விடைபெறும் 2021
சமீபத்திய வரலாற்றில் 2021 ஒரு வித்தியாசமான ஆண்டு. 2020 மார்ச்சில் தீவிரமடைந்த கரோனா பெருந்தொற்று அலையலையாகப் பரவிக்கொண்டிருப்பதை பார்த்தபடி விடிந்தது இந்த ஆண்டு. அதனால் ஏற்பட்ட மரணங்கள், பணி இழப்புகள், பணி சுணக்கங்கள், உலகளாவிய விநியோக சங்கிலி பாதிப்புகள் எல்லைகளைத் தாண்டி எல்லோரையும் உலுக்கிப்போட்டது. இருப்பினும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க மைல்கற்களையும் இந்த ஆண்டு கடந்திருப்பது வியக்கத்தக்கது. அதில் சிலவற்றைக் கதைப்போம்.
பெயர் மாற்றம்
ஃபேஸ்புக் நிறுவனம் தனது பெயரை ‘மெட்டா’ என இந்த ஆண்டு அக்டோபரில் மாற்றிக் கொண்டது. சமூக வலைத்தள தொழில்நுட்பத்தைத் தாண்டி, வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம், ஆக்குலஸ் போன்ற தொழில்நுட்பங்களை தன் கையில் வைத்திருக்கும் ஃபேஸ்புக் பெயரை மாற்றிக்கொண்டதில் வியப்பில்லை.
ஆனால், ‘மெட்டா’ என அந்நிறுவனம் தேர்ந்தெடுத்த பெயர் கவனத்தை ஈர்த்தது. கணினி, அலைபேசி, இணையத்தில் இணைக்கப்பட்டிருக்கும் பிற சாதனங்களால் உருவாக்கப்படும் மெய் நிகர் (Virtual Reality) வடிவங்கள் நிஜ மனிதர்களால் இயக்கப்படும் வடிவமைப்புக்குத்தான் ‘மெட்டா’ எனப் பொருள். மெய்நிகர் வடிவமைப்பும், அது சார்ந்த வணிக வாய்ப்புகளும் மிகப் பெரிதாக வரப்போகிறது என்பது ஒருபுறமிருக்க, ‘மெட்டா’ நிறுவனத்தின் ‘Quest’ தொழில்நுட்பத்தில் இருக்கும் பல விளையாட்டுகளில் பாலியல் சீண்டல்கள் இருக்கின்றன என்கிற புகார் சமீபத்தில் எழுந்திருப்பது, மெய்நிகர் உலகிலும் பாதுகாப்பு அவசியம் என்பதை அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறது இது.
செயற்கை அறிவு
செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) நடைமுறை வாழ்க்கையில் பயனுள்ளதாக இன்னும் மாறவில்லை. யூடியூபில் வீடியோக்களைப் பார்க்கும்போது, நம் ஆர்வம் மற்றும் விருப்பங்களைப் புரிந்துகொண்டு அது போன்ற வீடியோக்களைப் பரிந்துரைக்கும் இயந்திரக்கற்றல் என்ற செயற்கை நுண்ணறிவு நேரம் விரயமாகாமல் தவிர்க்க உதவுகிறது என்றாலும் மிகப்பெரிய பயனுள்ள தொழில்நுட்பம் என சொல்ல முடியாது.
என்றாலும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி நடைமுறையில் உதவும் சில தொழில்நுட்பங்கள் இந்த ஆண்டில் வரத்தொடங்கின. உதாரணமாக, GPT-Generative Pre-trained Transformer. இத்தொழில்நுட்பத்தின் அடிப்படை இதுதான். உலக இலக்கியம் தொடங்கி சமூக ஊடக உரையாடல் வழக்கு மொழி வரை மனிதர்களால் உருவாக்கப்பட்ட கோடிக்கணக்கான வார்த்தைகள், வாக்கியங்கள் சேகரிக்கப்பட்ட பெட்டகம் ஒன்றை உருவாக்கி, ரத்ன சுருக்கமாக அதிலிருந்து முழுக்கட்டுரை, திரைக்கதையைக்கூட தானாக எழுதும் வலிமை இத்தொழில்நுட்பத்துக்கு உண்டு.
வார்த்தைகளுக்கு ஓவியம்
வார்த்தைகளையும், வாக்கியங் களையும் படிக்கும் போது அவற்றை நம் மூளை காட்சிப்படுத்திக் கொள்கிறது. எழுதப்படும் வார்த்தைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப ஓவியம் அல்லது இசை போன்ற கலை வடிவத்தை கொண்டு வர முடியுமா என்பதுசெயற்கை அறிவியல் ஆராய்ச்சி யாளர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு பகுதி. ‘செயற்கை கலை’ (Synthetic Art) என அழைக்கப்படும் செயற்கை அறிவு தொழில்நுட்பங்கள் இந்தாண்டில் வரத்தொடங்கியிருக்கின்றன. இப்பிரிவில் குறிப்பிடத்தக்க ஒரு அலைமென்செயலி - WOMBO Dream. ஆப்பிள், ஆண்ட்ராய்டு அலைபேசிகள் இரண்டிலும் தரவிறக்கிக் கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும் இத்தொழில்நுட்பம்,பயனீட்டாளரிடமிருந்து சில வார்த்தைகளை வாங்கிக்கொண்டு அதற்குப் பொருந்தும் வகையில் ஓவியத்தை வரைந்து கொடுக்கிறது. ஆர்வமிருந்தால் https://www.wombo.art/ வலைத்தளத்தைப் பாருங்கள்.
பேட்டரி பவர்
அலைபேசியில் தொடங்கி மின்சாரத்தால் மட்டுமே இயங்கும் டெஸ்லா கார் வரை கொண்டிருக்கும் மிக முக்கிய சாதனம், ரீசார்ஜ் செய்யும் வலிமை கொண்ட பேட்டரி. லித்தியம்-அயன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பேட்டரிகள்தான் இதுவரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
என்றாலும், மேம்படுத்தப்பட்ட பேட்டரி தொழில்நுட்பத்துக்கான தேவை தொடர்ந்து இருந்துவருகிறது. இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இந்தாண்டில் நடந்திருக்கிறது. லித்தியம்-மெட்டல் எனப் பெயரிடப்பட்ட தொழில்நுட்பம் இப்போதிருப்பதைவிட பல மடங்கு அதிகமாக மின்சாரத்தை சேமிக்கவும், பல மடங்கு குறைந்த நேரத்தில் ரீசார்ஜ் செய்யவும் முடியும் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர, குவாண்ட கணினியியல், 5G, தொடர்சங்கிலியில் உருவாக்கப்படும் NFT டோக்கன்கள் எனப் பல தொடர்முன்னேற்றத் தொழில்நுட்பங்களை 2021 கண்டிருக்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago