டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லியின் சாதனையை, இந்திய ஆல்ரவுண்டரும் முன்னாள் கேப்டனுமான கபில் தேவ் முறியடித்த நாள் இன்று (08-02-2023). நியூசிலாந்தின் ஆல் ரவுண்டர் ரிச்சர்ட் ஹேட்லி 1990ஆம் ஆண்டில் தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடினார். மொத்தம் 86 டெஸ்ட் போட்டிகளில் 431 விக்கெட்டுகளை வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் முதன் முறையாக 400 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையையும் அவரே படைத்திருந்தார்.
ஹேட்லியின் ஓய்வுக்குப் பிறகு அந்தச் சாதனை 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. அவருடைய சாதனையை இந்தியாவின் கபில்தேவ் முறியடித்தார். 1994இல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இலங்கை அணி இந்தியாவுக்கு வந்தது. பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிச்சர்ட் ஹேட்லியின் சாதனையை கபில்தேவ் சமன் செய்தார். அந்தத் தொடரின் கடைசிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி பேட்டிங் செய்தது. போட்டி தொடங்கி 64 நிமிடங்கள் கழித்து கபில்தேவ் வீசிய பந்தை இலங்கையின் ஹசன் திலகரத்னா அடித்தார். அந்தப் பந்து சஞ்சய் மஞ்சரேக்கரிடம் தஞ்சம் அடைந்தது.
அந்தத் தருணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 432 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தை கபில்தேவ் படைத்தார். இந்தச் சாதனையை 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி கபில் தேவ் படைத்தார். இந்த டெஸ்ட்டுக்குப் பிறகு கபில்தேவ் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடினார். 434 விக்கெட்டுகளை வீழ்த்திய கபில் தேவ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெற்றார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago