கற்களை உண்ணும் முதலைகள்

By ஷங்கர்

# முதலைகள் ஊர்வன வகையைச் சேர்ந்தவை.

# ஊர்வன வகையைச் சேர்ந்த விலங்குகளிலேயே உறுதியான உடலைமைப்பைக் கொண்டவை முதலைகளே. இரையை வேட்டையாடுவதற்கு வலுவான தாடைகளையும் கூரான பற்களையும் இவை கொண்டிருக்கின்றன.

# முதலைகளுக்கு வலுவான வால் இருப்பதால் அவற்றால் மணிக்கு 40 கிலோ மீட்டர் வரை வேகமாக நீந்த முடியும்.

# ஆற்றின் கரைகளில் முதலைகள் வாயைப் பிளந்துகொண்டு இருந்தால் அவை இரைக்காகக் காத்திருக்கிறது என்று அர்த்தமில்லை. வாயின் வழியாக வியர்வையை வெளியேற்றுகிறது என்று அர்த்தம்.

# இனப்பெருக்க காலத்தில் முதலைகள் ஆக்ரோஷமாக இருக்கும். மழைக் காலத்தில்தான் முதலைகள் பொதுவாக இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.

# முதலையின் தாடையில் 24 பற்கள் இருக்கும். முதலை இரையை மெல்வதில்லை. பிடித்து பற்களால் நொறுக்கி தின்னவே இவற்றை பயன்படுத்துகின்றன.

# முதலைகள் கற்களையும் உண்ணும். வயிற்றில் உள்ள உணவை அரைப்பதற்காகவும் செரிமானத்திற்கும் அந்தக் கற்கள் பயன்படும். கடினமான கற்கள் மற்றும் எலும்புகளையும் கரைக்கும் அளவுக்கு முதலைகளின் உறுப்புகளுக்கு பலம் உண்டு.

# 99 சதவீத முதலைக் குட்டிகள் பிறந்து ஓராண்டுக்குள்ளாகவே பெரிய மீன்களாலும், நாரைகளாலும் உண்ணப்பட்டுவிடுகின்றன. பெரிய முதலைகளும் குட்டி முதலைகளைச் சாப்பிட்டுவிடும்.

# முதலைகள் தோன்றி 24 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

l முதலைகள் அதிகபட்சமாக 80 ஆண்டுகள் வரை வாழும்.

# முதலைகளால் உணவின்றி அதிக நாட்கள் வாழ முடியும்.

# முதலைகளில் நன்னீர் முதலைகள், உப்பு நீர் முதலைகள் என இரு பெரும் பிரிவுகள் உள்ளன. உப்பு நீர் முதலைகள்தான் முதலை இனங்களிலேயே உருவத்தில் பெரியது

# நீரைத் தேடி வரும் பறவைகள், விலங்குகள், மீன்களை முதலை உணவாக உட்கொள்ளும்.

# அளவில் பெரிய முதலைகள் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த வல்லவை. மனிதர்கள் கவனிக்காத நேரங்களில் தாக்கிவிடும். உப்பு நீர் முதலைகளும் நைல் நதி முதலைகளும் மிக அபாயகரமாகக் கருதப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்