சேதி தெரியுமா?

By தொகுப்பு: மிது

பிப்.28: ‘செபி’ என்றழைக்கப்படும் இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் முதல் பெண் தலைவராக மாதவி புரி நியமிக்கப்பட்டார்.

மார்ச் 1: உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நடைபெறும் நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கான விண்ணப்பத்தில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஸெலென்ஸ்கி கையெழுத்திட்டார்.

மார்ச் 2: அரசுப் பணி நியமனங்களில் மூன்றாம் பாலினத்தவருக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மார்ச் 3: போர் நடைபெறும் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க வசதியாக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம். அப்துல்லா, எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் அடங்கிய குழுவைத் தமிழக அரசு நியமித்தது.

மார்ச் 4: தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பாலான பதவிகளை திமுக கூட்டணி வென்றது.

மார்ச் 4: ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்ன் (52) தாய்லாந்தில் தங்கியிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார். 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வார்ன் 708 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். டெஸ்ட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பவர்.

மார்ச் 5: மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அமன் லேகி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரின் ரிஜிஜுவுக்கு அனுப்பினார்.

மார்ச் 5: மணிப்பூரில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் 86.01 சதவீத வாக்குகள் பதிவாயின.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்