சேதி தெரியுமா?

By தொகுப்பு: மிது

நவ.27: ‘குவெம்பு ராஷ்டிரிய’ விருது தமிழ் எழுத்தாளர் இமையத்துக்கு அறிவிக்கப்பட்டது.

நவ.28: டெல்லியில் நடைபெற உள்ள 2023 குடியரசுத் தின விழாவில் தலைமை விருந்தினராக எகிப்து அதிபர் அப்தல் பதா எல்-சிசி பங்கேற்பார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்தது.

நவ.29: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராகத் தடகள முன்னாள் வீராங்கனை பி.டி. உஷா (58) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நவ.29: குரங்கு அம்மைக்கு ‘எம்-அம்மை’ என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. முந்தையபெயர் ஆப்பிரிக்காவில் கறுப்பினத்தவர்களை இழிவுப்படுத்தக்கூடும் என்பதால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நவ.30: அரியலூர் கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகமும் அரியலூர், பெரம்பலூரில் புதைபடிவப் பூங்காவும் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

டிச.1: குஜராத்தில் முதல்கட்டமாக 89 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 63.31 சதவீத வாக்குகள் பதிவாயின.

nடிச.1: தமிழ்நாட்டின் முதன்மை கணக்குத் தணிக்கையாளராக (சிஏஜி) சி. நெடுஞ்செழியன் பொறுப்பேற்றார்.

nடிச.1: சில்லறை பரிவர்த்தனையில் எண்வய நாணயத்தை (டிஜிட்டல் கரன்சி) இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது.

nடிச.2: ஜெர்மனி - கோஸ்டரிகா இடையேயான லீக் போட்டியில் பிரான்ஸைச் சேர்ந்த ஸ்டெபானி ஃப்ரபார்ட் நடுவராகச் செயல்பட்டார். இதன் மூலம் ஆடவர் உலகக் கோப்பையில் நடுவராகச் செயல்பட்ட முதல் பெண் என்கிற பெருமையைப் பெற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்