விடை தேடும் அறிவியல் 28: கப்பல் எப்படிக் கடலில் மிதக்கிறது?

By நன்மாறன் திருநாவுக்கரசு

அளவில் சிறிய குண்டூசி தண்ணீரில் விழுந்தாலே மூழ்கி விடும்போது, இவ்வளவு பெரிய கப்பல் எப்படிக் கடலில் மிதக்கிறது? பொதுவாகப் படகுகள் மூழ்காமல் இருப்பது குறித்து நமக்கு ஆச்சரியம் இருப்பதில்லை. காரணம், படகு மரத்தால் செய்யப்பட்டிருக்கிறது. மரம் தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டது. அதனால், படகும் தண்ணீரில் மிதக்கிறது. ஆனால், கப்பல் எஃகினால் அல்லவா செய்யப்பட்டிருக்கிறது! எஃகு தண்ணீரில் மூழ்கும் தன்மை கொண்டது. பிறகு எப்படிக் கப்பல் மட்டும் மிதக்கிறது?

அதற்கு முன் தண்ணீரில் பொருள்கள் ஏன் மூழ்குகின்றன என்பதை அறிந்துகொள்வோம். ஒரு வாளியை எடுத்து, அதில் நீரை நிரப்பிக்கொள்ளுங்கள். இப்போது அந்த வாளியில் ஒரு கல்லைத் தூக்கிப் போடுங்கள். என்ன ஆகும்? அந்தக் கல் நீரில் மூழ்கிவிடும். இதற்குக் காரணம் ஈர்ப்பு விசை. நாம் எடையுள்ள எந்தப் பொருளை வீசினாலும் அது ஈர்ப்பு விசையின் காரணமாகக் கீழே இழுக்கப்படும். அவற்றின் எடையைப் பொறுத்து அந்தப் பொருள் கீழே இழுக்கப்படும் வேகம் மட்டும் மாறுபடும். இதுதான் தண்ணீரிலும் நடைபெறுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE