கிழிஞ்ச டிரெஸ்ஸுதான் ‘ஃபேஷன்!

By ஆர்.கார்த்திகா

ஆரம்ப காலங்களில் பேரலல், ஃபிளாட், டைட்ஸ், பெல்ஸ், பேகி, ஜீன்ஸ் என்று ஒரு சுற்று சுற்றி தற்போது பூட்கட் என மீண்டும் பெல்ஸ் காலத்துடன் அடுத்த ரவுண்டுக்குத் தயாராகி வருகிறது ஃபேஷன் உலகம்.

வேறு யாரையும்விட, இளைஞர்களையும் இளம் பெண்களையும் மனதில் கொண்டே ஃபேஷன் டிசைனர்கள் பல ‘அப்டேட்'களைச் செய்துவருகின்றனர்.

என்னதான் ‘கெத்து' காட்டும் புது ‘அப்டேட்' ஆக இருந்தாலும், கொஞ்ச காலத்துக்குப் பிறகு அது எல்லாமே ‘அவுட்டேட்'தானே. திரும்ப, கொசுவர்த்தி சுருளைச் சுத்தி அந்தக் கால ஸ்டைல், டிசைன், கலர் எல்லாம் இந்தக் கால டிரெண்டுக்கு ஏற்ப மாற்றப்பட்டு ‘புது ஃபேஷன்‘ என்ற பெயரோடு சந்தைக்கு வரும்.

இப்படி இருக்கும் ஃபேஷன் உலகில், நாம் அணியும் உடைகளில் எவ்வளவுதான் புதுசு புதுசான விஷயங்கள் வந்தாலும், என்றைக்கும் தன் இடத்தை விட்டுக்கொடுக்காமல் மக்கள் ‘இடையில்' நிற்பது ஜீன்ஸ்தான்!

காலத்துக்கு ஏற்ப ஜீன்ஸ் டிரெண்ட் மாறிக்கொண்டே போகும். ப்ளைன் ஜீன்ஸ், பாக்கட் ஜீன்ஸ், கார்கோ ஜீன்ஸ், ஷேடு ஜீன்ஸ் என பல வகைகள். இதில் அடுத்த வெர்ஷன் ‘டார்ன்' ஜீன்ஸ். ‘ஏடாகூட' இடங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் அங்கங்கே, கடைக்காரர்களே கிழித்துத் தருவதுதான் இதன் ஸ்பெஷல்!

பார்ப்பவர்களின் இன்ஸ்டன்ட் கேலிக்கு ஆளாக நேர்ந்தாலும், இளைஞர்கள் விரும்பி அணிய ஆரம்பித்துவிட்டதால் கிழிந்த ஜீன்ஸும் உலகப் பிரபலம் ஆகி வருகிறது. மற்றவர்களின் கிண்டலைப் பத்தி கவலைப்படாத நம் இளைஞர்கள், ஜீன்ஸ் பத்தி சொன்னா மட்டும் பொங்கி எழவா போகிறார்கள்?

"நமக்குப் பிடிச்சதை நாம பண்றோம். அவ்ளோதான். கமென்ட்ஸுக்கு பயந்தா மத்தவங்களுக்காக வாழுற மாதிரி ஆகிடும். ஃபேஷன்கிறது ஒரு பொழுதுபோக்கு.

வித்தியாசமா ட்ரெஸ் பண்றதுக்கு ஒரு தைரியம் வேணும். ஆரம்பத்துல ஃப்ரெண்ட்ஸ் கிண்டல் பண்ணத்தான் செய்வாங்க. அப்புறம், ‘இன்னிக்கு ஏன் வித்தியாசமா ட்ரெஸ் பண்ணலைன்னு கேட்க ஆரம்பிச்சிடுவாங்க. அங்கதான் நாம நிக்கிறோம். அப்புறம், அவங்களும் நம்மளை மாதிரியே கிழிஞ்ச ஜீன்ஸ் போட்டுட்டுத் திரிய ஆரம்பிச்சுடுவாங்க" என்கிறார் கல்லூரி மாணவர் நிர்மல்.

உங்களிடம் பழைய கிழியாத நார்மல் ஜீன்ஸ் இருந்தால், அதில் நீங்களே திறமையைக் காட்டி, ஜீன்ஸ் ஆக்கி ஃபேஷன் டிசைனர் அவதாரமும் எடுக்கலாம், டவுசர் போல சுருங்கிப் போயும் விடலாம்.

“‘ஹவ் டு மேக் யுவர் ரிப்டு ஜீன்ஸ்?' என்று கூகுள் பண்ணிப் பார்த்தால், வீடியோக்கள் வந்து கொட்டும். முழுக் கால் ஜீன்ஸை அது வெளுத்துப்போன பிறகு, அரைக்கால் ஜீன்ஸ் ஆக வெட்டிக்கொள்ளலாம். ஜீன்ஸ் என்னைக்கும் அழியாது. முதல்ல காலேஜுக்குப் போட்டுட்டுப் போன ஜீன்ஸ், ஒரு வருஷத்துக்கு அப்புறம் கார்டனிங், க்ளீனிங் வேலைகள் செய்யறதுக்கு யூஸ் ஆகும்” என்கிறார் நிர்மல்.

ஜூன்ஸுக்கு ஆண்களிடத்தில் மட்டுமல்ல, பெண்களிடத்திலும் செம ரெஸ்பான்ஸ்!

“ஜீன்ஸ் ரொம்ப வசதியான ட்ரெஸ். அதுல பல விதமான டிசைன்ஸ் இருக்கு. இடத்துக்கு ஏத்த மாதிரி டிரெஸ் பண்ணிக்கிறதுக்கு ஜீன்ஸ்தான் கைகொடுக்கும். ஜீன்ஸுடன் டி-சர்ட் இல்லன்னா - குர்த்தா போட்டுக்கிட்டா, ‘சப்பையா' இருக்குறவங்ககூட ‘ஸ்மார்ட்' ஆகிடுவாங்க.

நம்ம உடம்புக்கு ஏத்த மாதிரி, மனசுக்குப் பிடிச்ச மாதிரி ட்ரெஸ் பண்ணும்போது, அந்த நாளே ரொம்ப ‘ஸ்வீட்'டா இருக்கும். சரியான ட்ரெஸ் போடாத நாள்ல, அந்த நாளே ‘டல்'லாயிடும்” என்கிறார் கல்லூரி மாணவி ஜெருஷா.

ஆகவே மக்களே... இதனால சொல்ல வர்றது என்னன்னா, உட்கார்ந்து உங்க ஜீன்ஸை சும்மா ‘கிழி கிழி'ன்னு கிழிச்சுடுங்க!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்