விச்சு: ஏம்ப்பா, இந்த டப்பிங் படங்களுக்குன்னு ஸ்பெஷலா போஸ்டர் ரெடி பண்ணுவாங்களே, பாத்துருக்கியா?
கிச்சு: டப்பிங் பட போஸ்டர் பாத்திருக்கேன். ஆனா, அதுல இன்னா ஸ்பெஷலு?
விச்சு: இல்லபா. இப்போ, ரஜினி நடிச்ச பழைய இந்திப் படத்த தமிழ்ல டப்பிங் பண்ணும்போது, மெயின் ஹீரோவ போஸ்டர்ல காட்டவே மாட்டாங்க. ஏதோ ரஜினிதான் படத்துல மெயின் ஹீரோன்ற மாதிரியே போஸ்டர் அடிப்பாங்க.
கிச்சு: அதுல என்ன தப்புங்கறேன்? நம்ம ஊர்ல அமிதாப் மெயின் ஹீரோவா நடிச்ச படம்னு சொன்னா, எவன் வருவான்? ரஜினின்னா நல்லா தெரிஞ்ச ஹீரோ. பாவம் அந்த டப்பிங் பட புரட்யூசரும் கொஞ்சம் காசு பாக்கட்டுமே? இன்னா தப்பு அதுல?
விச்சு: ஆமாம்பா. இப்படி போஸ்டர்ல ஏமாத்தி, டிரைலர்ல ஏமாத்தி பாத்துருப்ப. ஆனா, ரஜினி மாதிரி ஒரு பெரிய ஹீரோவே இல்லாம, அந்த ஹீரோவோட பேர மட்டும் போட்டு ஏமாத்துனத கேள்விப்பட்டு இருக்கியா?
கிச்சு: சரி, ஏதோ புது மேட்டர் சொல்லப்போறன்னு தெரியுது. சுத்தி வளைக்காம சீக்கிரமா சொல்லு.
விச்சு: ராம்போ படம், நம்ம சில்வஸ்டர் ஸ்டாலன் நடிச்சது. தெரியுமில்ல?
கிச்சு: ஆமாம்பா, ஸ்டாலின் நடிச்சது. 1986-ல அதோட ரெண்டாவது பாகம்கூட மெட்ராஸ்லயே ஒரு மாசம் ஓடுச்சே...
விச்சு: ஆங். அதேதான். நம்ம ஆளுங்க எல்லாம் ராம்போ, ராம்போன்னு கொண்டாடுனாங்க. அதைப் பார்த்துட்டு, அந்த ராம்போ மோகத்த வச்சு ராம்போ காமிக்ஸ 1987 ஜனவரில வெளியிட்டது ஒரு சிவகாசி நிறுவனம்.
கிச்சு: இதுல என்ன தப்பு? பாப்புலரா இருக்குற ஒரு ஹீரோவ வச்சி காமிக்ஸ் போட்டா, அது தப்பா?
விச்சு: ராம்போ காமிக்ஸ, ரைட்ஸ் வாங்கி தமிழ்ல போட்டிருந்தா சரி. ஆனா, அப்படிப் பண்ணலியே?
கிச்சு: இன்னா பண்ணாங்க?
விச்சு: லண்டன்லருந்து வந்த கிரஞ்ச் அப்டின்ற காமிக்ஸ்ல பியர் பா ஜே அப்டின்ற செவ்விந்தியரை வச்சி ஒரு காமிக்ஸ் தொடர் வந்துச்சி. அதுல அவர் ஒரு தொழில்முறை வேட்டைக்காரர். அதாவது, ஆளுங்கள வேட்டையாடுபவர். அவருக்கு விபூதி அடிச்சு, ஜான் ராம்போன்னு பேர் வச்சி, பல மாசமா விளம்பரப்படுத்தி நாமம் போட்டாங்க.
கிச்சு: ஏம்பா, வேற லேங்க்வேஜ்ல இருந்து மொழி மாத்தி காமிக்ஸ் போடும்போது, பேர மாத்துறதுல இன்னா தப்பு?
விச்சு: ராம்போங்கிறது ஒரு ட்ரேட்மார்க். அந்த உரிமை இப்போ ஸ்டாலன் கிட்ட இருக்கு. அவரு, 1989-ல ராம்போ படத்தோட மூணாவது பாகம் வந்தப்ப Blackthorne-ங்கிற பப்ளிஷர் மூலமா காமிக்ஸ் கொண்டுவந்தார். அது மட்டும்தான் ராம்போவோட அஃபிஷியல் காமிக்ஸ்.
கிச்சு: அப்ப ஏற்கெனவே தமிழ்ல பண்ணது தப்பா?
விச்சு: 2013-ல பிரபுதேவா ஒரு இந்திப் படம் எடுத்தாரு. அதோட பேரு என்னா தெரியுமா? R….. Rajkumar. படத்தோட பேரு முதல்ல, ராம்போ ராஜ்குமார்ன்னு தான் இருந்துச்சி. ஆனா, ராம்போன்ற பேர்ல காப்பிரைட் இருக்குறதால, லீகலா பிரச்சன வந்தது. வேற வழியில்லாம, படத்தோட பேரையே மாத்திட்டாங்க. இங்க என்னடான்னா, ஜான் ரேம்போ, வியட்நாம் யுத்த வீரன்னு சகலத்துலயும் அடிச்சி ஆடியிருக்காங்க.
கிச்சு: அப்படியா? நெசமாவா சொல்ற?
விச்சு: ஆமாம்பா. அந்த காமிக்ஸ வெளியிடும்போது, இன்னா வெளம்பரம் வந்துச்சு தெரியுமா? பல மாசமா ‘தமிழில் வருகிறார் ஜான் ரேம்போ’ன்னு மத்த காமிக்ஸ்ல எல்லாம் வெளம்பரம் பண்ணி, போஸ்டர் அடிச்சு, அடேங்கப்பா. முறையா ரைட்ஸ் வாங்கி கதய போடுறவன்கூட இவ்ளோ பில்டப் கொடுக்கமாட்டான்டா சாமி.
கிச்சு: ஓஹோ?
விச்சு: ஆமா. இப்படி காப்பிரைட் உரிமை இருக்குற ராம்போவை, சர்வசாதாரணமா தமிழ்ல வச்சி விளையாடி இருக்காங்களே, நீ சொன்னதுக்கு அப்புறம்தான்பா இது புரியுது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago