ஜன.22: த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகா் சூா்யா நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஆஸ்கா் விருதுக்கான தகுதிப் பட்டியலில் இடம்பெற்றது.
ஜன.23: தமிழக அரசின் தொல்லியல் துறையின் முதல் இயக்குநராகப் பணி யாற்றியவரும் முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளருமான நாகசாமி (92) காலமானார்.
ஜன.23: லக்னோவில் நடைபெற்ற சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடரின் ஒற்றையர் பட்டத்தை இந்தியாவின் பி.வி. சிந்து வென்றார்.
ஜன.24: 1945இல் இரண்டாம் உலகப் போரின்போது மாயமான அமெரிக்க விமானம் இமயமலைப் பகுதியில் அமெரிக்க மலையேற்ற சாகச வீரர் கிளேட்டன் குக்லெஸ் தலைமையில் கண்டறியப்பட்டது.
ஜன.25: தமிழகத்தைச் சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியம் (இலக்கியம், கல்வி); எஸ்.தாமோதரன் (சமூக சேவை); வீ. சேஷையா (மருத்துவம்), ஏ.கே.சி. நடராஜன், முத்துக்கண்ணம்மாள், சவுகார் ஜானகி, எச்.பல்லேஷ் பஜந்திரி (கலை) ஆகியோர் 2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
ஜன.26: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 அன்று நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஜன.27: டாடா குழுமத்திடம் ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு அதிகாரபூர்வமாக ஒப்படைத்தது. முன்னதாக ரூ. 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியது.
ஜன.27: 1964ஆம் ஆண்டில் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணிக்கு கேப்டனாக இருந்து தங்கப் பதக்கம் வென்ற சரண்ஜித் சிங் (90) காலமானார்.
ஜன.28: மத்திய நிதி அமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக ஆனந்த் நாகேஸ்வரனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
ஜன.29: இந்தியாவிடமிருந்து முதன்முறையாக பிரமோஸ் ஏவுகணையை 375 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் பிலிப்பைன்ஸ் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago