ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றவர்களில் தமிழ்நாடு இந்த முறை பெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறார்கள். தடகளம், துப்பாக்கிச் சுடுதல், வாள்வீச்சு, பாய்மரப் படகு, டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளில் தமிழர்கள் களம் இறங்குகின்றனர். டேபிள் டென்னிஸ் போட்டியில் இரு ஆடவர்கள், இரு மகளிர் என நால்வர் பங்கேற்க இருக்கிறார்கள். இதில் ஆடவர்கள் இருவருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள், சென்னையைச் சேர்ந்த சரத் கமல், சத்யன் ஞானசேகரன்.
சரத் கமல்
38 வயதான சரத் கமல், 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியிலேயே பங்கேற்றவர். ஒன்பது முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற ஒரே வீரர். 2006 (மெல்போர்ன்), 2010 (டெல்லி), 2018 (கோல்டு கோஸ்ட்) என மூன்று காமன்வெல்த் போட்டிகளில் நான்கு தங்கம் ஒரு வெள்ளி, மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றவர் சரத் கமல். 2018 ஜகார்தா ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இரண்டு வெண்கலப் பதக்கங்களைத் தட்டிவந்தார். டேபிள் டென்னிஸ் போட்டியில் தேர்ந்த அனுபவம் உள்ள சரத் கமல், இந்த முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்
சத்யன் ஞானசேகரன்
சரத் கமலைவிடப் பத்து வயது இளையவர் சத்யன் ஞானசேகரன். 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் முறையே பெல்ஜியம், ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச டேபிள் டென்னிஸ் சேலஞ்ச் போட்டியில் தங்கம் வென்றவர். 2018 கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் தட்டியவர். மேலும் காமன்வெல்த், ஆசிய விளையாட்டு, சர்வதேச டேபிள் டென்னிஸ் சேலஞ்ச் போட்டிகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களையும் வென்றிருக்கிறார். டேபிள் டென்னிஸ் விளையாட்டில் உலகத் தரவரிசைப் பட்டியலில் டாப்-25 இடங்களுக்குள் முன்னேறிய முதல் இந்திய வீரர் இவரே. இவரும் ஒலிம்பிக்கில் ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகுதி பெற்றது எப்படி?
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஆசிய ஒலிம்பிக் தகுதிப் போட்டிகள் கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்றன. இந்தத் தகுதிச் சுற்றில் சிறப்பாக விளையாடி இரு வெற்றிகளை ஈட்டினார் சத்யன். இதேபோல போட்டியின் முடிவில் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் சரத் கமல். இதன்மூலம் சரத் கமலும் சத்தியனும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இடத்தை உறுதிசெய்தனர். சத்யனுக்கு இதுதான் முதல் ஒலிம்பிக் போட்டி. சரத் கமல் ஒலிம்பிக் அனுபவசாலி.
ஒலிம்பிக் போட்டி
ஒலிம்பிக் போட்டியில் சரத் கமலும் சத்யன் ஞானசேகரனும் ஆடவர் ஒற்றையர் போட்டியில் தனித்தனியாகக் களம் காண்கின்றனர். தொடக்கப் போட்டிகளில் கவனம் செலுத்தி விளையாடினால், முத்திரை பதிக்க வாய்ப்பு உண்டு. கலப்பு இரட்டையர் பிரிவில் மணிகா பத்ராவுடன் சேர்ந்து மற்றொரு பிரிவிலும் சரத் கமல் களம் காண்கிறார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago