அழகிய சாலையில் அம்புபோல் விரையும் கார் நம்மை எளிதாக ஈர்த்துக்கொள்ளும் வசீகர வாகனம். கார்களின் கலரும் வசதியும் நம்மை இன்ப வெள்ளத்தில் மூழ்கடிக்கும். ஸ்டைலிஷான கார்களில் செல்லும் சுகமான பயணம் இதமான மயக்கத்தைத் தரும். சமீபத்தில் நிஸான் சன்னி ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமானது. இதே போல் மாருதி நிறுவனத்தின் ரிட்ஸ், எர்டிகா ஆகிய கார்களின் லிமிடெட் எடிஷன்களும் புழக்கத்தில் விடப்பட்டன.
உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை முன்னிட்டு செவ்ரோலெட் பீட் மாடலின் சிறப்பு மான்செஸ்டர் யுனைடெட் லிமிடெட் கார்களும் சந்தையில் வலம் வந்தன. ரெனால்டின் டஸ்டர் மாடலின் புது காரும், ஹுண்டாய் நிறுவனத்தில் க்ராண்ட் ஐ10-ல் எல்பிஜி காரும் அறிமுகமாயின. இந்நிலையில் மேலும் சில கார்கள் புழக்கத்தில் விடப்பட உள்ளன.
மெர்ஸிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ 45 ஏஎம்ஜி
2014-ன் தொடக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் இந்தியர்களின் கண்ணைப் பறிக்கும் வகையில் மெர்ஸிடிஸ் பென்ஸ் கார்கள் வரிசையில் வந்து நின்றன. இந்த மாடலின் சிஎல்ஏ 45 ஏஎம்ஜி ரக கார்கள் விரைவில் வெளிவர உள்ளன.
உலகத்திலேயே அதிக சக்திவாய்ந்த 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இந்த காரை இயக்கும். காரை ஸ்டார்ட் செய்த 4.6 வினாடிக்குள் நூறு கிலோ மீட்டர் வேகத்தை எட்ட முடியும். மேலும் மணிக்கு 250 கிமீ வேகம்வரை செல்ல முடியும். இந்த கார் ஜூலை 22-ல் வெளியாகியுள்ளது. இதன் விலை ரூ. 45 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா மொபிலியோ
மொபிலியோ பற்றி ஏற்கனவே தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. ரூ. 50 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்து புக்கிங்கும் நடைபெற்று வந்தது. அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் ஹோண்டா மொபிலியோ கடந்த 23 அன்று விற்பனைக்கு வந்துள்ளது. மாருதியின் எர்டிகா, செவ்ரோலெட்டின் என்ஜாய், நிஸான் எவாலியா, டோயோட்டாவின் இன்னோவா ஆகிய கார்களுக்குச் சவால் விடும் வகையில் இது இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
மைலேஜை பொறுத்தவரை, டீஸல் கார்கள் லிட்டருக்கு 24.2 கி.மீட்டரும், பெட்ரோல் கார்கள் 17.3 கி.மீட்டரும் தரும் என ஹோண்டோ நிறுவனம் கூறுகிறது. ஏழு பேர் அமரும் வசதிகொண்ட இந்த எம்.பி.வி. காரின் விலை ரூ. எட்டு முதல் 11 லட்சம்.
பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஆக்டிவ் ஹைபிரிட்
பிரதமர் பயன்படுத்தும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மாடல் காரின் மேம்பட்ட தயாரிப்பான ஆக்டிவ் ஹைபிரிட் ரக கார் ஜூலை 23 அன்று அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் ஓடும் பிஎம்டபிள்யூ கார்களில் அதிக விலை கொண்ட கார் இது என்கிறார்கள். சக்தி வாய்ந்த இன்ஜின் இதில் உள்ளதால் காரை ஸ்டார்ட் செய்த 5.7 விநாடிக்குள் நூறு கிலோமீட்டர் வேகத்தை எட்டிவிடலாம். இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 250 கிலோமீட்டர். ஒரு லிட்டர் பெட்ரோலில் 14.7 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago