விடை தேடும் அறிவியல் 24: விண்வெளியில் தூரத்தை அளப்பது எப்படி?

By நன்மாறன் திருநாவுக்கரசு

உங்கள் வீட்டிலிருந்து பக்கத்துத் தெருவில் இருக்கும் கடை எவ்வளவு தூரம் என்று கேட்டால் 50 மீ. என்று சொல்லிவிடுவீர்கள். உங்கள் ஊரிலிருந்து பக்கத்து ஊர் எவ்வளவு தூரம் என்று கேட்டால் 50 கி.மீ. என்று பதிலளிக்கலாம். தவறில்லாமல் தூரத்தை அளவிடுவதற்கு கூகுள் மேப் இருக்கிறது. சந்தேகம் இருந்தால் நடந்தே சென்றுகூட உறுதி செய்துகொள்ளலாம். ஆனால், கோள்கள், நட்சத்திரங்களுக்கு இடையேயான தூரத்தை அளவிடுவதற்கு என்ன செய்வது? விஞ்ஞானிகள் அதையும் சரியாகக் கணக்கிடுவதற்குச் சில வழிகளை வைத்துள்ளனர்.

விண்வெளியில் உள்ள விண்மீன்களுக்கு இடையேயான தூரத்தைக் கணக்கிடுவதற்கு இரண்டு முக்கியமான வழிகள் இருக்கின்றன. முதலாவது முக்கோணவியல் இடமாறு முறை (Trigonometric Parallax). உங்கள் முகத்துக்கு நேராக ஒரு விரலை நீட்டுங்கள். அந்த விரலை இடது கண்ணை மூடிக்கொண்டு வலது கண்ணால் பாருங்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE