க
ல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் காலத்திலேயே விளையாட்டிலும் ஜொலிப்பது சுலபமான விஷயம் அல்ல. ஆனால், சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் அக்ஷயா, படிப்பு, விளையாட்டு என இரண்டிலுமே கலக்கிக்கொண்டிருக்கிறார். கூடைப்பந்தாட்ட வீராங்கனையான அவர், அண்மையில் ‘ஆல் இந்தியா இண்டர் யுனிவர்சிட்டி’ போட்டியில் கோப்பை வென்று திரும்பியிருக்கிறார்!
தேசிய ஃபெடரேஷன் கோப்பை போன்ற பல போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர் அக்ஷயா எப்படிக் கூடைப்பந்தாட்டாத்தின் மீது எப்படி விருப்பம் வந்தது என்று கேட்டால், “எல்லாத்துக்கும் அப்பாதான் காரணம்” என்கிறார் அக்ஷயா. “சின்ன வயசிலே எனக்கு கராத்தேதான் ரொம்ப இஷ்டம். ஆனா எங்க அப்பா என்னைக் கூடைப்பந்தாட்டம் விளையாட ஆர்வமூட்டினார். என்னோட அக்கா கூடைப்பந்தாட்ட வீராங்கனை. அதனால என்னையும் கூடைப்பந்தாட்ட வீராங்கனையா பார்க்க அப்பா ரொம்ப ஆசைப்பட்டாரு. தொடக்கத்துல சும்மா விளையாடி பார்ப்போமேனு ஆரம்பிச்சு, இன்னிக்கு அதுவே என்னோட வாழ்க்கையா மாறியிருக்கு” என்று மகிழ்ச்சியாகச் சொல்கிறார் அக்ஷயா.
படிப்புக்கும் விளையாட்டுக்கும் பாதிப்பும் வராமல் இரண்டிலுமே ஜொலிக்கிறார் இந்த வீராங்கனை. நான்கு வயதில் கூடைப்பந்தாட்டம் விளையாடத் தொடங்கியதிலிருந்தே இதைப் பின்பற்றிவருகிறார் அக்ஷயா. “நான் படிச்ச பள்ளிக்கூடமா இருக்கட்டும், இப்போ படிக்கிற காலேஜா இருக்கட்டும், எனக்கு ரொம்பவே ஆதரவு கொடுத்திட்டு வராங்க.
இதுவரை 95 சதவீதத்துக்குக் கீழே மதிப்பெண் குறைஞ்சதே இல்ல. அதனாலயே எங்க வீட்ல எனக்கு ரொம்ப சப்போர்ட்” என்று சொல்கிறார் அக்ஷயா.
தேசிய அளவில் விளையாடுவது என்பது அக்ஷயாவின் 10 ஆண்டு கனவு. அந்த ஜெர்சியைப் போட்டுக்கொண்டு விளையாட வேண்டும் என்ற கனவு நிறைவேறிய தருணத்தை இப்போதும் பெருமையாகச் சொல்கிறார் அக்ஷயா.
“ஜெர்சியப் போட்டுக்கொண்டு கோர்ட்குள்ள போகும்போதெல்லாம் அந்த நொடி இந்த உலகத்தில வேறு எதுவுமே பெருசு இல்லைன்னு எனக்குத் தோணும். ஆனா, தேசிய அளவுல விளையாடுவதற்கு முன்னாடி நான் தொடர்ந்து 8 முறை தேசிய அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கேன்.
மனம் வெறுத்துபோய் இனி கூடைப்பந்தைத் தொடக் கூடாதுனுக்கூட முடிவு பண்ண காலமும் உண்டு. அந்த நேரத்திலெல்லாம் என்னோட அப்பாவும் என்னோட பயிற்சியாளரும்தான் தன்னம்பிக்கை கொடுத்தாங்க. பெரிய ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தேசிய அளவிலான போட்டியில் விளையாடி பெயர் பெற்றேன். அடுத்ததாக, எஸ்.எஸ்.என். கோப்பைக்குத் தயாராகிக்கிட்டு இருக்கேன். இந்தப் போட்டி ரொம்ப முக்கியமானதும் கடினமானதும்கூட. கண்டிப்பாக இதில் ஜெயிச்சாகணும். அப்புறம், இனி என்ன நடந்தாலும் சரி, கூடைப்பந்தாட்டம் தான் வாழ்க்கைனு முடிவு பண்ணிட்டேன்” என்று கூடைப்பந்தாட்டக் காதலைச் சொல்கிறார் அக்ஷயா.
இவரது கூடைப்பந்தாட்ட பயணம் வெற்றிகரமாகத் தொடர வாழ்த்துவோம்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago