டிங்குவிடம் கேளுங்கள்: அக்னி நட்சத்திரம் உண்டா?

By செய்திப்பிரிவு

‘அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம்’ என்று செய்திகள் வந்தன. அக்னி நட்சத்திரம் என்பது அறிவியலில் இல்லை என்று இஸ்ரோ விஞ்ஞானி சொன்னதையும் படித்தேன். என் குழப்பத்தைத் தீர்த்துவைக்க முடியுமா, டிங்கு?

- ஏ.கே. அஸிலா, 9-ம் வகுப்பு, அ.வே.ரா.மா.வே. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி.

தென் கோளத்தில் இருக்கும் சூரியன் வட கோளத்துக்குள் நுழையும்போது பூமத்திய ரேகைக்கு உச்சியில் இருக்கும். இதனால் வெப்பம் அதிகரிக்கும். கோடைக்காலத்தின் அதிகபட்ச வெப்பநிலை இந்தக் காலகட்டத்தில் உருவாகும். தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் மே முதல் வாரத்தில் வெப்பம் அதிகரித்து, இறுதி வாரத்தில் வெப்பம் தணியும்.

இதைத்தான் அக்னி நட்சத்திரம், கத்திரி வெயில் என்று கூறுகிறார்கள். இந்திய வானியல் 27 நட்சத்திரங்களைக் கொண்டு பிரிக்கப்பட்டிருக்கிறது. அஸ்வினி, கார்த்திகை, பரணி, ரேவதி, திருவாதிரை, கேட்டை போன்ற 27 நட்சத்திரங்களில் ‘அக்னி’ என்கிற ஒரு நட்சத்திரம் இல்லை. அதனால், அறிவியலில் அக்னி நட்சத்திரம் இல்லை என்பது சரியானதுதான், அஸிலா.

குண்டு துளைக்காத உடை எந்தப் பொருள் கொண்டு தயாரிக்கப்படுகிறது, டிங்கு?

- ஜி. இனியா, 6-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

குண்டு துளைக்காத புல்லட் ப்ரூஃப் உடைகள் அராமிட் எனப்படும் மிகவும் வலுவான, நீடித்த இழைகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. அராமிட் முதலில் டயர்களில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. அதன் அதீதமான உறுதித்தன்மை காரணமாக, பின்னர் குண்டு துளைக்காத உடைகள் அவற்றிலிருந்து தயாரிக்கப்பட்டன.

குண்டுகள் போன்று அதிவேகமான பொருள்கள் தாக்கும்போது, அராமிட் இழைகள் அந்த ஆற்றலை உறிஞ்சிச் சிதறடித்து, மனிதர்களைத் தாக்காத வண்ணம் தடுத்துவிடுகின்றன, இனியா.

பாதங்களில் பித்தவெடிப்பு வருவது ஏன், டிங்கு?

- க. சாரு, 5-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.

பித்தவெடிப்புக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பாதங்கள் நம் மொத்த எடையையும் அழுத்தத்தையும் தாங்கக்கூடியவை. குதிகால்களில் எடையும் அழுத்தமும் அதிகரிக்கும்போது, தோல் விரிவடைகிறது. அப்போது நம் தோல் வறண்டு இருந்தால், விரிவதும் சுருங்குவதும் கடினமாக இருக்கும்.

இவ்வாறு மீள்தன்மை குறைவதன் காரணமாக, தோலில் விரிசல்கள் விழும். இதைத்தான் பித்தவெடிப்பு என்கிறோம். உடல் பருமன், நீரிழிவு, தோல் அழற்சி, தைராய்டு போன்ற பல காரணங்களால் பாதங்களில் வெடிப்புகள் ஏற்படலாம். மருத்துவரிடம் சென்று உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது, சாரு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

23 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்