இளைஞர்கள் மத்தியில் ‘டப்ஸ்மாஷ்' மிகவும் பிரபலம். அவ்வப்போது வடிவேலுவின் வசனங்கள், டி.ராஜேந்தர் வசனங்கள் என பலரும் யூ-டியூப் தளத்தில் பதிவேற்றி வருகிறார்கள். சமூக வலைத்தளத்தில் அனைத்துத் தரப்பினரும் இவர் எப்போது தனது டப்ஸ்மாஷ் வெளியிடுவார் என்று ஆவலோடு எதிர்பார்பார்க்கப்படும் ‘பெர்சனாலிட்டி' தார்மீக் லீ!
தார்மீக் லீ பண்ணும் டப்ஸ்மாஷ்களின் தனித்துவம் என்னவென்றால் நீளமான வசனங்களைச் சிறிது சிறிதாக வசனத்திற்கு ஏற்றுவாறு வெவ்வேறு பாணியில் பதிவேற்றி இருக்கிறார். அவை அத்தனைக்கும் இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
தார்மீக் லீ-யை தொலைபேசியில் அழைத்தால் ‘கணேஷ்குமார் பேசுறேன் சார்' என்று முதலிலேயே ஷாக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து அவர் கூறிய பதில்கள் அனைத்துமே அவ்வளவு சுவாரஸ்யம்.
“கணேஷூக்கு சம்ஸ்கிருத மொழியில் தார்மீக் என்று போட்டிருந்தது. உடற்பயிற்சி கூடத்தில் என்னுடைய நண்பர்கள் அனைவருமே என்னை லீ என்று அழைப்பார்கள். புரூஸ் லீ, ஜெட் லீங்கிற மாதிரி, கேட்கக் கொஞ்சம் ‘ஹாலிவுட்' ஸ்டைல்ல இருந்ததால தார்மீக் லீ ஆனேன். அதே பேருல ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணியாச்சு.
காரைக்குடி சொந்த ஊர். இப்போது திண்டுக்கல்ல இருக்கேன். எம்.பி.ஏ படிக்கிறேன். காலேஜ் போயிட்டு வந்தவுடன் சாயங்காலம் கொஞ்ச நேரம் கிடைக்கும். அந்த நேரத்துல பண்ணிய டப்ஸ்மாஷ்கள்தான் இவை.
போன வருஷம் என்னுடைய சித்தி பசங்களோட ‘ஏதோ டப்ஸ்மாஷ்னு வந்திருக்கு, என்னன்னு பார்ப்போம்'னு மூணு பேரும் சேர்ந்து பண்ணினோம். நல்ல வரவேற்பு கிடைச்சுது. அப்புறம், இணையத்தில் நிறைய ‘மீம்ஸ்' அப்பப்போ ஆயிரக்கணக்குல ‘லைக்ஸ்' அள்ளும். அதையெல்லாம் வெச்சு டப்ஸ்மாஷ் பண்ண ஆரம்பிச்சேன்.
எல்லாத்துக்குமே நானேதான் நடிப்பு ப்ளஸ் எடிட்டிங். டி.வி.யில வர்ற சில நிகழ்ச்சிகள், வடிவேலு வசனங்கள், டி.ஆர் வசனங்கள்னு தொடர்ச்சியா பண்ணிட்டிருக்கேன். இணையத்தில் வெளியானவுடன் நிறைய பேர் ரசிக்க ஆரம்பிச்சாங்க. சில டப்ஸ்மாஷுக்கு 'சூப்பர்'னு லைக்ஸ் வரும். சிலதுக்கு கண்டபடி திட்டி கமென்ட்ஸ் போடுவாங்க. என்ன காரணத்துக்காகத் திட்டுறாங்கன்னு பார்த்துட்டு அடுத்த டப்ஸ்மாஷில் திருத்திக்குவேன்.
பாராட்டி வரும் கருத்துகள்ல பெரும்பாலானவை 'உங்க முகபாவனை அருமை'ன்னு சொல்வாங்க. சந்தோஷமா இருக்கும். 'டபுள் ஆக்டிங்' டப்ஸ்மாஷ் பண்ணுவதுதான் கொஞ்சம் கஷ்டம். நிறைய டேக் வாங்கி, அனைத்தையும் ஒன்னா இணைக்குறதுக்குக் குறைஞ்சது ஒன்றரை மணி நேரமாகும்.
'நானும் ரவுடிதான்' படத்துல ஆர்.ஜே.பாலாஜி சார் பேசுற வசனத்தை டப்ஸ்மாஷ் பண்ணி வெளியிட்டேன். அதை அவர் அவருடைய ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில பகிர்ந்திருக்கார்னு தெரிஞ்சப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு" என்று நெகிழ்ந்தவரிடம், "இதெல்லாம் வீட்ல இருக்குறவங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டதற்கு, அவரிடமிருந்து வந்தது 'பாஸிட்டிவ்' பதில்.
"சார். நான் பண்ணுற டப்ஸ்மாஷ்களுக்கு 'சூப்பரா இருக்குடா'ன்னு வர்ற முதல் பாராட்டு எங்க அம்மாகிட்ட இருந்துதான் வரும். என்னுடைய அக்கா, அண்ணன் எல்லார்கிட்டயும் காட்டுவாங்க" என்றார்.
"எனக்கு சினி ஃபீல்டுல இருந்து யாரும் வாழ்த்துச் சொன்னதில்லை. ஆனா எனக்கு அங்க வொர்க் பண்ணனும்னு ஆசை இருக்கு. தொழில்நுட்ப ரீதியா இருந்தாலும் சரி, நடிப்பு என்றாலும் சரி. நான் ரெடி. நம்முடைய திறமையை வெளிப்படுத்த இப்போது டப்ஸ்மாஷ்தான் எனக்கு ஒரே வழி. திரையுலக வாய்ப்பு கிடைச்சா அங்கேயும் நல்லா ‘ஷைன்' பண்ணுவேன் சார்" என்றார் நம்பிக்கையோடு.
இவருடைய டப்ஸ்மாஷ் விளையாட்டுகளைக் கண்டு ரசிக்க இங்கே சொடுக்கவும்: >https://www.facebook.com/dharmiklee/videos
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago