மனதுக்கு இல்லை வயது! 14-04-14

By இராம.சீனிவாசன்

ஓய்வூதியம் போன்ற தொடர்ச்சியான மாத வருவாய் பெறும் முதியவர்கள் மிகக் குறைவு. தொடர்ச்சியான, நிலையான வருமானம் இல்லாததால்தான் அவர்களது பொருளாதாரச் சுமை அதிகரிக்கிறது. அசையாச் சொத்துகள் இருந்தும் நிலையான வருமானம் இல்லாமல் பல முதியவர்கள் துன்பப்படுகின்றனர்.

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின்படி தமிழகத்தில் 60 வயதைக் கடந்தவர்கள் எண்ணிக்கை 62 லட்சம். இதில் ஆண்கள் 30 லட்சம்; பெண்கள் 32 லட்சம். வறுமைக்கோட்டின் கீழ் முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை பிப்ரவரி 2013 வரை 13.4 லட்சம் பேர்தான்.

இந்த ஓய்வூதியம் பெற 65 வயதைக் கடந்திருக்கவேண்டும் என்ற அடிப்படையில் பார்த்தால்கூட, 47 லட்சம் முதியவர்களில் 28 சதவீதம் பேர் மட்டுமே முதியோர் ஓய்வூதியம் பெறுகின்றனர். அதாவது, நான்கில் ஒருவருக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆக, நாம் செய்யவேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

2011-12ம் ஆண்டில் தமிழகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள் 16 சதவீதம் பேர் (59 லட்சம்) என்கிறது மத்திய திட்டக் குழு. எனவே, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களில் பெரும்பாலானோர் முதியவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு. அவர்களது பொருளாதாரச் சுமையை நீக்குவது சமூகத்தின் கடமை.

வயதானோர் ஓய்வூதியத் திட்டம் ஒன்றை தமிழக அரசு செயல்படுத்துகிறது. இந்த திட்டம் 1995-ல் ஆரம்பமானபோது, மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.200 என மாதத்துக்கு ரூ.400 ஓய்வூதியமாக அளித்தன. இந்த தொகை பின்னர் ரூ.500 ஆகவும், 2011-ம் ஆண்டு முதல் ரூ.1000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 65 வயதைக் கடந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தவிர, ஆதரவற்றோர், கணவனை இழந்தோர், கணவனால் கைவிடப்பட்டோருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலர் மூலமும், உள்ளாட்சி அமைப்புகள் மூலமும் இதைப் பெற விண்ணப் பிக்கலாம். இதற்கு பிறப்புச் சான்றிதழ் அல்லது வயதுச் சான்றிதழ், புகைப்பட அடையாள அட்டை, இருப்பிடச் சான்றிதழ் தேவை. நேரடியாக வீட்டில் ஓய்வூதியத்தைப் பெற விரும்புவோர் தபால் மூலம் பணம் வழங்கக்கோரி விண்ணப்பிக்கலாம். இப்போது வங்கி முகவர்கள் மூலம் நேரடியாக பயனாளிகளுக்கு வழங்க சில கோட்டங்களில் சோதனை முயற்சிகள் நடக்கின்றன.

இதற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதற்குத் தேவையான சான்றிதழ்களைப் பெறுவதில் முதியோருக்கு சிரமங்கள் உள்ளன. வாரிசுகள், சுற்றத்தார், தொண்டு நிறுவனங்கள்தான் இதற்கு உதவ வேண்டும். பயனாளிகளுக்கு ஓய்வூதியம் முழுமையாக சென்றடைவதும் உறுதி செய்யப்படவேண்டும். ஓய்வூதியம் பெறும் அல்லது பெற விண்ணப்பிக்கும் முதியவரிடம் கையூட்டு வாங்கும் கொடுமை நிற்கவேண்டும்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்