உருவாகும் நொதிகள் சர்க்கரைகளையும் புரதங்களையும் உடைத்து, அமிலக் கரைசலாக மாற்றுகின்றன.

இதன் மூலம் பாக்டீரியா, பூஞ்சைகளால் தேன் கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படுகிறது. 70 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக நீர்ச்சத்து குறைந்த இந்தத் தேன் அறுகோண வடிவில் இருக்கும் தேன் கூட்டின் அறைகளில் வைக்கப்படுகிறது. மேலும், நீர்ச்சத்தைக் குறைக்கும் விதத்தில், தேனீக்கள் தங்கள் இறக்கைகளால் சூடான காற்றைச் செலுத்துகின்றன. இப்போது எளிதில் கெட்டுப்போகாத, இனிப்பான தேன் உருவாகிவிடுகிறது, நிவேதா.

தஞ்சை பெரிய கோயிலில் இருக்கும் நந்தி வளர்ந்துகொண்டே இருப்பதாகச் சொல்கிறார்களே, உண்மையா டிங்கு? - என். அபிஷேக், 7-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.

பாறையை வெட்டி எடுத்துச் செதுக்கப்பட்டிருக்கிறது பெரிய கோயில் நந்தி. அந்த நந்திக்கு மேல் பாறைகளால் ஆன மேற்கூரையும் கட்டப்பட்டிருக்கிறது. என் பாட்டி சின்ன வயதிலிருந்தபோதும் நந்தி இதே அளவில்தான் இருந்தது. என் அப்பாவின் சின்ன வயதிலும் நந்தி இதே அளவில்தான் இருந்தது. நான் சின்ன வயதிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன், இப்போதும் அதே அளவில்தான் இருக்கிறது. நந்தி வளர்கிறது என்று சொல்வது கட்டுக்கதை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இதே அளவில்தான் இருக்கிறது, அபிஷேக்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்