இளம் சாதனையாளர்- அக்காவுக்கு கீ போர்டு தம்பிக்கு டிரம்ஸ்

By பிருந்தா சீனிவாசன்

என்றதும் நினைவுக்கு வருவது என்ன? தென்னாப்ரிக்காவில் உள்ள பெரிய வைரச் சுரங்கம்தானே? கோயம்புத்தூர் அவிலா கான்வென்டில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி கிம்பர்லி, இசைக் கருவிகளையே சுரங்கமாக நினைக்கிறார்.

அவற்றில் இருந்து தோண்டத் தோண்டக் குறையாத இசை பெருக் கெடுக்கும் என்கிறார். கிம்பர்லியின் இரண்டாவது பிறந்தநாளுக்கு அவருடைய அப்பா ஒரு கீ போர்டைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். அதில் இருந்து கிம்பர்லிக்கு இசை ஆர்வம் ஏற்பட்டது.

அந்த கீ போர்டில் தானாகவே வாசித்தவர், மூன்றாம் வகுப்பு படிக்கும்போது கீ போர்டு வகுப்பில் சேர்ந்தார். கிம்பர்லிக்காக அவருடைய அப்பாவும் கீ போர்டு கற்றுக் கொண்டாராம்.

ராக் அண்ட் பாப்

கிம்பர்லிக்கு கித்தார் வாசிக்கவும் தெரியும். லண்டன் மியூசிக் அகாடமி, ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் இருக்கும் குறிப்பிட்ட நகரங்களில் ‘ராக் அண்ட் பாப்’ எனப்படும் இசைத் தேர்வை நடத்தும். இதில் பங்கு பெறுகிறவர்கள், கண்காணிப்பாளர் சொல்லும் இசைக்குறிப்பை வாசித்துக் காட்ட வேண்டும்.

அதற்கேற்ப அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும். இந்த வருடம் நடந்த தேர்வில் கிம்பர்லி நூற்றுக்கு 98 மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறார். கீ போர்டில் 8-வது கிரேடிலும் கித்தாரில் 5-வது கிரேடிலும் இருக்கிறார்.

“ஸ்டேட் லெவல் அறிவியல் கண்காட்சியிலும் ஸ்போர்ட்ஸ் மீட்டிலும் நான் கீ போர்டு வாசித்தது பெருமையா இருக்கு. இன்னும் நிறைய கத்துக்கிட்டு இசைத்துறையில் சாதிக்கணும்” என்கிறார் கிம்பர்லி.

அக்கா வழியில்

கிம்பர்லி கீ போர்டு வாசிப்பதைப் பார்த்து அவருடைய தம்பி ஜிம் கில்மோருக்கும் இசைக் கருவிகள் மீது ஆர்வம் வந்துவிட்டது. ஏழாம் வகுப்பு படிக்கும் கில்மோர், அசத்தலாக டிரம்ஸ், கித்தார் வாசிக்கிறார். அக்கா, தம்பி இருவருமே பாலரத்னா  விருது வாங்கியிருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்