புறப்படும் புதிய இசை 9: விளையாட்டுப் பிள்ளை அல்ல!

By ம.சுசித்ரா

திடீரென எல்லாமே மறந்துபோன நிலையில் இருக்கும் அவருக்கு விடிந்தால் காதலியுடன் கல்யாணம். காதலியின் முகம் பார்த்ததும் கடந்த காலம் நினைவுக்கு வந்துவிடும் என்கிற எண்ணத்தில் கல்யாண மாப்பிள்ளையை மேடை ஏற்றுகிறார்கள் நண்பர்கள்.

“பொண்ண திரும்பிப் பாருடா…” என நண்பன் சொல்ல அத்தனை பேரும் படபடப்போடு அடுத்து என்னவாகப்போகிறது என உறைந்துபோய்ப் பார்க்கிறோம். காதலனும் காதலியும் நெருக்கமாகக் கண்ணோடு கண் பார்க்க, “ப்ப்பா…யாருடா இந்தப் பொண்ணு பேய் மாதிரி இருக்கு மேக்கப்போட்டுகிட்டு” என அலறுகிறார் கதாநாயகன். இதில் கதைக்கு அடுத்தபடியாகப் பின்னணி இசைதான் கதாநாயகன்.

முதலில் பதற்றம், படபடப்பு, இறுக்கத்தைப் பதியவைக்கிறது இசை. கதாநாயகன், “ப்ப்பா…” எனச் சொன்னதும் ஒட்டுமொத்தப் படமும் நகைச்சுவையில் வெடிக்கிறது. அதை லாவகமாகச் செய்கிறது பின்னணியிசை. இப்படி ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ படத்துக்குப் பின்னணி இசையமைத்து முன்னணிக்கு வந்தார் இசையமைப்பாளர் சித்தார்த் விபின்.

அடுத்து, அவர் இசையமைத்த ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?’ படத்தில் மூன்றே பாடல்கள் என்றாலும் குத்து, கானா, ரொமான்ஸ் என அசத்தினார். சுமார் மூஞ்சி குமாரு, குமுதா, அண்ணாச்சி என ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தீம் மியூசிக் கொடுத்துப் பின்னணி இசையிலும் அடித்து நொறுக்கினார்.

அடுத்து, ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என அடுத்தடுத்து நகைச்சுவைப் படங்களுக்கு இசையமைத்தாலும் வழக்கமான நகைச்சுவைப் படங்களின் ஒலிகளை முடிந்தவரை தவிர்த்துவிட்டுப் புதிய இசை அம்சங்களைத் தருகிறார் சித்தார்த் விபின்.

அடுத்து, அவர் இசையமைத்த ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?’ படத்தில் மூன்றே பாடல்கள் என்றாலும் குத்து, கானா, ரொமான்ஸ் என அசத்தினார். சுமார் மூஞ்சி குமாரு, குமுதா, அண்ணாச்சி என ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தீம் மியூசிக் கொடுத்துப் பின்னணி இசையிலும் அடித்து நொறுக்கினார்.

அடுத்து, ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என அடுத்தடுத்து நகைச்சுவைப் படங்களுக்கு இசையமைத்தாலும் வழக்கமான நகைச்சுவைப் படங்களின் ஒலிகளை முடிந்தவரை தவிர்த்துவிட்டுப் புதிய இசை அம்சங்களைத் தருகிறார் சித்தார்த் விபின்.

ஹாலிவுட்டில் சவுண்ட் எஃபக்ட்ஸ்

அம்மா ஊரான சேலத்தில் பிறந்து, அப்பாவின் சொந்த ஊரான கொச்சினில் வளர்ந்த சித்தார்த்தை, பெரியப்பா கர்னாடக சங்கீத வாய்ப்பாட்டில் சேர்த்துவிட்டார். அப்பாவுக்குச் சவுதி அரேபியா ரியாதில் வேலை மாற்றம் ஆன பின்னர் ஆசிரியர் மோசஸிடம் பியானோ கற்றுக்கொண்டார். பிறகு சென்னையில் சவுண்ட் இன்ஜினியரிங் கற்றார்.

“குரல் டப்பிங், பாடல் பதிவு, பின்னணி இசையில் சவுண்ட் எஃபக்ட்ஸைச் சமன்படுத்துவது எனக் கிட்டத்தட்ட 50 முதல் 60 விதமான சவுண்ட் இன்ஜினியரிங் வேலைகள் இருக்கின்றன. இதில் மியூஸிக் சவுண்ட் இன்ஜினியரிங்கையும் சவுண்ட் எஃபக்ட்ஸையும் தேர்ந்தெடுத்துச் சிறப்புப் பயிற்சி பெற்றேன்.

இறுதியாண்டு படிக்கும்போதே என்னுடைய சீனியரும் நண்பருமான குணால் மூலமாக ஹாலிவுட் படங்களுக்கு சவுண்ட் எஃபக்ட்ஸ் செய்யும் வாய்ப்பு கிடைத்தது” என்கிறார் சித்தார்த் விபின். 2007-ல் சென்னையில் இருந்துகொண்டே பிரபல ஹாலிவுட் நடிகர் ரஸ்ஸல் குரோ நடித்த ‘3.10 டூ யூமா’ , வால்ட் டிஸ்னியின் ‘அண்டர் டாக்’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களுக்கு சவுண்ட் எஃபக்ட்ஸ் செய்தார்.

அசல் ஏகே 47 சத்தம்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் படுகொலை சம்பவத்தை அடிப்படையாக வைத்து மலையாளத்தில் மேஜர் ரவி இயக்கிய ‘மிஷன் 90 டேஸ்’ படத்துக்குச் சவுண்ட் எஃபக்ட்ஸ் செய்து தரும் வாய்ப்பு அடுத்து வந்தது.

“ஹாலிவுட் படங்களுக்காக நான் பதிவுசெய்திருந்த அசல் துப்பாக்கிச் சத்தங்களைக் கேட்டு அசந்துபோனார் இயக்குநர். இந்தப் படத்துக்கும் அசலான துப்பாக்கி ஒலிகள் வேண்டுமென புது டெல்லி பிளாக் கேட் (Black Cat) கமாண்டோ ஹெட்குவார்ட்டர்ஸுக்குச் சென்று ஏகே 47, எம்பி 5, கைத்துப்பாக்கி, துப்பாக்கி ஆகியவற்றின் சத்தங்களை நேரடியாகப் பதிவுசெய்தேன்” என்கிறார். அந்தப் படத்தில் ராஜிவ் காந்தியாகவும் சித்தார்த்தே நடித்துத் திரையில் முதன்முதலில் தோன்றினார்.

தொடர்ந்து, தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் விளம்பரப் படங்களுக்கு இசையமைத்தார். 2008-ல் மேஜர் ரவி இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘குருஷேக்த்திரா’வில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

அடுத்து 2012-ல் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இடம்பிடித்தார். 2015-ல் வெளியான ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படம் வந்த வேகத்தில் போனதால் சித்தார்த் முற்றிலும் வேறு விதமாக அப்படத்துக்குத் தந்திருந்த பின்னணி இசை கவனிக்கப் படாமல்போனது.

சில மாதங்களுக்கு முன்னால் வெளியான ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்துக்கும் தேவையான திகில் இசையைக் கொடுத்திருந்தார். அப்பாவித்தனம் நிரம்பி வழியும் அவர் உருவத்தைத் திரையிலும் பார்த்து நாம் சிரிக்கிறோம். பின்னணி இசையமைக்க நடிப்பு கைகொடுக்கிறது என்றே அவர் சொல்கிறார்.

தொழில்நுட்பம் இரண்டாம்பட்சம்தான்

சினிமா டிஜிட்டலாக மாறிய பிறகு, ஒரு இசையமைப்பாளரிடம் உதவியாளராகப் பல ஆண்டுகள் வேலைபார்த்து வித்தையைக் கற்றுக்கொள்ளும் காலம் போய்விட்டது. குறும்படங்களையும், இசை ஆல்பங்களையும் சொந்தமாகத் தயாரித்து யூடியூபில் வெளியிடுகிறார்கள். அது வைரலாகும்போது வாய்ப்பு தேடி வருகிறது. சித்தார்த்தோ சவுண்ட் எஃபக்ட்ஸ் செய்து தன் இசை திறனை அறியச் செய்தவர்.

என்னமாதிரியான இசை பாணியில் இசையமைக்க விருப்பம் எனக் கேட்டபோது, அதைத் தீர்மானிப்பது திரைக்கதைதான் என்கிறார்.

தற்போது சுந்தர்.சி.யின் உதவி இயக்குநர் வெங்கட்ராகவன் இயக்கும் ‘முத்துன கத்திரிக்காய்’ படத்துக்கு இசையமைத்துக்கொண்டிருக்கிறார் சித்தார்த். “திருநெல்வேலி மண் மணம் வீசும் இசையை இதில் கொண்டு வரத் தப்பட்டை, தவில், கஞ்சிரா, வயலின், புல்லாங்குழல் போன்ற பாரம்பரிய இசைக் கருவிகளைப் பயன்படுத்துகிறேன்.

அதே நேரத்தில் அவற்றின் ஒலியைப் படைப்பதில் என்ன புதுமை சாத்தியம் என்பதையும் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.” என்கிறார்.

சவுண்ட் இன்ஜினியரிங் தெரிந்திருந்தால் டிஜிட்டல் இசையை முடிந்தவரை சிறப்பாகத் தயாரிக்க முடியும். இந்த மைக்கைப் பயன்படுத்தினால் இப்படியாகத் தரம் வரும் என்பதைக் கணிக்க முடியும்.

அதே நேரத்தில் உலகத் தரம் வாய்ந்த மைக் வைத்து அசத்தலான சவுண்ட் ரெக்கார்டிங் செய்தாலும் பாட்டின் அடிப்படை இசை மோசமாக இருந்தால் எதுவும் செய்ய முடியாது. தொழில்நுட்பம் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். அடிநாதம் இசைதான் என்பதை ஆழமாக நம்புகிறார் இந்த இளைஞர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்