ப
ள்ளிப் பருவத்தில் மதிப்பெண்கள் வாங்குவதற்காகத் திருக்குறளின் மகத்துவம் புரியாமல் மனப்பாடம் செய்து நாமெல்லாம் படித்திருப்போம். உண்மையில் திருக்குறளில் இல்லாத வாழ்வியல் தத்துவங்களே இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் கற்றுத்தந்த வாழ்வியலின் உன்னதத்தை இளைஞர்கள் விரும்பும் வழியில் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள் சிவா சுப்பிரமணியமும் செந்திலும். இதற்காக ‘குறள் பாட்’ என்கிற செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கியிருகிறார்கள் இவர்கள். ஃபேஸ்புக் பக்கத்தில் திருக்குறளையும் அதன் பொருளையும் சொல்கிறது இந்தக் குறள் பாட்.
“இது செயற்கை நுண்ணறிவை நோக்கிய முதல் படி. செயற்கை நுண்ணறிவு மூலமாகத் தமிழை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் ஒரு சிறு முயற்சி. கற்களில் தமிழில் எழுதத் தொடங்கி, ஓலைகள், தாள்கள், அச்சில் புத்தகங்கள் என்ற பயணம் இப்போது கணினியில் தமிழை எழுதும் நிலைக்கு வந்துவிட்டது. இதன் அடுத்த கட்டம் செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதாகவே இருக்கும். தமிழை அடுத்த தலைமுறைக்குக் கடத்த கணினியில் தமிழை எழுதுவதோடு மட்டுமல்லாமல், கணினிக்கே தமிழைக் கற்றுகொடுத்துவிட்டால், மொழியை அழியாமல் அடுத்த தலைமுறைக்குக் கடத்திவிடலாம்” என்று செயற்கை நுண்ணறிவைப் பற்றிச் சுருக்கமாக விளக்குகிறார் சிவா சுப்பிரமணியம்.
‘செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி திருக்குறளை உருவாக்கியது ஏன்?’ என்று கேட்டபோது, “இந்தக் கால இளைஞர்களிடம் திருக்குறளை நேரடியாகப் படிக்கச் சொல்ல முடியாது. அவர்களைக் கவரும்வண்ணம் கேலி கிண்டல்களுடன் மீம் வழியாக நகைச்சுவையாகச் சொன்னால், தமிழை எளிதாகக் கொண்டுசேர்க்க முடியும். இதைக் கருத்தில்கொண்டே குறள் பாட்-ஐ வடிவமைத்தோம்’’ என்கிறார் சிவா சுப்ரமணியம். லண்டனில் பணியாற்றிவரும் இவர், தமிழ் மொழியின் மீது கொண்ட காதலால், தன் நண்பர் செந்தில் உடன் சேர்ந்து உருவாக்கியதே இந்தக் குறள் பாட்.
ஃபேஸ்புக்கில் குறள் பாட் (https://www.facebook.com/kuralbot/?fref=ts) பக்கத்துக்குச் சென்று ‘send message’ என்ற பகுதியை கிளிக் செய்து, 1330 குறள்களின் வரிசை எண்ணை டைப் செய்து அனுப்பினால், அடுத்த நொடியே குறளும் அதற்கான விளக்கமும் அதிகாரமும் பளிச்செனத் தோன்றும். மேலும், குறள்களின் அதிகாரங்களான அறம், பொருள், இன்பம் என்று கூறினால், அந்தந்தப் பாலிலிருந்து குறளை எடுத்துக் கொடுக்கிறது. குறள் மட்டுல்லாமல் புத்தகங்களையும் இந்தக் குறள் பாட் பரிந்துரைக்கிறது. குறள் பாட் செயற்கை நுண்ணறிவைக் கொண்டுள்ளதால், நாம் ஆங்கிலத்தில் கேட்கும் கேள்விகளைப் புரிந்துகொண்டு தமிழில் பதிலளிக்கும். பெரும்பான்மையான பதில்கள் கேலி கிண்டலாகவே இருக்கும். அண்மையில் கனடாவில் நடைபெற்ற தமிழ் இணையதள மாநாட்டில், ஆய்வுக் கட்டுரைக்கான பரிசையும் குறள் பாட் வென்றது.
“குறள் பாட் பக்கத்துக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. இதேபோல பல்வேறு வகையான மென்பொருட்கள், செயலிகள் தமிழில் வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் சிவா சுப்பிரமணியம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago