# மீன் இனத்தைச் சேர்ந்தது கடல் குதிரை.
# லத்தீன் மொழியில் கடல்குதிரையின் பெயர் ஹிப்போகேம்பஸ். அதன் பொருள் குதிரைத் தட்டான்.
# மீனைப் போல படுக்கைவாட்டில் நீந்தாமல் நிமிர்ந்து நின்று நீந்தும். இதன் முகம் குதிரையின் முகம் போலவே இருப்பதால் ‘கடல் குதிரை’ என்று அழைக்கிறார்கள்.
# கடல் குதிரை தனது செவுள்களால் சுவாசிக்கும்.
# உலகில் உள்ள உயிரினங்களிலேயே குட்டிகளைப் பிரசவிக்கும் ஒரே ஆண் உயிரி கடல் குதிரைதான். ஆண் கடல் குதிரையின் உடலில் ஒரு சிறிய தோல் பை வளர்ந்திருக்கும். பெண் கடல் குதிரை அந்தப் பைக்குள் முட்டையிடும்.
# முட்டைகளை பொரித்து குட்டிகளை வளர்க்கும் கடமை ஆண் கடல் குதிரையைச் சாரும். 50 முதல் 1500 முட்டைகள் வரை இட்டு பிரசவிக்கும். முட்டைகளை அடை வைக்கும் காலம் 14 நாட்கள் தொடங்கி 4 வாரங்கள் வரை.
# தந்தையின் வயிற்றிலிருந்து பிரியும் குட்டிகளில் ஆயிரத்தில் ஒன்றுதான் பெரிதாகும்.
# குஞ்சுகள் பைக்குள்ளேயே வளர்ந்த பிறகே இரை தேட வெளியே வரும்.
# கடல் குதிரைகள் கூர்மையான பார்வைத்திறன் உடையவை. முகத்தின் பக்கவாட்டில் அவற்றின் கண்கள் இருப்பதால் முன்னும் பின்னும் பார்க்க முடியும். வேட்டையாடுவதற்குப் பார்வைத் திறன் உதவுகிறது.
# கடல்குதிரையின் நீள்வடிவ கூர்மையான முகம், உணவைச் சிறிய இண்டு இடுக்குகளிலும் புகுந்து தின்பதற்கு உதவுகிறது. உணவைப் பார்த்தவுடன் ‘வாக்குவம் க்ளீனர்’ எந்திரம் போல அதன் மூக்கால் உணவை நேரடியாக உறிஞ்சி விடும். உணவு பெரிதாக இருந்தால் மூக்கு விரிவடையவும் செய்யும். கடல் குதிரை உணவை சுவைப்பதில்லை.
# சிறிய இறால் வகை மீன்களைச் சாப்பிடும். வளர்ந்த கடல் குதிரை நாள் ஒன்றுக்கு 30 முதல் 50 முறை சாப்பிடும். குட்டி கடல் குதிரைகள் ஒரு நாளைக்கு 3,000 உணவுத் துண்டுகளைச் சாப்பிடும்.
# கடல் குதிரையின் வால் பற்றிப் பிடிக்கும் தன்மையுடையது. கடலில் உள்ள புற்கள் மற்றும் பிற தாவரங்களைப் பற்றிக்கொண்டு வேகமான நீர்ப்போக்கால் அடித்துச் செல்லப்படாமல் தப்பித்துவிடும்.
# கடல் குதிரைகள் சூழ்நிலைக்கு ஏற்ப வேகமாக தன் நிறங்களை மாற்றிக்கொள்ளும். ஆண் கடல் குதிரையும், பெண் கடல் குதிரையும் இணையும்போது நிறங்களை மாற்றும்.
# கடல்குதிரைகள் மிக மெதுவாகவே நீந்தும்.
# உலகம் முழுவதும் 30 முதல் 40 வரையிலான கடல் குதிரை வகைகள் உண்டு.
# கடல் குதிரைக்கு பல்லும் வயிறும் கிடையாது. உணவு வெளியேறி விடுவதால் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கும்.
# கடல் குதிரை தன் வாழ்நாள் முழுவதும் செய்யும் இரண்டே வேலைகள் உண்பதும் ஓய்வெடுப்பதும்தான்.
# அரை அங்குலம் முதல் எட்டு அங்குலம் வரை கடல்குதிரையின் அளவுகள் உள்ளன.
# கடல் குதிரைகளுக்கு எதிரிகளிடம் சண்டையிடுவதற்கு எந்த உறுப்புகளும் இல்லை. கூர்மையான பார்வையால் எதிரிகளைக் கண்டவுடன் மறைந்துகொள்ளும் தகவமைப்பு மட்டுமே அதற்குப் பாதுகாப்பு.
# கடல் குதிரையின் ஆயுட்காலம் நான்கு முதல் ஆறு ஆண்டுகள். கடல் குதிரைகளைப் பிடித்து வளர்க்கும்போது அதனால் தாக்குப்பிடிக்க முடியாமல் சீக்கிரமே இறந்துவிடும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago