பிறந்தநாளுக்கு இவரிடம் ‘கேக்’கலாம்!

By பவானி மணியன்

நண்பர்களுக்குப் பிறந்தநாள் என்றால் காம்போ ஆஃபரில் கேக் + கோக் ஆர்டர் செய்வதுதான் எல்லோரின் வழக்கம். ஆனால் சென்னை வடபழனியைச் சேர்ந்த ஹம்சினிக்குத் தானே கேக் செய்து பரிசாகக் கொடுப்பதுதான் வழக்கமாம். தன்னை ஒரு குட்டித் தொழிலதிபர் என அறிமுகம் கொடுக்கும் ஹம்சினி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.காம் (சி.ஏ.) படித்து வருகிறார்.

மாலை நேரம் பீட்சா தயாரிப்பில் ஈடுபட்டிருந்தவருடன் பேசியதிலிருந்து…

“என் தாத்தாதான் முதல் வாடிக்கையாளர். எந்த புது கேக் முயற்சி செய்தாலும் முதலில் அவரிடம்தான் கமெண்ட் கேட்பேன். டி.வி.யில் வெளியாகும் சமையல் நிகழ்ச்சிகளைப் பார்த்து, வீட்டிலும் அந்த உணவு வகைகளையும் முயற்சி செய்தேன். என் தோழிதான் பிறந்தநாள் கேக் செய்து பாரேன் என்று என்னை ஊக்குவித்தாள். அதற்குப் பின்னர்தான் எல்லாம் மாறியது. யூ-டியூப்பில் வித்தியாசமான டிசைன்கள், சுவைகளில் எவ்வாறு கேக் செய்வது எனக் கற்றுக் கொண்டேன்!” என்பவர் பத்தாம் வகுப்பு முதலே பிறந்தநாள் கேக் செய்து நண்பர்களுக்குப் பரிசளித்து வருகிறார். ஆறாம் வகுப்புப் படிக்கும்போது பரிசாகக் கிடைத்த சமையல் புத்தகம் இவரின் சமையல் ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. அம்மாவிடம் கேட்டு ‘கேக் அவன்’ வாங்கியிருக்கிறார். அதிலிருந்து பிரெட் முதல் சின்னச் சின்ன கேக் தயாரிப்பைத் தொடங்கியிருக்கிறார் ஹம்சினி.

“கல்லூரிக்குச் செல்லத் தொடங்கியதும் நமக்குப் பிடித்த ஹாபியான கேக் தயாரிப்பை ஏன் தொழிலாக மாற்றக் கூடாது எனத் தோன்றியது. அதைத் தொடர்ந்துதான் கடந்த ஓராண்டாக கேக் தயாரித்து நண்பர்கள் மூலம் பர்த்டே, வெட்டிங் பார்ட்டிகளுக்கு விற்பனை செய்து வருகிறேன். கேக் தயாரிப்பில் ‘ஐசிங்’ மீதமானால் என் நண்பர்கள் வந்து வாங்கிச் சென்றுவிடுவார்கள். என் நண்பர்கள்தான் எனக்கு விளம்பரத் தூதுவர்கள். இப்போது நானும் ஒரு தொழில்முனைவோர் என்பதில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஏக மகிழ்ச்சி!” என்று கூறும் ஹம்சினி, ஒவ்வொரு மாதமும் தனக்குக் கிடைக்கும் வருமானத்தை சென்டிமென்டாக சேமித்துவருகிறாராம்.

“ஒரு கிலோவிலிருந்து என்னிடம் கேக் இருக்கிறது. படிப்புடன், இந்தத் தொழிலையும் செய்வது கொஞ்சம் சிரமமாகத் தோன்றினாலும், நம் வாடிக்கையாளரிடம் தெரியும் மகிழ்ச்சி, அதனைப் போக்கிவிடும். சிஏ முடித்து விட்டு, பிரான்ஸ், இத்தாலி போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று கேக், பேக்கரி உணவுகள் தயாரிப்பைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பெற்றோரிடம் அனுமதி கேட்டிருக்கிறேன். விரைவில் ஒரு பெரிய பேக்கரி தொடங்க வேண்டும் என்பதே என் குட்டி ஆசை” என்கிறார்.

ஸோ ஸ்வீட்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்